திங்கள், 27 மார்ச், 2017

குறவர் வள்ளுவர் பனிக்கர் காணி இயக்கர் தொடர்பு இராவணன் நாஞ்சில்நாடு வேடுவர் சாதி

aathi tamil aathi1956@gmail.com

21/3/16
பெறுநர்: எனக்கு
Vino Vinoth
இலங்கையில் இரு இனக்குழுவினர் நாகர்,இயக்கர் என்னும் இரு மரபினர்கள்
சிங்கள ஆதிக்கத்தின் முன்னர் இருந்தனர் என வரலாறு கூறுகின்றது.
இதில் நாகர் என்போர் நாகரீகம் பொருந்தியவர்கள் என்றும் அவர்கள் வடக்கே அரசாண்டனர்.
தெற்கே இயக்கர் என்னும் தற்கால 'வேடாக்கள்' அரசாண்டனர்.
இவர்களை தான் அரக்கர் என புராணம் கூறுகின்றது.
இயக்கர் கோமான் தான் அரக்கனாக பாடப்பட்டது.
அரக்கர் வேறு அசுரர் வேறு.
 இயக்க,யக்கா,யக்ஷா என கூறுவர்,
இசக்கி அம்மன்(யக்ஷி மாதா) என கன்யாகுமரி போன்ற தென்னக பகுதிகளில்
வழிபடப்படும் தெய்வம் இன்று பல சமூகங்கள் வழிபட்டாலும் அன்று நாஞ்சில்
குறவனின் அன்னையாக வணங்கபட்டதாக கருதப்படுகின்றது.
மலையாள தேசங்களில் யக்ஷி என்றால் அழகு மயக்கும் நிறைந்தவள் என பொருள்.
இசக்கி அம்மன் வழிபாடு என்பது கூட குறத்தி அம்மன் வழிபாடுதான்.
இதே இனம் தான் இலங்கையில் இயக்கர்கள் என அரசாண்டவர்கள்.
இவர்கள் வழிவந்தவன் தான் இராவணன்,தமிழகத்தில் நாஞ்சில் குறவன் போன்றோர்,
நாஞ்சில் வள்ளுவன் எனவும் சங்க இலக்கியத்தில் அழைக்கபடுகின்றான்
இவனது நாடு வள்ளுவநாடு அல்லது நாஞ்சில் நாடாக இருந்தது.
இதே இயக்கர்கள் மாயா தந்திரங்களையும் நன்கு கற்றிருந்தனர்.
மலையாள பணிக்கர்கள், கானிக்காரர்கள், தாந்திரிகள் இவர்கள் அனைவரும்
இவர்கள் வழிவந்தவர்கள் தான்.
வள்ளுவன்,கனியர்கள் என்னும் ஜோதிடத்தில் சிறந்தவனும் இயக்கன் தான் மலையாள
தேசத்தில் ஈழவர் என்னும் ஈழத்துமன்னர்கள் என்போர் இந்த இயக்கர்கள்
வழிவந்தவர்களாக இருக்கின்றனர்.
இவர்களில் பலர் பணிக்கர்கள் என்றும் ஜோதிடத்திலும், மாயாவித்தைகளிலும்,
நரம்பு வர்மத்திலும் மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்களாக இன்றும் உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக