|
பிப். 24
| |||
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........
(கலித்தொகை, 3)
இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும் ஆகிய ஈரத்தை
உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த
கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய
இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற
அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....
தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்
(கலித்தொகை, 2)
(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோது, முதியவன் = அயன்,
பிரம்மா; அடங்காதார் = அரக்கர், மிடல்சாய = வலிமை கெட,
மடங்கல் = சிங்கம், சினை = கோபித்து, மூவெயில் = திரிபுரங்கள், மூன்று கோட்டைகள்)
இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை
அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக்
குறிக்கப்படுகிறது.
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே.....
(புறம் :91)
(மிடறு - கழுத்து)
என்கிறார்.
பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி
போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல)
நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.
இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும்
குறிப்பிடப்படுகின்றன.
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முது முதல்வன்
(புறம் :166)
புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும்,
ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன.
நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது... ஒரு பக்கம் பெண்வடிவு
ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள்
வாழ்த்து)
ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்
என்று மற்றொரு
புறநானூற்று ப்பாடல் (56) குறிக்கிறது.
(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி,
மிடறு = கழுத்து)
அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும்
விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று
பொருள்படுகிறது.
சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும்
நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன.
கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று
குறிப்பிடுகிறது.
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’
என்று சிவனைக் குறிப்பிடுகிறது.
இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே
எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய -
புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை
ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ..... நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ-
கலித்தொகை , கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் =
தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் - குறிப்பாக, காத்தலும் அழித்தலும்
சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து - சிவபெருமான் படைத்தல்,
காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான்
என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.
tamilvu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக