திங்கள், 27 மார்ச், 2017

தனு பெருஞ்சித்திரனார் பாடல் ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழுக்கே ராஜீவ் காந்தி

aathi tamil aathi1956@gmail.com

10/3/16
பெறுநர்: எனக்கு
தமிழக , தமிழீழ விடுதலைகளில் இருந்து எள் அளவும் பின் வாங்காத பாவலரேறு
பெருஞ்சித்திரனா,
Anbu ஆல் எழுதப்பட்டது
திங்கட்கிழமை, 12 பங்குனி 2012 21:29
தமிழக , தமிழீழ விடுதலைகளில்
இருந்து எள் அளவும் பின் வாங்காத,
யாரிடமும் எதற்காகவும்
மண்டியிடாமல் வாழ்ந்த,
வறுமையில் பிடியில்
உழன்றாலும் வாழ்க்கை
நெறிமுறையான தன்
கொள்கையில் மாற்றமில்லாமல்
மனிதரில் மாணிக்கமாக வாழ்ந்தவர்
தான்
அய்யா . பாவலரேறு
பெருஞ்சித்திரனார் அவர்கள்
10.3. 1933 அன்று சேலத்தில் இரா.
துரைசாமி அய்யா - குஞ்சம்மாள்
அம்மையார் அவர்களுக்கு பிறந்த இம்
அரும் முத்து தன் 9 ஆம்
அகவையிலேயே கையெழுத்து
இதழை மாணவர் மத்தியில் நடத்தி "குழந்தை ஆசிரியர் " ஆக
மின்னியவர்
தன் 26 அகவையில் தென்மொழியை
ஆரம்பித்து தன் கல்லூரி கால
ஆசிரியரான மொழிஞாயிறு
தேவநேய பாவாணர் அவர்களின்
அறிவு முயற்சிக்கு துணை
நின்றார். தென்மொழி பெயரை
சூட்டியவரும் பாவணர் அவர்களே !!
மொழி போர் உச்சகாலகட்டத்தில்
முதல்வர் பக்தவச்சலத்தை
கடுமையாக கண்டித்து
ஆசிரியருரை எழுதியதால் அரசின்
கொடுஞ்சிறை வாசத்தை
எதிர்கொண்டார் !! அதற்க்கு
முன்னதாக முதல்வருக்கும் இந்திய
பிரதமருக்கும் மடல்கள் அனுப்ப தமிழ்
உணர்வாளர்களை அய்யா கேட்டு
கொண்ட படியால் சுமார் 50000
மடல்கள் அவர்களுக்கு
உணர்வாளர்களால் அனுப்ப பட்டது
தமிழை பற்றி பெரியார் அவர்கள்
குறிப்பிட்டு எழுதிய அத்தனை
எழுத்துக்களுக்கும் மறுப்பு
தெரிவித்து தன் தென்மொழியின்
வாயிலாக உடனுக்குடன் பதில்
அளித்தார் !!
பாவாணர் , பாவேந்தர் மற்றும்
ஏனைய புலவர்கள் உயிரோடு
இருக்கும் பொழுதும் இறந்த
பிறகும் அவர்களுக்கான
தேவைநிதியை தென்மொழியின்
வாயிலாக திரட்டி அவர்களின்
வாழ்வில் வறுமை துடைக்க வழி
செய்தவர் ..
1972, 1973 , 1975 ஆகிய ஆண்டுகளில்
தமிழக விடுதலை மாநாடுகள்
நடத்தியவர் .. மதுரையில் ஏற்பாடு
செய்த மாநாடு கைது
நடவடிக்கைகளுக்கு பின் நடத்த
பட்டது .அம் மாநாட்டுக்கு
பெரியார் அவர்கள் வந்து வாழ்த்தி
சென்றார் .
சென்னையில் நடைபெற்ற மாநாடு
நடைபெறும் முன்னரே
கருணாநிதி அரசால் கைது செய்ய
பட்டு விடுதலை வேண்டாம் என்று
எழுதி கொடுத்தால் விட்டு
விடுகிறோம் என்று கூற பட்டது !!
தமிழக விடுதலை மறுத்து என்
விடுதலை தேவை இல்லை என
உரக்க கூறி கொடுஞ்சிறையை
தழுவி கொண்டார்..
1978 இல் இலங்கை சென்று வந்த
பிறகு ஈழ தமிழரின் இன்னல்கள்
குறித்து விளக்க பொதுக்கூட்டம்
சென்னை வில்லிவாக்கத்தில்
நடத்தினார் . தமிழ் ஈழ போராளிகள்
சென்னை வந்த போது அவர்களுக்கு
வெளிப்படையான ஆதரவு தந்து
அறிக்கைகள் வெளியிட்டார்..
1984 இந்திய பொதுவுடைமை கட்சி {மா. லெ} மக்கள் போர் குழுவில்
இருந்து பிரிந்து தலைவர் தமிழரசன்
, கு . கலியபெருமாள்
ஆகியோரால் தமிழ்நாடு
பொதுவுடைமை கட்சி அமைக்க
பட்டது . இக்கட்சியினால் "தமிழீழ
விடுதலை மாநாடு" , "இந்தியாவில் தேசிய இனங்களின்
விடுதலை" குறித்தான
மாநாடுகள் நடத்த பட்ட பொழுது
அதற்க்கு மிகவும்
உறுதுணையாகவும் அதில்
பங்கேற்றும் சிறப்பித்து
கொடுத்தார்.. உலக ஒப்புரவு
புரட்சியின் ஒரு பகுதியே
தமிழகத்தின் விடுதலை என்பதை
வைத்து செயல் பட்ட தலைவர்
தமிழரசனும் தமிழக விடுதலை
ஒன்றே தமிழர்களுக்கு தேவை
என்று செயல் பட்ட பாவலரேருவும்
ஒரே கருத்தில் இணைந்து
தீப்பிழம்பாய் செயல்பட்டனர்
இதையடுத்து மின்சுருட்டி சாதி
ஒழிப்பு கருத்தரங்கில் " சாதி
தீமைகளும் அதை ஒழிக்கும்
திட்டமும் " என்ற தலைப்பில்
அய்யாவின் னூல் வெளியிட பட்டது . அந்த நிகழ்வில் தான் தலைவர்
தமிழரசனின் "சாதி ஒழிப்பும் தமிழ்
தேச விடுதலையும் " என்ற நூல்
முன் வைக்க பட்டது .
1986 இல் "தமிழ் இன எதிர்கால
தீர்மானிப்பு" மாநாட்டை அய்யா
ஒருங்கிணைத்து நடத்தினார் .
அதில் வோட்டு சீட்டு முறையில்
தமிழ்நாடு விடுதலை குறித்து
வந்திருந்தவர்களிடம் தேர்வு
நடந்தது அதில் இந்திய தேசியம் சரி
என்கிற கருத்து காணாமல் போய்
மாநில தன்னாட்சி என்பது
கனவானது என அறிவிப்பு செய்ய
பட்டது.
ராஜீவ் அனுப்பிய அமைதிப்படை
செய்யும் அமளியை அடுத்து "இட்ட
சாவம் மூட்டுக" என்ற பாடல் அய்யா
வால் எழுத பட்டது இதனை அடுத்து
இறந்த ராஜீவ் அவர்களின் இறப்பு
முறை இப் பாடலின் வழியே
அமைந்துள்ளதை எடுத்து காட்டி
தென்மொழியில் அதற்கான விளக்கம்
எழுதினார். ராஜிவை கொலை
செய்தது தாணு என்பது தெரிய
வந்ததும் "ஆகுமோ உலகு அவள்
அழிவிலாப் புகழுக்கே " என்னும்
அட்டை பாடலை தென்மொழியில்
எழுதிய துணிச்சலை என்ன
வென்று சொல்வது!!
இதன் பின் விடுதலைபுலிகள்
மீதான தடை அமலில் இருந்த
பொழுது 1991 வேலூர் இல் "தமிழீழ
அங்கீகரிப்பு மாநாடு " தமிழ்நாடு
இளைஞர் பேரவையால் நடத்த பட்டது
இதில் பாவலரேறு வூட்பட நடத்திய
பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 73
பேரும் கைது செய்ய பட்டனர்
1992 ஜெயா அரசினால் தொடங்க பட
இருந்த " நவோதய " " வேதாகம" பள்ளி
கல்லூரிகளை கண்டித்து
சென்னையில் நடந்த மாநாட்டில்
சிறப்புரையாற்றினார் ..
1993 தமிழ் ஈழ ஆதரவு பேரணி நடத்த
திட்டமிட்ட வகையிலும் ,
தமிழ்நாடு விடுதலை குறித்து
தொடர்ந்து தென்மொழியில்
எழுதியதாலும் தடா
கொடும்சட்டத்தில் கைது செய்தது
ஜெயா அரசு
தொடர்ந்த சிறை வாசத்தினால் உடல்
நிலையை கருத்தில் கொள்ளாமல்
விட்ட படியால் உடல் நலிவடைந்து
11- 6- 1995 தமிழ் மடியில் தன் உயிரை
சமர்பித்து கொண்டார் .. அய்யாவின்
இறப்பினை கேட்டு கூடிய
பல்லாயிரகணக்கான உணர்வாளர்கள்
அய்யாவின் உடலை சைதையில்
சுமந்து மேடவாக்கம் வரை
வூர்வலமாக எடுத்து சென்ற தூரம்
சுமார் 16 கி மி .. இன்று அவரின்
உடல் தாங்கி நிற்கும் இடத்திற்கு
பெயர் "பாவலரேறு தமிழ் களம் "
விட்டு கொடுத்து சிற்சில
அங்கீகாரங்களை பெறுதல் !
மண்டியிட்டு மண்ணை காப்பாற்றல் !
கொள்கைகளை விட்டு கொடுத்து
ஆதாயம் பெறுதல் !
அடக்குமுறைகளை கண்டு
பின்வாங்குதல் !
குடும்பத்தை அரசியலில்
இணைக்காமல் களம் ஆடுதல் !
என்கிற வார்த்தைகளுக்கு
பாவலரேறு என்கிற ஒப்பற்ற
ஆளுமையின் அகராதியில் இடமே
இல்லை
மொழி இனம் மண் மக்கள் இவற்றை
எதிர்ப்பவன் எவராயினும்
அவைகளை எதிர்க்க பாவலரேறு
அஞ்சியதே இல்லை ..
மிசா , தடா முதலான
சிறைவாசங்களை மட்டும் தன்
வாழ்நாளில் 18 முறைக்கு மேல்
விரும்பி ஏற்று கொண்டார் !!
அனைவரும் பேச நடுங்கி அஞ்சிய
கால கட்டங்களில் ஒலித்த
பாவலரேறுவின் குரல்
எவருக்குமே வராதது !! சாதிய
நச்சை அடிநாதத்தில் இருந்து
வெறுத்தும் , இந்து மதத்தை
சாடியதும் , மூட நம்பிக்கைகளை
அகற்ற உயர்நீதிமன்றம் சென்று
தமிழில் வாதாடியதும், குடும்ப
உறுப்பினர்களை போராளிகளாக
வளர்த்ததும் எல்லாவற்றுக்கும்
மேலாக தமிழீழ விடுதலை தமிழக
விடுதலையில் அடங்கியுள்ளதை
எடுத்தியம்பி செயல்பட்டதும்
அவரின் தனிச்சிறப்பு
அய்யாவின் வழியில் இதோ ஈழம் மலர
தமிழகமே விழித்து கொள்
ஆண்டுநூ றானாலும் அன்னைத்
தமிழ்நாடு
வேண்டும் விடுதலை எண்ணம்
விலக்கோம் - யாம் ;
பூண்டோம் உறுதி! புறப்பட்டோம்!
என்றே நீ
மூண்ட இடியாய் முழங்காய்
தமிழ்மகனே ! "
muzhakkam.com/index.php?option=com_content&view=article&id=683:2012-03-13-03-29-48&catid=3:newsflash&Itemid=30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக