|
23/4/16
| |||
ஒரு டி.வி. சானல் வீரப்பன் கொன்றவை நூற்றுக்கணக்கான யானைகள் என்றது.
மற்றொரு சேனல் 1000 யானைகள் என்றும், இன்னொரு பத்திரிகை 2000 யானைகள்
என்றும் விதவிதமாகப் பேசின. இதையே நமது பெரிய மனிதர்களும் வரலாறு காணாத
அழிப்பு என்கின்றனர். என்ன ஆதாரம்?
1972 - 85 ஆண்டுகளுக்கிடையில் இந்திய யானைகளின் மொத்தத் தொகையே சுமார்
10000 தான். அவற்றில் தமிழ்நாட்டில் சுமார் 1500 மட்டுமே
இருந்திருக்கலாம். முதிர்ந்த பெண் யானைகள் 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்
இடைவெளிக்கு ஒருமுறைதான் ஒரு குட்டியீனும். எல்லாப் பெண்களும் ஒரே
நேரத்தில் குட்டிபோடாது. இப்போது கணக்கீடுகள் தானே வருகின்றதா? இருந்த
அந்த யானைகளில் ஆண் யானைகள் எவ்வளவு? இனப்பெருக்கத்திற்கு தகுதி,
பருவமுள்ள பெண்கள் எத்தனை இருந்திருக்கும்? அவற்றில் எத்தனை குட்டி
ஈன்றிருக்க முடியும்? இவற்றில் எத்தனை விழுக்காடு உயிரோடு வளரும்
வாய்ப்பைப் பெற்றிருக்க முடியும்? அங்கே எத்தனை தந்தம் கொண்ட யானைகள்
இருந்திருக்கும்? இத்தனைக்கும் மேலே தந்தம் திருடும் கொலைகாரர் கும்பல்
ஒன்று மட்டும்தான் இருந்திருக்குமா? இவ்வளவுக்கும் வீரப்பனின்
இருப்பிடம், மொத்த தமிழ்நாடோ, இந்தியாவோ அல்ல. குறிப்பிட்ட சுமார் 600
ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்த்தியற்ற ஒரு குறுமரக் காட்டுப்பகுதிதான்.
ஏனெனில் ஒரு யானைக் கூட்டத்திற்கு சராசரியாக 100 ச.கி.மீ. காடுகள் தேவை
எனும் போது இதற்குள் எவ்வளவு யானைகள் வாழ்ந்திருக்க முடியும்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக