ஞாயிறு, 19 மார்ச், 2017

இடுக்கி மலையகம் தொழிலாளர் 1956

இடுக்கி மலையகம் தொழிலாளர் 1956

aathi tamil aathi1956@gmail.com

1/11/16
பெறுநர்: எனக்கு
திராவிடத்தை வீழ்த்தப்போகும்
இடுக்கி மலையக தமிழர்களி
ன் கண்ணீர்.....

1956- ம் ஆண்டின் துவக்கத்தி
ல் தேவிகுளம் பீர்மேடு முழுக்க
முழுக்க தமிழர் பகுதி...பெரிய
குளம் தாலுகா மதுரை ஜில்
லாவிற்குட்பட்ட பகுதி...கம்பம்
குமுளி தாண்டினால் வண்டிப்
பெரியாறு பீர்மேடு பாம்பனா
று வரை தமிழ் தமிழ் தமிழ் மட்
டும்தான்...

இந்த பக்கம் உடுமலைப்பேட்
டை தாண்டி சின்னாறு மறை
யூர் வாகுவாரை காந்தலூர்
சட்டமூணாறு தலையார் நயம
க்காடு பெரியபாறை மூணாறு
வரை தமிழ் மட்டுமே பேச்சு
மொழி...

மூணாறிலிருந்து கிராம்ஸ்லே
ண்ட் மாட்டுப்பட்டி சிட்டிவாறை
செண்டுபாறை எல்லப்பட்டி
குண்டல நெற்றிக்குடி அருவிக்
காடு டாப்ஸ்டேசன் கோவிலூர்
வட்டவடை....அங்கிருந்து கிளா
வரை பேரீச்சம் வழியாக கொடைக்கானல் என அகண்ட
தமிழகம் செழித்துக்கிடந்தது..

இன்னொரு மலைப்பகுதி
மூணாறில் இருக்கிறது...மூணாறிலிருந்து
உடுமலைப்பேட்டை செல்லும்
சாலையில் தென்மலை விலக்
கிலிருந்து ஒரு சாலை வலது
புறம் திரும்பி மேல் நோக்கிச்
செல்லும்...அந்த வழியாகப்ப
யணித்தால் சோத்துப்பாறை
வழியாக குண்டுமலையை
அடையலாம்...பிரமிப்பான பய
ணமாக இருக்கும் அந்த பயணம்...

மூணாறிலிருந்து சிவன்மலை
வழியாக ஒத்தப்பாறை வழி
மாங்குளம் வனம்வரை தமிழர்
கள் மட்டுமே...

மூணாறிலிருந்து போடி செல்லும் சாலையில் குறுக்கி
டும் லாக்காடு சின்னக்கானல்
சூரியநல்லி பி எல் ராம் ஆனையிறங்கல் பூப்பாறை
வழியாக போடிமெட்டுவரை
தமிழர் கூட்டம் உழைத்துக்க
ளைத்து கிடந்தது..

பூப்பாறையிலிருந்து சாந்தம்
பாறை வழியாக நெடுங்கண்
டம் கட்டப்பனை உடும்பஞ்சோ
லை ஏழாம் மைல் வழியாக
குமுளி வரை தமிழர்கள் நிர
விக்கிடந்தார்கள்...

பூப்பாறை யிலிருந்து ராஜகு
மாரி ராஜாக்காடு அங்கிருந்து
அடிமாலி வரை...அடிமாலியி
லிருந்து ஆனைச்சால் பள்ளி
வாசல் சொக்கநாடு வழியாக
மூணாறு வரை எங்கு நோக்கி
னும் தமிழன் தமிழன்...

குட்டியாறும் கன்னியாறும் நல்லதண்ணி ஆறும் களித்துக்கூடிய மூணாறு நக
ரம் 1956- மொழிவழிப்பிரிவி
னைக்குப்பின்னால் தன் ஆக
ப்பெரிய ஆளுமையை இழந்து
விட்டது...

எந்த ஆங்கிலேய வியாபாரி
மன்றோ மூணாறு மண்ணுக்
குச்சொந்தமான முதுவான்க
ளை இடைமலைக்குடிக்கு விர
ட்டியடித்தானோ...அந்த மூணா
றிலிருந்து விரைவில் முதுவா
னின் இனத்தோன்றல்கள் தமி
ழகம் நோக்கி விரட்டியடிக்கப்
படலாம்...

அழகு செழித்த அழகிய வனா
ந்திரங்கள் மொழிவழிப்பிரிவி
னைக்குப்பின்னால் அழகு இழந்து தவிக்கிறது...

நூற்றி நாற்பதாண்டுகளாக
இடுக்கி மலையகத்தில் உழை
த்துக்களைத்த மக்கள் தங்கள்
பெரு உழைப்பை மலையாளி
களுக்கு தாரைவார்த்துவிட்டு

அகதி களாக விரைவில் தாய
கம் திரும்பலாம்...

பர்மாவிலிருந்தும் இலங்கை
மலையகத்திலிருந்தும்...காவி
ரி பிரச்னையின்போது கருநா
டகத்திலிருந்தும் அகதியாக
வந்தவர்கள் கேரளாவிலிருந்
து வரமாட்டார்கள் என்பதற்கு
யார் உத்திரவாதம் தருவது...

இத்தனையையும் நாங்கள்
இழந்து தவிக்க மூலகாரண
மாகயிருந்து பேரம் நடத்தியது
ஈவேரா என்பதை  எங்கள்
முன்னோர்கள் அறியவில்லை

அதனால் அன்று அவர் பெரி
யார்...இன்று நாங்கள் அந்த
துரோகத்தின் சூத்திரதாரியை
அறிந்துகொண்டோம்...

மூணாறு மலையகத்து அப்பா
விகளின் சாபம் ஒருநாளும்
நீர்த்துப்போகாது...

திராவிடத்தை வீழ்த்தப்போவ
து இடுக்கி மலையகத்து மக்க
ளின் கண்ணீரும்தான்...

நனைந்த விழிகளுடன்
ச அன்வர் பாலசிங்கம்
நாம்தமிழர் கட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக