|
பிப். 1
| |||
இராசையா சின்னத்துரை உடன்
Sowmiya Narayanan .
க்ஷத்ரியர் என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்கிற வினா எழக்கூடும்.
'சான்றோன்' என்பதுதான் க்ஷத்ரிய என்பது.
சரி, அப்படியானல் இதை எப்படி உறுதி செய்வது?
சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் என்பதை மயிலை சேனி வேங்கடசாமி
அவர்கள் நிரூபித்திருக்கிறார். அத்துடன் சொல்லாராய்சி அறிஞர் தேவனேயப்
பாவாணர் சான்றோன் என்பது ஐரோப்பாவில் இருந்த நைட்ஹூட் என்பதற்குச் சமம்
என்கிறார்.
தமிழகத்தில் பல்வேறு சமூகங்களுக்கும், அவரவர் சமூகம் சார்ந்த ஆவணங்கள்
உள்ளன. உதாரணமாக, வன்னியர்களுக்கு வன்னிய புராணம், நெய்வேலி செப்பேடு
அதுபோல 64 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு திருவண்ணாமலை செப்பேடு
வேளாளர்களுக்கு மரபாள புராணம், அரித்துவாரமங்கலம், தளவாய்புரம்
செப்பேடுகள், என பட்டியல் நீளும். அதுபோலவே சான்றோர்களுக்கு
திருமுருகன்பூண்டி, அவல்பூந்துறை செப்பேடுகள், வலங்கைமாலை
வில்லுப்பாட்டு, வெங்கலராஜன் கதை போன்றவை. இத்தகைய ஆவணங்களின்
குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில், அந்த அந்த சமூகத்திற்கு உரியது
என்னவோ அவற்றை மட்டுமே அது குறித்துக் காட்டுவதுதான்.
அப்படி தமிழ்நாட்டில் எந்த சமூகத்தின் ஆவணங்கள் சூரிய சந்திரகுல
க்ஷத்திரியர்களைக் குறிப்பிடுகிறது?
மேலே நான் குறிப்பிட்ட சமூக ஆவணங்களில் சான்றோர்களுக்கு உரிய ஆவணங்களில்
மட்டுமே சூரிய / சந்திர குலம் என்கிற பதிவுகள் உள்ளன. ("வலங்கை மாலையும்
சான்றோர் சமூக செப்பேடுகளும்" ஆசிரியர் எஸ். இராமச்சந்திரன், உலகத் தமிழ்
ஆராய்ச்சி நிறுவன வெளியீடு) இந்த க்ஷத்ரியர்கள் இன்றைக்கு இருக்கின்ற
எந்த சாதிகளில் கலந்திருக்க வாய்ப்புகள் உள்ளது?
வரலாற்றில் சாணார் என்கிற ஒரு சாதியை நாம் பார்க்கிறோம். இன்றைக்கு
அவர்கள் நாடார் எனப்படுகின்றனர். இந்த நாடார் என்பதை, தமிழ்க்
கல்வெட்டுக்கள் கூறும் 'நாடாள்வான்' என்கிற பதவியுடன் ஒப்பிட்டுப்
பார்க்கலாம். அன்றியும், சாணார்களின் சமூக ஆவணங்கள், வலங்கை மாலை,
வெங்கலராஜன் கதை போன்றவற்றில் தங்களை வலங்கை உய்யகொண்ட க்ஷத்ரியர் என்று
குறிப்பிட்டுக் கொள்ளுகின்றனர். இந்த சாணார்கள், அதில் பெரும் பிரிவினர்
பார்த்தாலே தீட்டு என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்ட 16 - 17
நூற்றாண்டுகளில் ஒரு சிறிய பிரிவினர் 'நிலைமைக்காரர்' அப்படியான
நிலைக்குத் தள்ளப்படவில்லை. இது ஒருபுறமிருக்க, 13ம் நூற்றாண்டு தொடங்கி,
சூத்திரர்கள் அரசியல் ஆதிக்கத்திற்கு வந்துவிட்ட நிலையில், திருவாங்கூர்
சமஸ்தானத்தில்தான் சாணார்களை இப்படிப்பட்ட காணாமை, அதாவது பார்த்தாலே
தீட்டு என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதே காலகட்டத்தில் நெல்லை
மாவட்டத்தில் இந்த அளவுக்கு மோசமான நிலவரங்கள் இருந்ததில்லை.
தமது ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக, சமூகத்தைப் புரிந்துகொள்ளும்
பொருட்டு, வெள்ளைக்கார அதிகாரிகள் 'மாவட்ட மேனுவல்' என மாவட்ட வாரியாக
வரலாற்றை 19 - 20 ம் நூற்றாண்டில் தொகுத்தனர். அவ்வாறு, திருவாங்கூர்
ஸ்டேட் மேனுவல், திவான் ஆர். நாகமையா என்பவரால் தொகுக்கப்பட்டது. அதில்
சாணார்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மிகத் தெளிவாக, 'வலங்கை உய்யக்கொண்ட
இரவி குல (சூரிய குல) க்ஷத்திரியர்கள்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
-ப்ரவாஹன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக