aathi tamil <aathi1956@gmail.com>
17/3/16
பெறுநர்: எனக்கு
thefeudatoriesofsouthindia.blogspot.in/2016/03/blog-post.html?m=1
தமிழகத்து வன்னியரும் -இலங்கை வன்னியரும் வன்னிமைகளும் vanniyars of tamilnadu and vanniyars of srilanka
தமிழக வன்னியர்களும்-இலங்கை வன்னியர்களும்-பண்டாரக வன்னியனும் :
தென்இந்திய படையெடுப்புகள் அப்போது வடக்கு இலங்கையில் இருந்த சோழதேசத்தின் வணிக குழுக்களை பாதுகாக்க வந்த படைத்தலைவர்கள்,முக்கியமாக கருணாகர தொண்டைமான் செய்த கோவில் மற்றும் குளம் சீர்செய்த தகவல்கள் எல்லாம் மறைக்க பட்டு உள்ள வரலாறு தான் இலங்கை வெள்ளாளர்கள் எழுதிய வன்னியர் வரலாறு. இலங்கையில் வன்னியர் எப்படி வெள்ளாளர் ஆக மாற்ற பட்டு கடைசியில் வெள்ளாளர்குடியில் முடக்க பட்டனர் எனபதை அறிய முதலி மற்றும் வெள்ளாளர்கள் செய்த துரோக வரலாறை இலங்கை வரலாறு பதிவு செய்யாமல் வன்னியர்கள் வரலாறை மூன்றாக பிரித்து மாப்பாண வன்னியர் -மடப்பளி வன்னியர் என்றும் வன்னியர் என்றும் கூறி உள்ளனர். இந்த பொய் எல்லாம் டச்சு காரர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆவணங்களை கொண்டு நிரூபிக்க பட்டது தான் இலங்கையில் வன்னியர் யார் என்ற இந்த பதிவு.
வன்னியர்களின் நாடு சிலோன் என்று குறிப்பிட்ட டச்சுக்காரர்கள் ( coylot wannee's country)
திரிக்கப்பட்ட இலங்கை வன்னியரின் வரலாறு :
காடு என்றால் வனம் என்றும் அதில் இருந்து வந்த சொல் வன்னி என்ற ஒரு கதையை இலங்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்கள்.இதை எல்லாம் அர்த்தம் இல்லாத கருத்து என்று வரலாற்று ஆசிரியர் ஜே பி லூயிஸ் கூறியுள்ளார்.வன்னியர்கள் ஆட்சி செய்த வன்னி பகுதி 700 க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் வயல் சார்ந்த பகுதியாகவும் கடல் சார்ந்த பகுதியாகவும் காடு சார்ந்த பகுதியாகவும் செழிப்புடன் இருந்துள்ளது. டச்சுக்காரர்கள் ஆட்சியின் போது மன்னார்,செட்டிகுளம்,முல்லைத்தீவு கடற்கரை பிரதேசம் தவிர்த்த பகுதிகள் வன்னியர்களின் நாடு என்று குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.இதுவே மருவி வன்னி என்று அழைக்க பட்டது.
இலங்கையில் உள்ள வன்னியர்களை வெள்ளாளர்கள் என்று பொய் கூறும் வெள்ளாளர்கள் பிரிட்டிஷ்காரர்கள் எழுதிய ஆவணங்களை பொய் என்று மறுக்க முடியாது ஏன் என்றால் அவர்களிடம் வன்னியரை காட்டி கொடுக்கும் வேலையை செய்தவர்கள் இந்த முதலி மற்றும் வெள்ளாளர்களே.
பனங்காமம் என்ற வன்னி மட்டுமே கயிலாய வன்னியர் இருக்கும் வரை டச்சு மற்றும் பிரிட்டிஷ்காரகளுக்கு அடிபணியாமல் இருந்த வெள்ளாளர் கலப்பு இல்லாத ஒரே வன்னியர். அவர் இறந்த பின் அவர் மருமகன் கண்டி அரசனுக்கும் ஆதரவாகவும் ,டச்சு காரர்களுக்கு வரி கொடுத்ததும் இருந்து உள்ளார்.சிங்கள வன்னிமைகளுடன் திருமண உறவு கொண்டதும் உண்டு.இவர் வழி வந்தவர் தான் பண்டார வன்னியன்.ஒரு மிக பெரிய வரலாறை மறைக்கும் வேலையை செய்து கொண்டு இருக்கும் நபர்களுக்கு கூறுவது ஒன்றே. மறைக்க படுவது வன்னியர் வரலாறு மட்டுமே இல்லை. தமிழனத்தின் வீரம் இலங்கைக்கு சென்று கட்டி ஆண்ட வரலாறு. இதை தேட வழி வகுத்த எல்லோருக்கும் நன்றி.
இந்த வன்னி பகுதிகள் பின்னர் அழிந்து காடுகளாக மாறியதும் வன்னி என்றால் காடு என்று பதிவு செய்ய பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வன்னியர் என்றால் யார்தெரியாதவர்கள் தான் இலங்கை வரலாறையும் அங்கு இருந்த வன்னிமைகள் பற்றியும் கதை எழுதி உள்ளனர். இலங்கையில் இருக்கும் அதிகமான புத்தகங்கள் வெள்ளாளர் மற்றும் முதலியார்கள் எழுதிய புத்தகங்கள் தான்.அதில் கூறப்பட்டுள்ள ஒரு சில செய்திகளை பார்த்தால் அவர்கள் செய்த வரலாறு ஆய்வும் அதை வைத்து இங்கு எழுத பட்ட கதைகளும் எல்லோருக்கும் புரியும்.
ஆரிய சகரவர்த்தியை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் முன் அந்த நாட்டில் யார் ஆட்சி இருந்தது என்று கூறாமல் பொன்பற்றி பாண்டிமழவன் என்று ஒரு கதையை சொல்லி அவனையும் வேளாளன் என்று கதை விட்டு இருக்கும் புத்தகம் தான் அதிகம்.
மழவராயர் என்ற ஒரு படைதலைவர் பாண்டிய நாட்டில் இருந்து ஆரியசகரவர்த்தியை அழைத்து வந்தார் என்பது செய்தி. அதை பொன்பற்றி என்ற இடத்தில இருந்து வந்த பாண்டி வேளாண் ஆன காராளன் மழவன் என்று கதை சொல்லதன் விளைவு இங்க இருக்கும் எல்லாருமே மழவர் என்பது வெள்ளாளன் பட்டம் என்று கதை விட்டு ப்ளாக் போட்டு சந்தோசமா இன்னும் அதிக கதை எழுதிகிட்டே இருக்காங்க.மழவர் என்பவர் வன்னியர் என்பதை கூட தெரியாமல் கதை எழுதிய வரலாறு ஆய்வாளர்கள்.
பொன்பற்றி மழவன் யார் என்பதை கூறும் ஸ்ரீரங்கம் கோவில் கல்வெட்டு.
ராஜராஜாபாண்டிநாட்டு ராஜேந்திர சோழ வளநாட்டு திருமிழலை கூற்றத்து பொன்பற்றியுடையான் அரையன் சேந்தனான ராஜேந்திர சோழ அதியமான் அளித்த பூந்தோட்டம். இந்த ராஜேந்திர சோழ அதியமானை தான் பாண்டி மழவன் என்று கூறி உள்ளனர்.
பொன்பற்றி என்ற ஊர் பாண்டிநாட்டின் வடக்கு எல்லையாக அறியப்பட்ட ஊர் தான் அது. மழவர்களால் ஆளப்பட்ட ஊர் பட்டு மழவன் கோட்டை கட்டி ஆண்டதால் பட்டுக்கோட்டை என்று பெயர் பெற்ற ஊருக்கு அருகில் இருக்கும் பொன்பற்றியை தான் பாண்டி மழவன் என்ற காராளன் என்று கதை விட்டு இருக்கிறார்கள். இந்த மழவனே தொண்டியின் தலைவன் என்று கூறப்பட்டுள்ளது.எந்த காலத்தில் பாண்டிநாட்டில் காராளன் படை நடத்தினான் என்று கேட்டா இலங்கை வெள்ளாளர் எழுதிய புக் மட்டுமே ஆதாரம் என்று காமிக்க முடியும்.
இலங்கையில் வன்னியர் யார் எங்கு இருந்து வந்தனர் என்பதற்கு விளக்கமும் கருணாகரதொண்டைமான் இலங்கையில் இருந்த காலத்தில் தான் வன்னியர்களுக்கு வன்னிமைகள் கொடுக்க பட்டுஉள்ளது. வன்னியரான கருணாகரதொண்டைமான் வன்னியருக்கு கொடுத்த வன்னிமைகளை மாகோன் கொடுத்ததா கூறும் புத்தகம் தான் இலங்கையின் வரலாரை கூறு கின்றது.அதன் விளக்கம் இந்த link ல் படிக்கவும்.
http://thefeudatoriesofsouthindia.blogspot.in/2016/02/cholagangan-and-karunagara-tondaiman-in.html
இலங்கை வன்னியருக்கும் தமிழக வன்னியருக்கும் உள்ள தொடர்பை கூறும் மிக முக்கிய ஆவணம் தான் கல்லியங்காட்டு செப்பேடுகள். இந்த பட்டயம் சிவகொழுந்து என்பவரிடம் உள்ளது.ஆரிய சக்ரவர்த்திகள் வழி வந்த அரசர் சிதம்பரத்தில் மடம் அமைத்து அதை பாதுகாக்க தில்லியூர் சேனாதிபதியார்,சிங்கையூர்படையாண்டவர், தில்லியூர்குலதுங்கர்,பரநிருபசிங்கர்குலநிருவாங்க படையாராச்சியாரவர்கள் வம்சத்தில் நான்கு பேரும் சம்மதித்து தாங்கள் இனத்துக்குள்ளே ஒருவரை காவிவேட்டி தம்பிரானாக வைத்து ராஜாக்கள் தம்பிரானார் திருச்சிற்றம்பலம் என்பவருக்கு பட்டம் கட்டி இந்த தர்மத்தை பாதுகாக்க இந்த நாலு பேருக்கும் பரராசசேகரன் கட்டளை பண்ணினார் என்று உள்ள இந்த செப்பேட்டை எழுதி வித்தவர் "பரநிருப சிங்க படையாண்டவர்".
இலங்கையில் இருக்கும் வடமராட்சி,தென்னமராட்சிஎன்பதுவும்
படையாச்சியின்ஆட்சியின்கீழ்இருந்தபகுதியைகுறிக்கும்பெயரே.ஆராட்சி எனபதன் பொருளே படையாட்சியின் ஆட்சியே .இதை இப்போது மறவர் ஆட்சி செய்ததால் அந்த பெயர் என்று திரிக்கும் வேலையை செய்து கொண்டு உள்ளனர்.
செப்பேடு கூறும் வன்னியர் வரலாறு.
விஜய நகர அரசர்களின் மெய்கீர்த்திகளை சொல்லி இந்த செப்பேடு வருவதால் இது ஆரிய சக்ரவர்த்திகளின் காலத்தில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்றும் வருடம் தவறாக குறிக்க பட்டு உள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடம் மாறினாலும் வரலாறு மாறவில்லை எனபதை நிருபிக்கும் வகையில் இந்த மடம் இன்றும் சிதம்பரத்தில் உள்ளது எனபது தான் வரலாறு.
சிதம்பரம் ராசாக்கள் தம்பிரான் வீதி எனபது மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டபட்ட மாளிகை இருந்த வீதி எனபது தில்லை கல்வெட்டுகள் கூறும் உண்மை செய்தி.இந்த வீதியில் 310 குழி நிலம் வாங்கி வீடு கட்டி, நந்தவனம் போடுகிறதுக்கு நல்ல தண்ணீர் கிணற்றுக்கு கிழக்கும் தெற்கும் 3000 குழி நிலம் வாங்கி ராஜாக்கள் தம்பிரான் வெளி என்றும் கொத்தங்குடியில் பாதி ஊரும் இதற்க்கு வாங்கியதாகவும்,யாழ்பாணத்து ராஜ்யத்தில் அச்சுவேலி புத்தூர் அளவெட்டி என்ற மூன்று ஊரும் சர்வ மானியமாக சிதம்பரம் தர்மத்துக்கு கொடுத்து உள்ள செய்தி இந்த செப்பேட்டில் உள்ளது.
சிதம்பரத்தில் இருக்கும் படையாட்சிகளே இந்த தர்மத்தை செய்தவர்கள்.
பட்டயத்தை எழுதியவர்கள் பரராசசேகர மகாராசா,தில்லியூர்சேனாதிபதியார், சிங்கையூர் படையாண்டவர், தில்லியூர் குலதுங்கர்,பர நிருப சிங்கர்குல நிருவாங்க படையாராச்சியாரவர்கள் என்றும் பட்டயம் எழுதினது "பரநிருப சிங்க படையாண்டவர்"
சிதம்பரம் படையாண்டவர்கள்.
மகா ராஜ ராஜ ஸ்ரீ VMS சந்திரகாச படையாண்டவர்
மகா ராஜ ராஜ ஸ்ரீ VMS சந்திர பாண்டிய படையாண்டவர்
பரராசசேகரன் திருப்பணி கூறும் சிதம்பர பட்டயம்.:
வெள்ளாளர்களின் கதையை பொய்யாக்கும் உண்மை ஆவணம் :
இலங்கையின் +Darshanie Ratnawalliஎன்பவர் வன்னியர் பற்றி எழுதிய கதைகள் எல்லாம் படிக்கும் போது வரலாறை திரிக்க இலங்கை அரசு சார்பாக அவர் செய்யும் கதைகள் தெரிய வரும்.இதை சிங்கள அரசு செய்ய காரணம் என்ன வன்னியர் என்பவர் இலங்கையில் இல்லை எனபதை நிரூபிக்க வேண்டும் மேலும் சிங்களவர்கள் மற்றும் வேட்டர் தான் வன்னியர் என்று நிருபிக்க் செய்யும் முயற்சியே.அதற்கு அவர் எழுதும் blog படித்தால் அவர் கூறும் தகவல் எல்லாம் எத்தனை பொய்களை கொண்டு எழுதப்பட்டது எனபது தெரிகிறது.
இலங்கையில் தொண்டைமண்டல வெள்ளாளர்,முதலி இருக்காங்கலாம் ஆனா போர் குடி வன்னியர்கள் எனபவர் இல்லை என்று சிங்களன் முதல் வெள்ளாளன் வரை கதை விடுகின்றனர் .வன்னியர் என்ற பெயர் இல்லாமல் இலங்கையில் எப்படி வன்னியர் சாதியை ஒழித்தனர் என்பது வரலாறு அதை ஆதாரம் மூலம் வெளிக்கொண்டுவரும் முயற்சியே இது. இதை சாதி பெருமை கூறும் பதிவு என்று சாதிய கண்ணோட்டத்தில் பார்பவர்களை பற்றிய கவலை எனக்கு இல்லை.இதை பொய் என்று நிருபிக்க யாரவது உண்மையான ஆதராம் கொடுத்தால் கண்டிப்பாக ஏற்க்கப்படும்.
ஆனால் இப்போ இலங்கையில் இருக்கும் படையாட்சிகுடி,படையாண்டகுடி,மழவர்குடி,கச்சியார் குடி,
என்பவர்கள் யார் என்று வரலாற்றை கொண்டு பாரக்கலாம்.
முதலி பட்டம் பெற்ற வெள்ளாளன்:
நல்ல மாப்பான வன்னியன் வெள்ளாளனுக்கு முதலி பட்டம் கொடுத்து அந்த வெள்ளாளனுக்கு குடிகளிடம் மரியாதையை பெற்று கொடுத்த ஓலை ஆவணம்.வன்னியர் வேறு எனபதும் வெள்ளாளர் அவர்களுக்கு கீழ் இருந்ததும் இதனால் தெரியவரும் உண்மை.இவர்கள் கூறும் இன்னும் ஒரு பொய் வன்னியர் என்ற சாதி இலங்கையில் இல்லை.வன்னியர் பள்ளி சாதியினர் அவர்களுக்கும் இலங்கை வன்னியருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுபவருக்கு ஒரு தகவல் இலங்கையிலேயே கிடைத்துள்ளது.
http://battinaatham.com/description.php?art=1492
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் கோவிலில் கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஆய்வு செய்தபோது, சிலையில் மணி நாகன்பள்ளி எனும் தமிழ்ப்பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆதியான இலங்கையில் பூர்வீக இனக்குழுக்களில் ஒன்றாக காணப்பட்ட தமிழர் மூதாதயரான நாக வம்சத்தினர் இந்துமதத்தில் தங்களை இணைத்துக்கொண்ட காலப்பகுதியில் விநாயகர் வழிபாட்டை கடைப்பிடித்தனர் என்பதுக்கு இந்த விநாயகர் சிலை சான்றாகும். ஆதியில் வந்தாறுமூலையை ஆட்சி செய்த குறுநில அரசுகளான வேளிர்குல நாக வம்சத்தினர், நாக வழிபாட்டையும் விநாயகர் வழிபாட்டையும் ஒருங்கிணைத்து கோவில் அமைத்து வழிபட்டிருந்தனர்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் கோவிலானது ஆதியில் வந்தாறுமூலையை ஆட்சி செய்த குறுநில அரசுகளான வேளிர்குல நாக வம்சத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும். இங்கு கிடைத்த சான்றுகளை தமிழ்ப்பிராமி வரிவடிவ வளர்ச்சியின் அடிப்படையிலும்; பெருங்கற்கால பண்பாட்டுச் சான்றின் அடிப்படையிலும் கி;.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாகும். இலங்கைத் தமிழரின் ஆதிகால வரலாற்று மூலாதாரமாகவும் நாகரின் பண்பாட்டுச் சின்னமாகவும் பெருங்கற்கால பண்பாட்டு நாகரின் கலையாற்றலையும் காட்டுகின்றன. பாற்சேத்துகுடா நாகரின் வழிபாட்டுத் தலமாகவும் அரண்மனையாகவும் ஆதியில் காணப்பட்டதாக பேராசிரியர் தெரிவித்தார்.
இந்த பள்ளி வன்னியரா என்று ஆராய்ந்து சொல்லமுடியுமா என்றால் அதற்க்கும் பதில் இருக்கும் இந்த பள்ளிக்கு வன்னியருக்கும் தொடர்பு இல்லை என்று உடனடியாக பதில் சொல்லுவர்ர்கள். தொண்டைமண்ட வெள்ளாளர்,முதலி எல்லாம் போர்குடிகள் உதவி இல்லாமல் தனியே எப்படி இலங்கைக்கு வந்தனர் என்று கேட்டால் அதற்கு பதில் கிடைக்குமா?என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் வாயேலே கிடைக்கும் பதிலே வன்னியர் யார் என்ற அனைவரது கேள்விக்கும் விடையை கொடுக்கும்.
பனங்காமபற்று குலசேகர நல்ல மாப்பாண வன்னியனாரிடம் சாதி வெள்ளாளன் ஆளவயினார கந்த உடையார் தனக்கு முதலி பட்டம் வேண்டும் என்று கேட்டதால் முதலி பட்டம் கொடுத்து அவனை சங்கைபண்ணி முதலி என்று அழைத்து அனைவரும் உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் பற்றிய விவரங்கள் அந்த ஓலையில் உள்ளது.இப்படி வெள்ளாளருக்கு சலுகை கொடுத்த வன்னியரை இப்போது வெள்ளாளர்குடியில் இணைத்து வன்னியர் என்ற பெயரை மறைத்த வரலாறை செய்ததும் இந்த முதலி வெள்ளாளர்களே.
ஓலையை எழுதியவர் பரநிருபசிங்க முதலி என்று உள்ளது. செப்பேடு எழுதிய காலத்தில் அதை எழுதியவர் படையாண்டவர் என்று இருந்தது இந்த இடைபட்ட காலத்தில் முதலி என்பது பட்டமாக மாற்ற பட்டது எண்பதுக்கு ஆதாரம் இந்த மாற்றமே.
பனங்காமபற்று பற்றியும் அதில் இருந்த வன்னியர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ள கருத்துகள்.
யாழ்ப்பாண அரசனுக்கு உரிய நிலத்தில் ஒரு காலும் டச்சு கம்பனிக்கு கொடுக்க பட்ட நிலத்தில் ஒரு காலும் வைத்து இருப்பார்கள் என்று கூறுவதன் மூலம் இவர்கள் இருவருக்கும் அடங்காமல் இருந்தனர் என்று கூறியுள்ளனர்.போர்துகீசியர்களுக்கு அடங்காமல் இருந்ததை போல் தங்களுக்கும் தொல்லை கொடுத்ததும் வரி,பணம் கொடுக்கமால் இருந்து உள்ளதாக டச்சு காரர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.அவர்களை கம்பனி முன் விசாரணைக்கும், வரி வசூல் கேட்டும் வரமறுத்தும் உள்ளனர் என்றும்,பனங்காம பற்றின் ஆட்சியாளர் கயிலாய வன்னியர் 12 -14 வருடங்கள் தொடந்து வரி கொடுக்காமல் நேரில் வராமலும் இருந்துள்ள குறிப்பும் உள்ளது.
கயிலாய வன்னியர் இறந்த பின் அவர் மருமகன் காசிய நைனார் காலத்தில் எல்லா வன்னியரும் கம்பனிக்கு நெருக்கமாகவும்,
கண்டியனார் என்ற வன்னியர் தலைவரும்,வயதான புண்ணிபிள்ளை என்பவரும் 2 யானைகளை கொடுத்து பாதுகாப்பை உறுதிசெய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வன்னியர்களை அடக்க முடியாமல் டச்சுகாரர்கள் பயந்து உள்ளனர்.அப்படி அவர்களை அடக்க முற்பட்டால் அவர்கள் கண்டி அரசனுக்கு ஆதரவாக மாறுவார்கள் என்ற பயத்தினால் ஒரு வன்னியரை சிறை வைத்து மூன்று மாதத்துக்கு ஒருவர் மாற வேண்டும் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மரியாதைக்கு ஓரு ஆரராட்சியும் ஒரு டச்சு காரரும் நிறுத்த பட்டு இருந்தனர். டச்சு ஆவணம் எல்லாம் வன்னியர்களை தாங்கள் கீழ் இருந்த அரசர்கள் என்றே கூறுகிறது.
ஏழு வன்னிய அரசர்கள் இருந்ததாகவும் அவர்களை பாட்டும்-மேல தாளம் வைத்து அழைத்துவரபட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒருமுறை சிலோன் கவர்னர் நல்லூர் வந்த போது பாட்டும்-மேல தாளம் வைத்து கூப்பிடாத காரணத்தால் கவர்னரை சந்திக்க மறுத்து விட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் பின்னர் தான் வன்னியர்கள் பிறப்பு உரிமை கம்பனியின் உரிமை என்றும் அவர்கள் சந்ததியினர் வெள்ளாளர்களை விட உயர்ந்த சாதியினர் இல்லை என்றும் 1697 ம் வருடம் ஹென்றிக் ஜ்வார்டேச்ரூன் என்பவர் குறிப்பு உள்ளது.இந்த வருடத்துக்கு பின்னர் தான் வன்னியர் என்ற சாதியை ஒழித்து வன்னியர் என்பதை பட்டமாக அனைவருக்கு கொடுக்க ஆரம்பிக்க பட்டது.
இந்த வருடத்துக்கு பின்னர் தான் வன்னியர் எனபதை ஒரு பட்டமாக வெள்ளாளருக்கு கொடுக்க ஆரம்பித்தனர்.
கேரளாகாரன் வருகையும் அவர்களுக்கு டான் என்ற பட்டதை 100 டாலர் என்று விற்க்க ஆரம்பித்து கடைசியில் 10 டாலர் என்ற குறைந்த விலைக்கும் விற்று காசு பார்த்தனர். அதே போல் முதலியார் பட்டமும் விற்பனை செய்ய பட்டு உள்ளது.
பரராசசேகரன் பட்டயத்துக்கு பின் எழுத பட்ட அதே சிதம்பர மடத்து தர்மசாசனம்.இதில் உள்ள மாற்றம் ஒன்றே இலங்கையில் நடைபெற்ற வன்னிய சாதி ஒழிப்பை அனைவரும் புரிந்து கொள்ள உதவும்.
கீழே கொடுக்க பட்ட இந்த ப்ளாக்கை படிக்கும் எல்லோருக்கும் இவர்கள் எழுதும் கதைக்கு மூலம் பரராசசேகரன் எழுதிய செப்பேடும் அந்த பட்டயத்தை எழுதியவர்கள் பரராசசேகர மகாராசா,
தில்லியூர்சேனாதிபதியார், சிங்கையூர் படையாண்டவர், தில்லியூர் குலதுங்கர்,பர நிருப சிங்கர்குல நிருவாங்க படையாராச்சியாரவர்கள்
என்றும் பட்டயம் எழுதினது "பரநிருப சிங்க படையாண்டவர்".என்ற தகவலை மட்டும் மறைத்து அதன் பின்னர் உள்ள செப்பேடு பற்றி மட்டும் கூறும் காரணம் இந்த நால்வரும் ஒரே குலம் அதாவது வன்னியர்கள் என்று கூறப்பட்டு உள்ளதே காரணம். அவர்களை பற்றிய குறிப்பை மறைக்கும் இலங்கை வரலாறு கூறும் புத்தகமும் எழுத்தாளர்களும் வன்னியர்கள் யார் என்பதை மறைக்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டு வருவதை உலகமே அறியும்.அந்த வரலாறை மீட்டு எடுக்கும் காலம் இப்போது வந்து விட்டது.
இந்த ப்ளாக் எழுதியவர் . தற்போது எழுதிய புது பதிவில் கூட தன் வன்மத்தை காட்டி இருக்கும் செய்தியை பார்க்கும் போது இவர்களுக்கு வன்னியர் என்ற ஒரு சாதி இல்லை என்றும் அதையும் பள்ளி என்ற சாதி வன்னியர் என்று மாறிஇருப்பதாக கூறியுள்ளார்.அதன் மூலம் அவரது வரலாற்று அறிவை அவரே வெளியே வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்.அவரே கடைசியில் திருநெல்வலி gazetteer இல் இருந்து வன்னியர்கள் மறவர்களாக இருக்கலாம் என்று முடித்து உள்ளார்.
இவர்களையும் இவர்களின் கருத்து திணிப்பை நினைத்து சிரிப்பதா என்று தெரியவில்லை.ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது தென் இந்திய வரலாற்றில் மட்டும் இல்லாமல் இலங்கை வரலாற்றிலும் வன்னியர் இன்றி வரலாறை பேச முடியாது எனபது உறுதியாக கூற முடியும்.
http://viyaasan.blogspot.in/2013/11/blog-post_30.html
சிதம்பரத்தில் தற்போது உள்ள மடத்தின் மீதம் உள்ள சொத்துகள்
வன்னியர்கள் மீது மக்கள் வெள்ளாளர்களை விட கூடுதலான மதிப்பு வைத்து உள்ளனர். அவர்கள் இந்த மேலாண்மை காரணமாக கல்வி மீதும் பணம் மீதும் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டனர் என்றும் நாங்கள் சாதாரணமான வெள்ளாளர்கள் இல்லை என்றும் போதி மரம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் முன்னர் இலங்கைக்கு வந்தவர்கள் என்று கூறியதாக 1851 ம் ஆண்டு எடுத்த குறிப்பில் புறோய்டே குறிப்பிட்டுள்ளார். தங்கள் குலத்து பெண் வெள்ளாளரை திருமணம் செய்தால் ராஜாவின் ஆட்சி காலம் என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் இப்போது அந்த நிலமை ஏறப்பட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறியதாக குறிப்பு உள்ளது.
இந்த குறிப்பு ஒன்றே வெள்ளாளர் வேறு வன்னியர் வேறு என்றும் இலங்கையில் வன்னியர் என்பவர் யார் என்ற வரலாறை உலகுக்கு சொல்லும்.
கலப்பு திருமணத்துக்கு இருந்த கடுமையான சட்டங்களை பற்றி கூறிய குறிப்பில் பிற்காலத்தில் வன்னிய்ருடன் வெள்ளாளர்கள் கலப்பு திருமணத்தின் காரணமாக சாதிய முறை படிப்படியாக பலமிழந்து இரண்டு இனமும் 50 வருடங்களில் பொதுவாக வெள்ளாளர் தலைமையில் வருவார்கள்.வன்னியர்கள் என்ற பெயர் மறைந்து வெள்ளாளகுடியில் வரும் வன்னியகுடிகளின் வரலாறு இது தான்.
இப்போதும் இலங்கையில் வன்னியர் இல்லை என்று சொல்லும் அறிவாளிகளே இந்த குறிப்பை வெளியிட்டுவிட்டு உங்கள் கதைகளை இனி சொல்லுங்கள்.
வன்னிய குடும்பங்கள் சிங்களவர்களுடன் திருமண உறவு கொண்டு உள்ளனர் என்றும் அப்படி நடந்த திருமணத்தில் அசையும் அசையா சொத்துக்களுடன் 50 குடும்பங்கள் பரிவாரங்களாக அவர்களுக்கு சேவை செய்ய சென்றுள்ளனர்.வன்னியில் இருக்கும் தமிழ் வன்னியர்கள் இந்தியாவில் முருங்கூர் என்ற இடத்தில இருந்து வந்தவர்களின் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் வழிவந்தவர்கள் இரண்டு வன்னியர்கள் பனங்காமத்தில் எஞ்சியிருந்தனர் என்றும் இறுதியாக இருந்த வன்னிய தலைவன் பண்டாரவும் உயிர் இழந்தார்.
கயிலாய வன்னியன் -பனங்காமம்:
வன்னிப் பிரிவுகள் :
பனங்காமத்தை வன்னியர்களின் நாடு என்று குறிப்பட்ட ஒல்லாந்தர்கள்
பனங்காமத்தில் முதலாவது மாப்பாண வன்னியர் ஒருவரை நியமித்த ஒல்லாந்தர்கள். பனங்காமம் வன்னியர்கள் 1679 ம் ஆண்டுக்கு பின்னர் பரந்தன் வெளியோடு சேர்க்க பட்டதாக டச்சு அறிக்கை கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக