ஞாயிறு, 19 மார்ச், 2017

ராசீவு 26 தூக்கு தமிழகம் போராடியது 13 ஈழத்தமிழர் 50லட்சம் நிதி பொதுமக்கள் கருணாநிதி துரோகம் பேரறிவாளன் ஒற்றுமை

aathi tamil aathi1956@gmail.com

பிப். 24
பெறுநர்: எனக்கு
Mugilan Swamiyathal
19.4.2000 அன்று-கருணை மனுவை நிராகரியுங்கள் –
‘முதலமைச்சர்’ மு.க.வின் பரிந்துரை; 18.02.2014-திமு
கவினால் தான் இந்தத் தீர்ப்பு கிடைத்தது
– மு.க. அறிக்கை
==============================
=============
மறக்க முடியுமா- தூக்குத் தண்டனையில்-
எட்டப்பன் கருணாநிதியின்
துரோகத்தை மறக்க முடியுமா?
==================================
" தூக்குத் தண்டனையை மாற்ற வேண்டுமென்றால்,
அதற்கு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.
எனது ஆட்சியில் தியாகு , கலியபெருமாள்
ஆகியோர் இவ்வாறு தூக்குதண்டனை மாற்றப்பட்டது"
- தி.மு.க., தலைவர், கருணாநிதி அறிக்கை
==============================
================
-1998 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி வழக்கில்குற்றம்
சாட்டப்பட்டு இருந்த 26 தமிழர்களுக்கும்(பதிமூன்று ஈழத்தமிழர்,பதிமூன்று
தாயகத்தமிழர்)
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தடா சட்டம் மூலம் இத்தீர்ப்பு வழங்கப்பட்டதால்
அப்பீல் சென்னை உயர்நீதி மன்றத்தில் செய்ய முடியாது. எனவே வழக்கு டெல்லி
உச்சநீதிமன்றத்தில் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு மூலம்
அப்பீல் செய்து நடத்தப்பட்டது.
மரணதண்டனை ஒழிப்பு நிதிக்குழு அமைக்கப்பட்டு, மக்களிடம் இருந்து
தெருத்தெருவாக வசூல் செய்து,
ஐம்பது லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தொகை தண்டல் செய்யப்பட்டு வழக்கு நடத்தப்பட்டது.
-1998-1999 ஆண்டுகளில் தமிழகம் முழுக்க மரணதண்டனை ஒழிப்பு மாநாடு,
பொதுக்கூட்டம், தமிழகம் முழுக்க மரணதண்டனை ஒழிப்பு பிரச்சார பயணங்கள்
அனைத்தும் கருணாநிதி அரசால் தடை செய்யப்பட்டு, பெரும்பாலான நிகழ்வுகள்
நீதிமன்றதில் உத்தரவு பெற்றே நடத்தப் பட்டது.
-1999 -இல் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு
மட்டும் தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டது .
-1999 -நவம்பர்இல் பேறறிவாளன்,முரு
கன், சாந்தன்,
நளினி ஆகிய நால்வரின் தூக்கு தண்டனையை
தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தை கூட்டி
ரத்து செய்யக் கோரி, பல்லாயிரக் கணக்கானோர்
பங்கேற்ற பேரணி மன்றோ சிலை முதல் கோட்டை
நோக்கி நடந்தது.
அய்யா பழ.நெடுமாறன், தோழர்.கார்முகில்,
தோழர்.மணியரசன், தோழர் .தியாகு,
தோழர்.மெல்கியோர், தோழர்.ராமகிருஷ்ணன்
மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
வரலாற்று சிறப்புமிக்க இப்பேரணியில் பங்கேற்றவர்களில்
50% பேர் தமிழ்நாடு மார்க்சிய-லெனினிய கட்சி
(புரட்சிகர இளைஞர் முன்னணி) தோழர்களாவர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் 1௦௦௦ க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டோம்.
மற்ற 50% பேர் தமிழர் தேசிய இயக்கம், த.தே.பொ.க.,
பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் இயக்கம்,
உ.ம.வி.இ., த.ஒ.வி.இ., தோழர்களும்,
தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
இன்று ஈழவிடுதலை பற்றி பேசக்கூடிய
வேறு எந்த அமைப்பு தோழர்களும்
இந்தப் பேரணியில் பங்கேற்கவும் இல்லை.
இப்பிரச்சனையை கண்டு கொள்ளவும் இல்லை.
பேரணி இறுதியில் தலைமை செயலகத்தில்,
அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களை நேரில்
சந்தித்து, அவர் ஏற்கனவே அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தூக்குதண்டனையை
மாற்றியதை போல் இதையும் மாற்ற சுட்டிக்காட்டி பேசப்பட்டது.
-இக்காலத்தில்(1998-1999,1999-2004) மத்தியில்
அமைந்திருந்த வாஜ்பாய் ஆட்சியில் முதல் காலத்தில் அ.தி.மு.க; இரண்டாவது
காலத்தில் தி.மு.க;
இரண்டு காலத்திலும்(1998-2004)
பா.ம.க., ம.தி.மு.க., ஆகிய தமிழக கட்சிகள்
கூட்டணி அமைத்து இருந்தது.
-2001 வரையிலும், பின்பு 2006-2011 வரை
தி.மு.க.தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும்,
1996-2013 வரை இடையில் ஒரு ஆண்டை
தவிர மத்தியில் ஆட்சியில் இருந்தும் ,
இந்த தூக்குதண்டனையை மாற்ற
பல முறை கேட்டும்,
பல்வேறு போராட்டம் நடத்தியும்,
எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல எதையும் கண்டு கொள்ளாமல் தனது
சொத்தை பெருக்குவதையும் , தனது குடும்பத்தை அதிகார மையத்தில் அமர்த்துவதை
மட்டுமே வேலையாக வைத்துக் கொண்டார்.
இன்று நீலிக் கண்ணீர் வடித்துக்கொண்டும்,
பொய்யாக நடித்துக் கொண்டும், தமிழக மக்களை
ஏமாற்றப் பார்க்கிறார் துரோகி கருணாநிதி....
( 16 ஏப்ரல் 2013 இல் எழுதியது)
==============================
=========
19.4.2000 அன்று - மூன்று பேரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும்
ஆளுநருக்கு ஆலோசனை வழங்க திமுக அமைச்சரவை முடிவெடுத்தது.
திரு . கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர்
21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார்.
இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில்
மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்தது
==============================
========
கருணை மனுவை நிராகரியுங்கள் –
‘முதலமைச்சர்’ மு.க.வின் பரிந்துரை
_____________________________________________
_______________
கருணாநிதி Flashback : கருணை மனுவை நிராகரியுங்கள் ‘முதலமைச்சர்’
மு.க.வின் பரிந்துரை“தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான
நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதலமைச்சர் அவர்கள்
தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண
தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த
வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு இந்த
அமைச்சரவை ஆலோசனை வழங்குகிறது”.
- இது கடந்த 19-4-2000 அன்று அப்போதைய திமுக அரசின் முதல்வர்
மு.கருணாநிதி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் அறிக்கை.
கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் அவர்கள்
21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு
தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத்
தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட
கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதன் மீது மத்திய அரசின்
உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் குடியரசுத் தலைவர் இந்த
கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுட்டது.
இப்படி அமைச்சரவை கூட்டி முடிவெடுத்த திமுக தலைவர் மு.கருணாநிதி தான்
இன்று தாங்கள் இரண்டு தினங்களுக்கு முன் திருச்சி மாநாட்டில் கோரிக்கை
வைத்ததால் தான் ராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ரத்து
செய்யப்பட்டிருக
்கிறது என்கிற ரீதியில் இன்று அறிக்கை விடுத்திருக்கிறார்.
(தொடர்புடைய லிங்க் : http://
www.seythigal.com/?p=2177 )
திமுகவினால் தான் இந்தத் தீர்ப்பு கிடைத்தது –
மு.க. அறிக்கை
www.seythigal.com
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன்
ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர்
மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை :
(18 பிப்ரவரி 2014)
24 பிப்ரவரி 2014, 04:47 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக