செவ்வாய், 5 நவம்பர், 2019

மாயவரம் வடமா பிராமணர் சந்தன நாமம்

aathi1956 aathi1956@gmail.com

திங்., 23 ஜூலை, 2018, பிற்பகல் 12:41
பெறுநர்: எனக்கு
Gopalan Venkataraman
இந்த பகுதியில் "வடமன் ஒசந்தால் வைணவன்" எனும் தலைப்பில் ஒரு உரையாடல் நடந்து வருகிறது. அதில் கருத்துச் சொல்ல நான் ஒன்றும் தகுதிபடைத்தவனல்ல என்றாலும், இந்த சொல்லடையில் தவறு இருப்பதாக எண்ணுகிறேன். பொதுவாக மாயவரம் பக்கம் இருக்கும் வடமன் பிரிவு பிராமணர்கள் இதை "வடமன் முற்றினால் வைணவன்" என்பார்கள். ஒசந்தால் என்பதற்கும், முற்றினால் என்பதற்கும் வேறுபாடு உண்டு. அது என்ன முற்றுவது? வடமன் பிரிவில் சோழநாட்டு வடமாள், வடதேசத்து வடமாள் என்று இரு பிரிவு உண்டு. இதில் சோழநாட்டு வடமர்கள் நெற்றியில் விபூதியை நன்கு குழைத்து மூன்று பட்டை போடுவார்கள். வடதேசத்து வடமர்கள் திருநீறையே பூச மாட்டார்கள். கோபி சந்தனத்தை கையில் இழைத்து அதைத் தங்கள் கட்டை விரலால் நடு நெற்றியில் தீ ஜ்வாலை போல நெட்டுக்குத்தாகப் பூசிக் கொள்வார்கள். கோவை, பாலக்காடு, மலையாள ஐயர்கள் போல சந்தனத்தை விபூதி பட்டைபோல போடமாட்டார்கள். இப்படி கோபி பூசும் வடமர்களிடையே வைணவர்களைப் போல திருமண்
ஸ்ரீ சூர்ணம் இடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இது ஏன், எதற்காக என்பதை இன்னம் ஆழமாக ஆராய்ந்துதான் விடை காணவேண்டும். இன்றும்கூட மாயவரம் வடதேசத்து வடமன்கள் நெற்றியில் கோபி சந்தனம் தான் பூசுவார்கள். சென்னையில் அப்படி கோபி பூசியவர்கள் இருந்தால் அவர்களும் மாயவரத்துக்காரர்களாகத்தான் இருப்பார்கள். இந்த விஷயத்தைச் சற்று யோசித்துப் பாருங்கள். இவர்களுக்குப் பொதுவாக குலதெய்வம் திருப்பதி வேங்கடாசலபதியாகத்தான் இருக்கும். சிலர் அந்தக் காலத்திலிருந்தே இங்கு அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயில், குணசீலம், சீர்காழியை அடுத்த அண்ணன்கோயில் ஆகிய இடங்களில் கோயில்கொண்ட பெருமாளை குலதெய்வமாகக் கொண்டிருப்பார்கள். மற்ற பிரிவினருக்கு உள்ளூர் சுவாமிகளும், கிராம தேவதைகளான ஐயனார், மாரியம்மன் போன்ற தெய்வங்கள் இருக்கும். இன்னும் விவரம் தெரிந்தவர்கள் விளக்கமாகச் சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக