|
13/3/16
| |||
Shiva > யாத்ரிகன் - பழந்தமிழனைத்தேடி ஒரு பயணம்
YATHIRIGAN-PALANTAMILANAI THEDI ORU
ஆண்டுகள்;
சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடும் ஆண்டுகளும் மன்னர்களின் வயதுகளும்
நாம் இன்று கானும் ஆண்டுகளுக்கும் வயதுகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும்
இல்லை என்பதனை நாம் தெளிவாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். சங்ககால
பாண்டிய மன்னர்கள் நெடு ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், 120, 130, 150 ஆண்டுகள்
ஆட்சியில் இருந்ததாவும் சங்கநூல்கள் கூறுவது உண்மையே. ஆனால் அவை யாவும்
இக்கால நாட்கள், மாதங்கள், வருடங்களை அடிப்படையாக கொண்டவை அல்ல.
சங்ககாலத்திற்கு முன்னர் இருந்த வருட கணிப்புகள் முற்றிலும் மாறுபட்டவை.
அக்காலத்தில் எதனை அடிப்படையாக வைத்து வருடங்கள் கணிக்கப்பட்டன என்று
அறிய முடியவில்லை. 365 அல்லது 366 நாட்கள் ஒரு வருடம் என்ற கணிப்பியல்
கதிரவனை மூலமாக வைத்து தற்போது நடை முறையில் இருப்பது. இதுவும் கூட
வரும் காலங்களில் மாறலாம். சங்ககால கணிப்புகள் பெரும்பாலும் கார் காலம்,
வசந்த காலம், வேனிற்காலம், இளவேனிற்காலம் போன்ற காலங்களை கொண்டே
அமைந்துள்ளன.
தொல்காப்பியத்தில் குறிப்பிடுவது போல் ஆண்டு பிறப்பு கூட இன்றைய ஆவணி
மாதத்தில் தான் அமைந்தன என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால
காலண்ட ர்களுக்கு அடிப்படையாக அமைந்தன.நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும்
வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய
காலண்டர் இதற்குச் சான்று.
தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்
மனிதன் என்பவன் ஓரணுவுயிர் தன்னைத் தானே மேம்படுத்தி, தன்னையும் அறியும்
அளவுக்கு கட்டமைத்துக்கொண்ட இயற்கையின் ஒப்புயர்வற்ற வடிவம். அது ஒவ்வொரு
கட்டத்திலும் தன்னை மேம்படுத்துவதற்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள
இயற்கையின் பிற கூறுகளை அறிந்தும் தற்செயலாகவும் கொண்ட உறவுகள்
அடிப்படையானவை. அவ்வாறு தான் மனிதன் காலக் கணக்கீடும் அமைந்தது.
மனிதனும் சரி விலங்குகளும் சரி தாவரங்களாகிய நிலைத்திணைகளும் சரி
தவிர்க்கமுடியாமல் அறியவும் பட்டறியவும் படும் காலப்பாகுபாடு இரவு பகல்
என்பதாகும். இந்த இரு காலப் பாகுபாடுகளுக்கிடையில் பல்வேறு உயிர்களின்
உயிரியக்கத் தொடர் தவிர்க்க முடியாதபடி பிணைந்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக மனிதனின் கவனத்தைக் கவர்ந்தது நிலவின் இயக்கம்.
கதிரவனின் ஒளியை இழந்த இரவின் இருளில் தனிக்காட்டு அரசனாக ஆட்சி செய்வது
நிலவு. எனவே அதனுடைய ஒவ்வொரு அசைவையும் மனிதனால் வெறுங்கண்களாலேயே
நோட்டமிட முடிந்தது. வளர்ச்சி தேய்வு என்ற இரு கோடி நிலைகளுக்குள் ஒரு
குறிப்பிட்ட கால இடைவெளியில் அது இயங்கி வந்தது. இரவு பகல் இணைந்த நாள்
என்ற காலப்பகுப்புக்க
ு அடுத்ததாக மனிதன் நிலவின் வளர்வு தேய்வு என்ற இரு கலைகளுக்கும்
இடைப்பட்ட காலத்தை, அளக்கும் அலகாகக் கொண்டான். அதையே மனிதனின் வாழ்நாளை
அளக்கும் அளவையாகவும் கொண்டான். அவ்வாறுதான் யூத மறை நூலில் தாம்
போன்றவர்களின் அகவை தொள்ளாயிரத்துக்கும் கூடுதலாகக் குறிப்பிடப்பட்ட
ுள்ளது. உண்மையில் இன்றுள்ள ஆண்டுக் கணக்கில் அவை யாவும் 80க்கு மேல் வராது.
முது தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்.
உலகில் முகாமையாக மூவகை ஆண்டுமுறைகள் நிலவுகின்றன அவை 1. மதியாண்டு. 2.
கதிராண்டு. 3. மதி கதிராண்டு எனப்படும்.
அவற்றில் முகம்மதியர்களின் ஆண்டு தூய மதியாண்டு. ஆங்கில ஆண்டு எனப்படும்
கிரிகோரியன் ஆண்டைப் பொதுவாக கதிராண்டு எனக் குறிப்பிடலாமாயினும்
கதிரவனின் திருப்புமுனை இயக்கங்களோடு அதற்குரிய இயைபு முறிந்துவிட்டது.
இந்தியாவிலுள்ள சாலிவாகன ஆண்டு தூய கதிராண்டு. சோதிடத்திற்குப் பயன்படும்
சூரியவட்டமும் (Zodiac) இதுவும் ஒரே அடிப்படையில் அமைந்துள்ளன. உலகிலுள்ள
பிறவனைத்து ஆண்டு முறைகளும் மதிகதிராண்டுகள் தாம்.
உலகில் மனிதன் இரவு பகல் என்ற காலக் கணக்குக்கு அடுத்தபடியாக அறிந்த
காலக் கணிப்பு நிலவின் வளர்வு, தேய்வு என்ற இயற்பாட்டைத் தான்.
நிலவு இருளில் தோன்றும் ஒளிவிளக்கு என்பதாலும் அதனைக் கண்ணால் எளிதில்
நோட்டமிட முடிந்ததாலும் இது நிகழ்ந்தது.
இவ்வாறு நிலவின் ஒரு துடிப்பு அதாவது காருவா எனும் அமாவாசையிலிருந்து
வெள்ளுவா எனும் பவுர்ணமிக்கு மாறி மீண்டும் காருவாவுக்கு வரும் காலம்
ஓராண்டு என்று கணக்கு வைக்கப்பட்டது.
இவ்வாறு இன்றைய ஓராண்டுக்கு முன்பு ஏறக்குறைய 12 ஆண்டுகள் கணக்கிடப்பட்டன.
கிறித்துவ மறை நூலில் ஆதாம் போன்ற தொடக்க கால மனிதர்களுக்குத் தொள்ளாயிரத்துக்
கு மேற்பட்ட அகவை குறிப்பிடப்பட்ட
ிருப்பது இதனால் தான்.
மேலும் நமது பழம் பெரும் பாண்டிய மன்னர்களின் அகவைகளும் அவர்கள் ஆட்சி
செய்த ஆண்டுகளும் நம்பகத்தன்மை அற்றது என்று பொதுப்படையாக கூறுவது
தவறாகும். அவர்களின் அகவையும் ஆட்சியாண்டுகளையும் 12ஆல் வகுத்து
பார்த்தால் இன்றைய வருட கணக்கில் அவை பொருந்தி வருவதை காணலாம்
ஒரியன் காலண்டர்.
ஒரியன் காலண்டர் கி.மு. 550-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று
ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நமது இப்போதைய நாட்காட்டிகளை விட ஒரியன்
காலண்டர் மிகவும் வித்தியாசமானது அவர்களின் கணக்குப்படி இப்போது போலவே
அப்போதும் வருடத்திற்கு 365- நாட்கள் தான். ஆனால் மாதங்கள் பதினெட்டு,
ஒவ்வொரு மாதமும் இருபது நாட்களை கொண்டதாகும். இந்த காலண்டருக்கு ஹாப்
என்று பெயர்.
இந்த மாதத்தின் நாட்களை கூட்டினால் 360 நாட்கள் தான் வரும். மீதமுள்ள
ஐந்து நாட்களை அதிஸ்ட்டமில்லாத நாட்கள் என்று மாயர்கள் ஒதுக்கி
வைத்துவிட்டார்கள். மேலும் இந்த ஹாப் காலண்டர் சாதாரணமக்கள்
உபயோகபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான்.
இஸல்கின் காலண்டர்.
தெய்வ காரியங்களுக்கு என்றும் வானிநிலை ஆய்வாளர்களுக்கு என்றும் தனியாக
இஸல்கின் என்றொரு காலண்டர் உண்டு, இதன்படி இருபது நாட்கள் கொண்ட ஒரு
மாதமும், பதிமூன்று மாதங்கள் கொண்ட ஒரு வருடம், அதாவது இருநூற்றி அறுபது
நாட்கள் கொண்ட ஒரு வருடம் வரும், மாயர்களின் கணக்குப்படி ஹாப்,
இஸ்லால்கின் ஆகிய ஆண்டுகள் 52 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணையும்,
கிரேக்கர்கள் தான் முதன்முதலில் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம்
இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர்.
ஆரம்ப காலத்தில், இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல்
டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன.
கி.மு.700ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச்
சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின்
கடைசி இருமாதங்களாக (11,12வது மாதங்கள்)இருந்தன.
கி.மு.46ல் ஜுலியஸ் சீசர் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை
ஆண்டின் முதல் இருமாதங்கள் ஆக்கினார். இதற்கு ஜுலியன்காலண்டர் என்ற பெயர்
சூட்டப்பட்டது.
மாதங்களின் பெயர்க் காரணம்:
ஜனவரி:
ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு
கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தன.
பிப்ரவரி:
ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று
பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக்
குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என
மாறியது.
மார்ச்:
ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி,
கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச்.
ஏப்ரல்:
ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின்
செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து
ஏப்ரல் மாதம் தோன்றியது.
மே:
உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவரது மகளே
மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே.
ஜூன்:
ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப்
பெயரால் வந்தது தான் ஜுன்.
ஜூலை:
ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர்.
மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று
பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.
ஆகஸ்ட்:
ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ்
என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய
பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில்
அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.
செப்டம்பர்:
மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக
இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர்.ஆனால், புதிய
அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து
விட்டது.
அக்டோபர்:
அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது.
இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.
நவம்பர்:
நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம்
மாதமாக மாறிய பிறகும் பெயர்மாற்றம் செய்யப்படவில்லை.
டிசம்பர்:
டிசம் என்றால் பத்து பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான
பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப் பட்டது.
சனிக்கிரகத்தில் 10759 நாட்கள் ஒரு வருடம்.
வியாழனில் 4331 நாட்கள் ஒரு வருடம்.
செவ்வாயில் 687 நாட்கள் ஒரு வருடம்.
பூமியில் 365 நாட்கள் ஒரு வருடம்.
வெள்ளியில் 227 நாட்கள் ஒரு வருடம்
புதனில் 88 நாட்கள் ஒரு வருடம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக