|
7/5/16
| |||
Nakkeeran Balasubramanyam
தமிழ் மொழியா இல்லை திராவிட மொழியா 03
அவ்வளவுதானா? வேறு சான்று ஏதும் இல்லையா? ஏன் இல்லை! வடமொழியாளர்களே
இப்படித் தமிழைத் திராவிடம் என்று திரித்ததற்கு இன்னும் பல்வேறு
சான்றுகள் இருக்கின்றன, பாருங்கள். எப்படிப் பார்த்தாலும் தமிழ் என்பதே
மொழிப் பெயர், அதுவே இனப் பெயரும் ஆகும். தமிழ் எனும் பெயரை, அதன் ஒலி
எழுத்துக்கள் அனைத்தையும் மாற்றாமல், பெரும்பகுதியைத் தமிழ் எனும்
ஒலியோடு ஒட்டியே பல்வேறு நாட்டவரும் வழங்கி வந்துள்ளனர். ஆரிய மொழிக்
கூட்டத்தில்கூட அவ்வாறே ‘தமிழ்’ எனும் சொல் வடிவத்தை வழங்கியுள்ளனர்.
மகாவம்சம் எனும் சிங்கள வரலாற்று நூல் ‘பாலி’ எனும் மொழியில்
எழுதப்பட்டது. இதில் ஆங்காங்கே தமிழரைக் குறிக்க, மிகச் சிறிய ஒலி
மாற்றத்தை வைத்துத் ‘தமிளோ’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கனிசுத்தானத்தில் ஒரு நகரம் ‘தமிழ்க்’ என அழைக்கப்பட்டுள்ளது. அங்கு
வாழும் இசுலாமியர்கள், தமிழ் கலந்த சொற்களைப் பேசுவதாகவும், ‘மாகறல்
கார்த்திகேயனார்’ தமது ‘மொழிநூல்’இல், பக்கம் 19இல் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து மரபைச் சார்ந்த, கிரேக்க நாட்டவரான வரலாற்றறிஞர் ‘தாலமி’
(PTOLEMY கி. பி 100 – 170) என்பார், தமிழகம் குறித்துத் ‘தமிரிகா’ என்று
குறிப்பிட்டுள்ள
ார். கிரேக்கத்தில் ‘கா’ என்பது நாட்டைக் குறிப்பதாகும். ஆக, ‘தமிழ் +
நாடு’ என்னும் பொருளில் அவர் ‘தமிரி + கா) என்று குறிப்பிட்டுள்ளார்
என்றும்,
நேபாளத்தின் தெற்குப் பகுதியில் வாழும் பழங்குடியினர் ‘திமில்’ என
அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழியும் தமிழோடு பெரிதும் ஒத்துப்
போகிறது என்றும்,
கங்கையாற்றின் அக்காலத்தையத் துறைமுகத்தைத் ‘தமிழுக்கு’ என்று அழைத்துள்ளதாகவும்,
1573இல் தாரநாத் என்பவர் தமிழைத் ‘த்ரமில்’ என்று தமது நூலொன்றில்
குறிப்பிட்டுள்ளதாகவும்,
அறிஞர் வி. கனகசபைப் பிள்ளை தமது ‘தமிழ்ப் பெருமை’ எனும் கட்டுரையொன்றில்
சான்றுகளோடு குறிப்பிட்டுள்ள
ார்.
மேலே குறிப்பிட்டுள்ள சான்றுகள் அனைத்தின் மூலமும், இவ்வையத்தின்
முன்னோரான நம் தொல் தமிழர் பல்வேறு நிலப்பகுதிகளுக்குப் பரவிச்சென்று
வாழந்தமையும் தெளிவாய்த் தெரிகிறதன்றோ?
ஆகையால், மேற்கூறிய சான்றுகளால், பன்னெடுங்காலமாய்த் தமிழைத் ‘திராவிடம்’
எனத் திரித்து வழங்கியுள்ளமை தற்பொழுது நண்பர்களனைவருக்கும் தெளிவாய்
விளங்குமென்று நினைக்கிறேன். இவ்வாறு தமிழைத் திராவிடம் என்று
குறிப்பிடுதல் தவறானது. உண்மையில் ‘இயல்பே தமிழாகும்’ அல்லவா?
‘மொழி ஞாயிறு’ எனப் போற்றப்படும் ஞா. தேவநேயப் பாவாணர், தமது ‘வடமொழி
வரலாறு முடிவதிகாரம்’ என்பதில் அளித்துள்ள வெண்பா 4இல், ‘தமிழே
திராவிடமாம்’ என்று நன்கு ஆய்ந்து கூறியுள்ளமையும் இங்கே நாம் நினைவிற்
கொள்ளவேண்டியதே.
இன்னும் வரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக