செவ்வாய், 21 மார்ச், 2017

காடுவளர்ப்பு சுற்றுசூழல் சோலார் மின்வேலி நிலத்தடி நீர் புதுமுயற்சி இயற்கை

aathi tamil aathi1956@gmail.com

25/9/16
பெறுநர்: எனக்கு
2.5 ஏக்கரில் சோலார் வேலியுடன் காடு வளர்க்கும் ஊராட்சி நிர்வாகம்:
பசுமைப் பரப்பை அதிகரித்து மழைப் பொழிவைப் பெருக்கும் முயற்சி
Updated: August 21, 2016 12:58 IST | எஸ்.ராஜாசெல்லம்
தருமபுரி மாவட்டம் சந்தப்பட்டி ஊராட்சி சார்பில் வளர்க்கப்படும்
மரக்கன்றுகளுடன் ஊராட்சித் தலைவர் சமதர்மம்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி வட்டம் மொரப்பூர் ஒன்றியத்
துக்கு உட்பட்டது சந்தப்பட்டி ஊராட்சி. இதன் தலைவர் சம தர்மம். இவர் தனது
ஊராட்சிக்குச் சொந்தமான 2.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் காட்டை உருவாக்கி
உள்ளார். சந்தப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள
2.5 ஏக்கர் நிலத் தில் 800 மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார். இந்த
மரக்கன்று களை பாதுகாக்க சுற்றிலும் சோலார் வேலி அமைத்துள்ளார்.
வறட்சி காலங்களிலும் கைகொடுக் கும் வகையில் 800 மரக்கன்று களுக்கும்
சொட்டுநீர் குழாய் அமைத்துள்ளார். தற் போது மரக் கன்றுகள் நடவு செய்
யப்பட்டுள்ள 2.5 ஏக்கர் நிலமும் தனியார் சிலரின் பயன்பாட்டில் நீண்ட
காலமாக இருந்து வந்தது. அவர்களிடம் பேசி ஊராட்சிக்கான நிலத்தை முதலில்
மீட்டனர்.
பின்னர், மேடும், பள்ளமுமாக இருந்த பகுதியை தேசிய ஊரக வேலை உறுதித்
திட்டம் மூலம் ஓரளவு சமதள பரப்பாக மாற்றினர். தொடர்ந்து, மாவட்ட
நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறையிடம் அனுமதி பெற்று 2 ஆண்டுகளுக்கு
முன்பு அந்த பரப்பு முழுக்க மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்த
வளாகத்தில், வேங்கை, கொன்றை, மூங்கில், வேம்பு, விளாம், வில்வம், பாதாம்,
மகாகனி, நாவல், புங்கன், மத்தி உள்ளிட்ட 15 வகையான 800 மரக் ககன்றுகள்
தற்போது செழித்து வளர்ந்துள்ளன.
அலுவலகத்தின் மேற்கூரை பகு தியில் சோலார் பேனல்களை அமைத்து அதிலிருந்து
கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரி ஒன்றில் சேமித்து மின்வேலிக்கு 24 மணி
நேர மின் விநியோகம் செய்கின் றனர். இங்கு பொருத்தப்பட்டுள்ள பேட்டரி, ஒரு
வார காலம் வெயில் இல்லாத சூழல் ஏற்பட்டாலும் மின் விநியோகம் வழங்கும்
அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது.
மாவட்டத்தில் தற்போதைய நில வரப்படி 251 ஊராட்சிகளில் ஒரே இடத்தில் அதிக
அளவில் மரக் கன்றுகள் வளர்க்கும் ஊராட்சி இதுதான். இன்னும் 2 ஆண்டுக ளில்
இங்கு உள்ள மரக்கன்றுகள் அடர்ந்த வனமாக மாறப்போவது உறுதி. இவரது இந்த
முயற்சி அதிகாரிகள் மத்தியில் பாராட்டை பெற்றுத் தந்திருப்பதுடன், மற்ற
ஊராட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுபற்றி ஊராட்சித் தலைவர் சமதர்மம் கூறியது:
தமிழகத்தின் வறட்சி மாவட்ட மான தருமபுரியில் மொரப்பூர், பாப்பி
ரெட்டிப்பட்டி ஆகிய 2 ஒன்றியங் கள் நிலத்தடி நீர்மட்ட அளவில் அபாயகரமான
நிலை யில் இருப் பதாக ஆய்வில் கண் டறியப்பட் டது. சுமார் 3 ஆண்டு களுக்கு
தமிழகத்தில் நிலத்தடி நீர் அபாய நிலையை எட்டியுள்ள சில பகு திகளை
கண்டறிந்து அப்பகுதி களுக்கு சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்தனர்.
இப்பகுதி களில், கோவை வேளாண் பல்க லைக்கழகத்தின் அங்கமான நீர் மேலாண்மை
நுட்பவியல் மையம் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்து வதற்கான பணிகள் உலக
வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தருமபுரி
மாவட்டத்தின் மொரப் பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றி யங்களில் ஆழ்துளைக்
கிணறு அமைக்க அரசு தடை விதித்துள் ளது. இந்த ஆபத்தான நிலை மாறி, நிலத்தடி
நீர்மட்டம் உயர இதுபோன்ற அரசுத் திட்டங்கள் அவசியம். மற்றொரு புறம், மரங்
களை அதிக அளவில் நடவு செய்து பசுமைப் பரப்பை அதி கரித்து மழைப்பொழிவை
பெருக் குவதன் மூலமும் இந்த பிரச்சி னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.
ஊராட்சிக்கு உட்பட்ட மேலும் சில இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள்
ஆக்கிரமிப்பில் உள்ளன. அவைகளை மீட்பதில் சில தடைகள் உள்ளன. இருப்பினும்
மீட்டுத் தரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரி வருகிறோம்.
இப்படி சாத்தியமுள்ள இடங்களில் காடு வளர்ப்பதன் மூலம் எங்கள் பகுதிக்கு
தேவையான மழையை அதிகரிப்பதே எங்கள் நோக்கம் என்றார்.
தருமபுரி மாவட்ட வன அலுவலர் திருமால் கூறும்போது, ‘‘சோலார் மின் வேலிகள்
பொதுவாக அச்சு றுத்தலை மட்டுமே ஏற்படுத்தும் வகையிலானவை. இவற்றால்
உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்ப டாது. இந்த வகை மின்வேலிகளை அமைக்க,
அரசால் அங்கீகரிக்கப் பட்ட தரமான நிறுவனங்களை தேர்வு செய்வது மட்டும்
முக்கியம். மேலும், இந்த மின்வேலிக்கு மின் விநியோகம் வழங்கும் உப
கரணங்களும் தரமான நிறுவன தயாரிப்பாக இருப்பது பாதுகாப்பை அளிக்கும்.
சீரான பராமரிப்பும் ஆபத்துகளை தவிர்க்க உதவும்’’ என்றார்.
சோலார் மின் வேலி அமைத்துக் கொடுத்துள்ள, கிருஷ்ணகிரி மாவட் டத்தைச்
சேர்ந்த ‘அன்னை சோலார் பவர் ஃபென்ஸிங் சிஸ்டம்’ நிறுவன உரிமையாளர் மாதேஷ்
கூறும் போது, ‘‘சூரிய சக்தி மூலம் தயாரிக் கப்படும் இந்த மின்சாரம்,
பேட்டரி யில் சேமிக்கப்பட்டு, வேலியை தொடுவோருக்கு சிறு அதிர்வையும்
அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் கம்பியில் விநியோகம் ஆகும். ஆபத்தை
ஏற்படுத்தாத இந்த சோலார் மின் வேலியை அமைக்க யாரிடமும் அனுமதி பெறத்
தேவையில்லை’’ என்றார்.
WHAT IS YOUR REACTION?

m.tamil.thehindu.com/tamilnadu/25-ஏக்கரில்-சோலார்-வேலியுடன்-காடு-வளர்க்கும்-ஊராட்சி-நிர்வாகம்-பசுமைப்-பரப்பை-அதிகரித்து-மழைப்-பொழிவைப்-பெருக்கும்-முயற்சி/article9014341.ece

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக