செவ்வாய், 5 நவம்பர், 2019

பௌத்தம் தமிழர் தொடர்பு குரு பட்டியல் காஞ்சிபுரம் மதம்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 21 ஜூலை, 2018, முற்பகல் 11:25
பெறுநர்: எனக்கு
காளிங்கன்

# பவுத்தம்_ஒரு_கேள்வி
தமிழகத்திலிருந்து சென்று நாளந்தா பல்கலைக்கழத்தில் புத்த சமய மெய்யியல் விளக்கங்களும், போதனைகளும் மேற்கொண்டவர்கள் தமிழர்களே பலர்.

1) நாளாந்தா பல்கலைக்கழகத்தில் தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் தம்மபாலர் எனப்படும் தமிழராவார்.

2) பர்மா புத்த துறவிகளின் வரலாற்றைக் கூறும் தலையங்கு ஆவணம் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் எனக்கூறுகிறது.

3) இதே பல்கலைக்கழகத்தில் இன்னொரு பேராசிரியராக அறியப்படுகிறவரும், அபிம்மாத்த சங்கிரகம் போன்ற நூல்களை இயற்றியவருமான அநிருத்திரர் என்பவரும் காஞ்சிபுரத் தமிழரே.

4) தேரவாத புத்தத்தின் சூத்திரபீடகத்திற்கு பாலி மொழியில் உரை எழுதியவர்களாக அறியப்படுகிறவர்கள் இருவரும் தமிழர்களே. ஒருவர் தர்மபால மகாதேரர். இன்னொருவர் புத்ததத்த தேரர்.

5) மகாயான புத்தத்தை கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலேயே பரப்ப முயன்றவர் சங்கமித்திரர் என்ற தமிழரே.

6) மகாயானத்தில் இன்னொரு பிரிவை உருவாக்கியவரும் சமஸ்கிருதத்தில் அளவை நூல்களை எழுதியவருமான திக்நாதர் என்ற தின்னாகர் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழர்தான்.

7) சீனத்தில் தியானமார்க்கம் என்ற புத்த சமயப்பிரிவைப் பரப்பிய போதிசேனர் ஒரு தமிழரே. 
இம்மார்க்கமே சென் (Zen) மதப்பிரிவாக அழைக்கப்படுகிறது.

8 ) சீனர்களின் 28 சமய குரவர்களில் ஒருவராக 'தாமோ' எனவும், ஜப்பானில் 'தர்மா' எனவும் அழைக்கப்பட்டுவரும் போதிதர்மர் தமிழர் என்ற செய்தி தெரிந்ததே.

9).சீனம் சென்று புத்த தந்திராயனத்தை பரப்பி அதை சீன மொழியில் மொழிபெயர்ப்புச் செய்த வச்சிரபோதி ஒரு தமிழரே.

10) திபெத்திற்குச் சென்று புத்த சமயத்தைப் பரப்பியவரும் ஒரு தமிழராக அறியப்படுகிறார்.

குறிப்பு : வடக்கே தோன்றி தமிழகத்தில் பரவியதுதான் புத்தம் என அறியப்படுகிறது. ஆனால் புத்தத்தை, மெய்யியலைப் பரப்பியவர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்கக் காரணம் என்ன? புத்தம் வடமரபு நெறியா என்ற ஐயத்தை தோற்றுவிப்பதைத் தவிர்க்க இயலவில்லை.
எனது பழைய பதிவு....

Aathimoola Perumal Prakash
அழகன் ஆசிரியர்
காஞ்சியின் பழமை:
"கி.மு 5 ம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வந்து புத்த சமய கொள்கைகளை உரைத்தார்.அசோகன் தம் மதப் பரப்பாளரை ஏவி காஞ்சியில் பல தூபிகளை நாட்டி புத்த சமயக் கொள்கையைப் பரவச் செய்தான்.
அவன் கட்டிய தூபிகளில் ஒன்று 100 அடி உயரத்தில் காஞ்சியில் இருந்தது.
நாலந்தா பல்கலைக் கழகத்தின் சிறந்த பேராசிரியரான தர்மபாலர் காஞ்சிபுரத்தினர்"
இவ்வாறு 7 ம் நூற்றாண்டு இந்தியத் துணைக் கண்டத்திற்குப் பயணம் வந்த சீனப் பயணி இயூன் சங்(Xuanzang) கூறியுள்ளார்.
புத்தமதம் மதம் பயணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக