திங்கள், 20 மார்ச், 2017

தலாக் இசுலா விவாகரத்து திருமணம்

aathi tamil aathi1956@gmail.com

9/10/16
பெறுநர்: எனக்கு
தமிழரசன் அப்துல் காதர்
தலாக் என்பது இனி இணைந்து வாழ முடியாது என முடிவெடுத்த கணவன் மனைவி இடையே
கணவன் தலாக் என்று இஸ்லாம் கூறிய நடை முறையை பின்பற்றுகிறான் அது அந்த
மனைவி அடுத்த மாதவிலக்கு வரை கணக்கு . இந்த நாட்களில் அந்த மனைவிக்கு
பொறுப்பாக இருந்து கணவன்தான் பாதுகாக்கவேண்டும். இந்தநாட்களில் உடலுறவு
வைத்துக்கொள்ளக்கூடாது என்பது கட்டாய சட்டம்.
முதல் மாதவிலக்கு முடிந்தவுடன் கணவன் மனைவிக்கிடையே இன்னும் ஒற்றுமை
ஏற்படாவிட்டால் அவர்கள் மீண்டும் ஒரு மாதவிலக்கு காலம் வரை தலாக்கை
தொடரவேண்டும் ( இது இரண்டாவது தலாக் காலம் ), இந்தக் காலகட்டத்திலும்
கணவன் தான் அந்த மனைவிக்கு பொறுப்புதாரி. இந்த காலகட்டத்திலும் உடலுறவுக்
கொள்ள தடை செய்யப்படுகிறது . மாதவிலக்கு முடிந்து கணவன் மனைவி ஒற்றுமையாக
இருக்க ஆசைப்பட்டால் இல்லறவாழ்வை தொடரலாம் இல்லை என்றால் மூன்றாவது தலாக்
தொடர்கிறது அடுத்த மாதவிலக்கு வரை . இந்த காலக்கட்டத்திலும் உடலுறவுக்
கொள்ள கட்டாயத் தடை . மனைவியை கணவன்தான் பாதுகாக்கவேண்டும். மூன்றாவது
மாதவிலக்கும் முடிந்தது
இதற்கிடையே உள்ள இரண்டு தலாக் ஆரம்பத்திலும் பெண்ணின் சார்பாகவும் ஆணின்
சார்பாகவும் இரண்டு இரண்டு பேர்கள் அதற்கு மேற்பட்டோர் சாட்சியாக இருந்து
ஒரு மார்க்க அறிஞர் கருத்து அடிப்படையில் சமாதானம் செய்து வைக்கவேண்டும்.
அதை போன்றே மூன்றாவது மாதவிலக்கு முடிந்ததும் இந்த சமாதான பேச்சுவார்த்தை
நடத்தப்படும். அதன் பின்னும் இருவரிடையே ஒற்றுமை ஏற்படாவிட்டால்
இருவருக்கும் விவாகரத்து என்று அறிவிக்கப்படும். ஆனால் ஒரு நிபந்தனை
மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் மார்க்கம் அனுமதிக்காது .
அப்படி அதே பெண்ணை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் அந்த பெண் மற்றொரு
ஆடவனை மணந்து அந்த ஆண் இது போன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு தலாக்
கொடுத்த பின்பே . முன்னாள் மனைவியை திரும்ப திருமணம் முடிக்க முடியும் .
இல்லை என்றால் முடியாது . முத்தலாக் என்பதின் பின் இவ்வளவு நடைமுறை
இருக்கிறது ஆண்களுக்கு. இதுதான் இஸ்லாமியச் சட்டம்.
ஆனால் குலா என்கிற உரிமை பெண்களுக்கு இருக்கிறது அவர்களுக்கு கணவனுடன்
சேர்ந்து வாழ விருப்பமில்லையென்றால் இரண்டு தரப்பின் சாட்சியோடு ஒரு
மார்க்க அறிஞர் முன்னிலையில் ஒரு தடவை அறிவித்து விட்டு அப்பெண்
விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம். அடுத்த மாதவிலக்கு வரை இதன் காலகட்டம்
தொடரும். முதல் மாதவிலக்கு முடிந்ததும் விருப்பப்பட்ட ஆடவனை மணந்துக்
கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக