aathi tamil <aathi1956@gmail.com>
திங்., 23 ஜூலை, 2018, பிற்பகல் 4:17
பெறுநர்: எனக்கு
தமிழகத்தில் பிள்ளையார், விநாயகர், கணபதி வழிபாடு: இலக்கிய-அகழ்வாய்வு-சரித்திர ஆதாரங்கள்.
தமிழகத்தில் பிள்ளையார், விநாயகர், கணபதி வழிபாடு: இலக்கிய–அகழ்வாய்வு–சரித்திர ஆதாரங்கள்.
பெரியாரிஸ, திராவிட கழக வாதம்[1]: “641 CE க்கு முன்தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்தி என்பதோ, பிள்ளையார்வழிபாடோ கிடையாது. இதற்கான ஆதாரம் கேட்கப்புகின்தொல்காப்பியத்தில்கூட மாயோன், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை குறித்து பேசப்படுகிறதே தவிர பிள்ளையார் இல்லை. சங்க நூல்களிளேகூட கதிரவன், காளி, கூளி, காற்று, காடுகாத்தாள், நம்பின்னை, பலராமன் போன்றோர்பேசப்படுகின்றதே தவிர தும்பிக்கை கடவுள் இல்லை”, என்று திகவினர் வாதிடும் போது, மற்ற சங்க இலக்கிய ஆதாரங்களை மறைப்பதை கவனிக்கலாம். “641 CEல் நரசிம்மவர்மன்வாதாபியின் மீது போர் தொடுத்து இரண்டாம் புலிகேசியைவென்றபோது அவன் படைத்தலைவனான பரஞ்சோதிதான்அங்கிருந்த யானைத்தலை மனித உடலுடன் கூடிய பொம்மையைஎடுத்துவந்து காட்சிப் பொருளாக வைத்தான். அதன் பிறகு புராணக்கதை எழுதி பார்வதிக்கு மகனாக்கினர், முருகனுக்குஅண்ணனாக்கினர்”, என்று வழக்கம் போல தூஷண படலத்தைக் காணலாம். இக்காலத்திலும், இப்படி 1960-70 வாதங்களை வைத்து விதண்டாவாதம் செய்வதால், உண்மையினை அறிய வேண்டாம் என்றுள்ள போக்குதான் வெளிப்படுகின்றது.
பரஞ்சோதிக்குப் பிறகு தான் பிள்ளையார் வழிபாடு ஏற்பட்டது: “சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப்பல்லவனின் படைத் தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கியமன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம்வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்,”[2] என்று விகிபீடியா போன்றவையும் பாட்டு பாடுகின்றன. 2007-ஆம் ஆண்டில், கருணாநிதி, “பிள்ளையார் கர்நாடகத்தைச் சேர்ந்த வாதாபியில்பிறந்தவர். அவர் பல்லவர் காலத்தில்தான் தமிழகத்திற்குக்கொண்டு வரப்பட்டார். எனவே அவர் தமிழ் கடவுள் அல்ல,” என்று பேசினார். படித்தாலும், பண்பில்லாததால், அவர் அவ்வாறு பொய் சொல்லியே காலத்தை கழித்தார். “17 ஆம் நூற்றாண்டின் போதுதமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மன்னர் வட மாநிலத்தில் போர் புரிந்துவெற்றிபெற்றார் அதன் நினைவாக அங்கிருந்த விநாயகர்சிலையை கொண்டு வந்தார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும்விநாயகர் வழிபாடுகள் தொடங்கின. தமிழகத்தில் இவ்விழாபெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டுகொண்டாடப்பட்டது,” என்று விகிபீடியா இன்னொரு கதையினையும் சொல்கிறாது[3].
4-6 நூற்றாண்டுகளில் CE பிள்ளையார் வழிபாடு இருந்தது: தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடை வரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை, 6-ம் நூற்றாண்டுக்கு CE உட்பட்டதாகும். இந்த கோயிலையும், விநாயகரையும் உருவாக்கிய கல்தச்சனின் பெயர் எக்காட்டூரூக்கோன் பெருந்த(ச்)சன் என்று உள்ளது. இது 6-ம் நூற்றாண்டில் CE காணப்பட்ட எழுத்து வடிவில் இருப் பதால் வாதாபி காலத்துக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததை அறிய முடிகிறது[4]. மேலும், இதே காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்து பொறிக்கப்படாத இரண்டு சிற்பங்கள் உத்திரமேரூரிலும், வேளச்சேரியிலும் வழிபாட்டில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர். 2015ல் போது திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் உள்ள எமதண் டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளையார், லகுவேஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பிள்ளையார் பீடத்தில் 3 வரி களில் கல்லெழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வெழுத்தின் வடி வம் பூளாங்குறிச்சி எழுத்து வடி வத்துக்கு பின்னும், பிள்ளையார் பட்டி குடைவரைக்கோயில் கல் லெழுத்து வடிவத்துக்கு முந்தை யதும் ஆகும். அதாவது 4-ம் நூற்றாண்டுக்கும், 6-ம் நூற்றாண்டுக்கும் CE இடைப்பட்ட தாகும்.
தமிழகத்தில் 4ம் நூற்றாண்டிலிருந்து, பிள்ளையார் வழிபாடுஇருந்தது: சங்க இலக்கியங்களில் வரும் சதுக்கப் பூதம், விநாயகர் என்றும் விளக்கம் கொடுப்பதுண்டு. யானையை சங்க காலம் நன்றாக அறிந்திருந்ததால், அதன் தன்மை, மேன்மை முதலியவற்றை தெய்வத் தன்மையுடன் இணைத்த இலக்கிய ஆதாரங்கள் இல்லாமல் இருந்தாலும், அவற்றை அறிந்திருக்கவில்லை என்றூ சொல்லமுடியாது. முல்லைப்பாட்டில் வரும் யானைகளை வளர்ப்போர், புரியாத மொழியில் பேசியதால், அவரை ஆரியர் என்றால், தமிழருக்கு, யானையைப் பற்றிய உரிமை போய் விடுகிறதா அல்லது தைப் பற்றிய ஞானமே அறியாமையாகி விடுகிறதா என்பது பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே. இந்த ஆறு திருமுறைகளிலும் அப்பரும் சம்பந்தரும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்புத் தருகின்றனர். இப்பெருமக்களின் காலம் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என அறிஞர் கொள்வர்[5]. சிந்துசமவெளி நாகரிக அத்தாட்சிகளில் தெரிந்து விடுகிறது. திருமுருகாற்றுப்படையில் ஒருகை தம்பி என்று வரும்சொற்றொடர், பிள்ளையாரைக்குறிக்கும் என்றுவிளக்கப்படுகிறது. ஔவையார் காலம், உறுதியாகக்கணக்கிட முடியவில்லை. மேலும் அப்பெயரில், பலகாலங்களில் ஒன்றிற்கும் மேலான புலவர்கள்இருந்திருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவருகிறது. ஆகவே, இலக்கிய சான்றுகள் மற்றும் இதுவரை கிடைத்துள்ளஅகழ்வாய்வு ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், நிச்சயமாக4ம் நூற்றாண்டிலிருந்து, பிள்ளையார் வழிபாடு இருந்தது என்பது உறுதியாகிறது.
சிந்து சமவெளியில் பிள்ளையார்: பிள்ளையார் சிந்துசமவெளியில், அதிலும் நௌஸோர் (இப்பொழுது பாகிஸ்தான்) என்ற இடத்தில் 9000 BCE வர செல்லும் அகழ்வாய்வு படிவுகளில் காணப்பட்டுள்ளது முக்கியமாக உள்ளது. சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மூன்று தலைகள் கொண்ட (உயரம் – 6.76, நீளம் – 6.97, அகலம் – 4,42; அளவுகள் செ.மீரில்) இந்த ஒரு உருவம் 1992ல் கிடைத்ததாகும். பாகிஸ்தான் மியூஸியத்தில் EBK 7712 என்ற எண்ணுடன் உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை பெருமளவில் இழுத்துள்ளது. காத்தரைன் ஜேரிஜ் (Catherine Jarrige) என்பவர் தன்னுடைய கட்டுரையில் படங்களுடன் விவரித்துள்ளார். ஜொனாதன் மார்க் கெனோயர் (Jonatham Mark Keynoyer) புத்தகத்தில் 117வது பக்கத்தில், இதன் இரு படங்களைக் காணலாம். யானை, சிங்கம் / புலி, காளை என மூன்று தலைகள் உள்ளன. அவற்றில் யானை மற்றும் சிங்க / புலித் தலைகள் தெளிவாகவே உள்ளன. குறிப்பாக யானையின் காது, தும்பிக்கை விநாயகரைக் குறிப்பதாக உள்ளது. இத்தகைய மூன்று தலைகள் கொண்ட சிற்பங்கள், இந்தியக்கலைப் பொருட்களில் அதிகமாகவே காணப்படுகின்றன. யானை சிந்து சமவெளி முத்திரைகளில் பலவற்றில் காணப்படுகின்றன. மேலேயுள்ளது விளையாடும் பொம்மைகளில் காணப்படுகிறது. ஆகவே, கணேசன் / விநாயகன் / பிள்ளையாரை யார் அங்கு உருவாக்கினர் என்று கவனிக்க வேண்டும்.
சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்றால், திராவிடர்கள் உருவாக்கினரா?: லிங்கம் என்பதற்கான தனித்தனியான பகுதிகளும் கிடைத்துள்ளன. நந்தியின் பொம்மைகள் நிறையவே கிடைத்துள்ளன. இன்றைக்கு, திராவிட சித்தாந்திகள் இப்படியுள்ள ஆதாரங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஏதேதோ பேசி-எழுதி வருகின்றனர். அரைத்த மாவை அரைத்துக் கொண்டு வருகின்றனர். 9000-6000 BCE முன்பாகவே, ஏற்பட்டுள்ள கலைவடிவம் இந்தியாவில் பரவ 1300-1500 வருடங்களில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த மண் சிற்பத்தில் காணப்படும் வளைவுகள், நெளிவுகள் முதலியவை சிற்பியின் கலைத்திறனை எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய கலைத்திறன் 7000 வருடங்களாக சும்மா இருந்து, திடீரென்று 2300 வருடங்களுக்கு முன்புதான் திடீரென்று மௌரிய காலத்தில் மறுபடியும் தோன்றியது என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுவதையும் மற்றவர்கள் கூர்மையாக கவனிக்க வேண்டும். கலை, கலைத்தோற்றம், உருவமைப்பு, சிற்பக்கலை முதலியன, மனிதர்களிடம் தொடர்ந்து நடப்பவையாகும். காலந்தோறும், சில மாறுதல்கள் இருந்தாலும், அடிப்படயில் உள்ள பழமையின் ஆதாரம் மாறாமல் இருக்கும். உலகத்த்தில் பற்பல இடங்களில் உள்ள விநாயகர்-கணபதி-பிள்ளையார் உருவங்கள் அத்தகைய ஒற்றுமையைக் காட்டுகின்றன. இடம், பொருள், காலம் முதலியவை மாறினாலும் யானை உருவம், தும்பிக்கை, காதுகள் முதலியன மாறுவதில்லை ஆக, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்றால், காணபத்திய இந்துமதத்தை திராவிடர்கள் மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
தமிழர் திராவிடர் போர்வையில் இரட்டைவேடம் போட்டால்சரித்திரத்தை மறந்து விட வேண்டியது தான்; தனித்தமிழ் இயக்கம், ஆரிய-திராவிட போர்வையில் 19 நூற்றாண்டில் உண்டாக்கப்பட்ட இனவாத சித்தாந்தத்தின் படி, திராவிடர்கள், சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்றால், பிள்ளையாரை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிவன், ருத்திரன் போன்றோர் ஆரியர், ஆகையால், அவரது பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் விட்டுவிட வேண்டும். அதாவது, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்ற வாதம் முரண்பட்டதாகி விடும். சிந்து சமவெளி நாகரிகத்தில் பிள்ளையார் இருந்தது, ஆனால், சங்கப் புலவர்கள் மறந்து விட்டனர், தொல்காப்பியரும் மறந்து விட்டார் என்றெல்லாம் வாதிட முடியாது. இத்தகைய குழப்பவாதங்களை வைத்துக் கொண்டு, இந்துவிரோதத்துடன் செயல்படுவதால், சரித்திரமே அவர்களது புரட்டுத்தனத்தை வெளிப்படுத்துகிறது. போலித்தனத்தை தோலுரித்து, முகமூடியைக் கிழித்தெறிகிறது. பிள்ளையாரை உடைத்தாலும், வழக்கிலிருந்து ஓடி ஒளிந்தாலும்[6], சரித்திரத்தை மறைக்கமுடியாது.
வேதபிரகாஷ்
24-08-2017
[1] http://www.unmaionline.com/4044-will-the-anniversary-celebrate-the-dirty-boy.html
[2]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
[4] Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 475-675.
[5] இரா. கலைக்கோவன், பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் , வரலாறு.காம்; http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=575
[6]https://rationalisterrorism.wordpress.com/2010/09/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக