|
5/10/16
| |||
தமிழ்ச் செல்வன் தமிழ்
இந்திய துணைக் கண்டத்தில் வாழும் அனைவரும் ஒரே தேசிய இனமா?
தமிழ் தமிழர், தமிழ்த் தேசிய இனம், தமிழ்த் தேசியக் குடியரசு என்பதற்கு
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் முன் வைக்கும் நாம் ஒரு தேசிய இனம்
என்கின்ற கருத்தியல் பிரிவினை வரலாறு என்ற நூலில் பக்கம் 22, 23ல்
பதிவாகியுள்ளது.
( ம.பொ.சி. அவர்களின் இந்திய ஒன்றியத்தை ஏற்பு, 1938ல் இந்தி ஆதரவு,
பிராமணிய ஆதரவு ஆகியவற்றை தமிழ்த் தேசியர்கள் ஏற்கவியலாது.
எனினும் ம.பொ.சி. அவர்களின் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கின்ற
கருத்தியலும், தமிழ் இலக்கியங்கள் குறித்த கருத்தியலும், தமிழ்த் தேசிய
இனத்திற்கான கருத்தியலும், ஆங்கில மறுப்பும், எல்லை மீட்சியும்
தமிழர்களால் எழிச்சியோடு முன்னெடுக்கத் தக்கவையே.)
இதோ: ம.பொ.சி. பதிவு செய்கிறார். ”இந்தியர் அனைவரும் பிரிக்க
முடியாத-பிரிந்து வாழத் தேவையில்லாத ஒரே இனத்தார். ஆகையால், மொழிவழி
இனமெனப் பிரிப்பது தவறு என்று முணுமுணுக்கின்றனர் சிலர். இந்தியர்
அனைவரும் ஒரே இனமாக இருக்கிறார்கள் என்பது படுபொய்; இருக்க வேண்டும்
என்பதும் பகற்கனவு.
குமரி முதல் இமயம் வரை உள்ள மக்கள் கடலால் பிரிக்கப்பட்டாது, மலையால்
தடுக்கப்படாது, ஒரே சமுதாயமாகக் கலந்து வாழும் வகையில நிலம்
அமைந்திருப்பது உண்மைதான்.
ஆனால், வாழக்க்கைப் பண்புகள், வாயாரப் பேசும் மொழிகள், இயற்கையின்
தட்பவெப்பநிலை ஆகியவற்றால் மக்கள் பலவேறாகப் பிரிந்து வாழ்கின்றனர்
என்பதை மறுப்பதற்கில்லை.
இனியும் அப்படித்தான் வாழ்வார்கள்-வாழவும் வேண்டும்-என்பதையும் மறுப்பதற்கில்லை.
கண்கண்ட இந்த உண்மைகளை மறந்துவிட்டு இந்தியர் அனைவரும் ஒரே இனத்தார்
என்று கதையளப்பது மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையைப் பறிக்கப்
பயன்படலாமே யொழிய உறவை வளர்க்க ஒரு சிறிதும் பயன்படாது.
கன்னியா குமரியிலுள்ள இந்தியனும், காஷ்மீரில் உள்ள இந்தியனும் ஒரே வித
உணவையுண்டு, ஒரேவிதமான உடையுடுத்தி, ஒரே மொழி பேசி வாழுங்காலம்தான்
’இந்தியர்’ அனைவரும் ஒரே இனம் என்பது பலிக்கும் காலமாகும்.
ஆனால், அந்த காலம் என்றேனும் ஒரு நாள் வரும் என்று எந்தப் புத்திசாலியும்
இதுவரை கூறவில்லை; இனியும் கூறுவர் என்று நம்புவதற்கில்லை.
"ஆம்; ” தமிழ்நாடு தமிழருக்கே என்பது இன்று வெற்று கோஷமல்ல; தேசிய
விரோதிகளின் கூக்குரலுமல்ல; தமிழினத்தின விடுதலை ஆர்வத்தை
வெளிப்படுத்துவதாகும்.”
”தமிழ், தமிழர், தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியக் குடியரசு என்பதற்கு
இதைவிட என்ன விளக்கம் தேவைப்படுகிறது.?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக