செவ்வாய், 5 நவம்பர், 2019

கண்ணகி கோவில் கேரளா தேவசம் போர்டு உடன் சேர்க்கப்பட்டது மலையாளி அத்துமீறல் வழக்கு வரலாறு

aathi1956 aathi1956@gmail.com

திங்., 23 ஜூலை, 2018, பிற்பகல் 1:56
பெறுநர்: எனக்கு

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை...
*பறிபோகும் தமிழர் பண்பாட்டு நாயகி கற்புக்கரசி கண்ணகி கோயில்...குறித்தான உண்மைகளும் சில விளக்கங்களும்...*
*தேனியிலிருந்து ச அன்வர் மற்றும் எஸ் ஆர் சக்கரவர்த்தி...*
கடந்த சில நாட்களாகவே காப்பிய நாயகி கண்ணகி கோயில் புனரமைப்பு குறித்த செய்திகள் கம்பம் பள்ளத்தாக்கு முழுவதும் அலையடிக்கிறது.
எந்நேரமும் புனரமைப்பு பணிகள் தொடங்கலாம் என்ற நிலையில் வேதனையில் வெம்பி வெடிக்கிறது மனது..
புனரமைப்பு என்ற பெயரில் கண்ணகி கோயில் குறித்து பல கட்டுக்கதைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் பரப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
1964 ம் ஆண்டுதான் கண்ணகி கோயிலே கண்டுபிடிக்கப்பட்டதாக தேவசம்போர்டு புனையும் கட்டுக்கதையை மலையாளச் சகோதரர்கள் கூட நம்பமாட்டார்கள்.
1187 ஆண்டு பழமை கொண்ட கோயிலை ஏதோ நேற்றுதான் கண்டுபிடித்தது போல கதைவிடுகிறார்கள் தேவசம்போர்டு அதிகாரிகள்.
1819 ம் ஆண்டே கண்ணகி கோயிலின் முக்கியத்துவம் கருதி அன்றைக்கு இந்தியாவைக் கட்டியாண்ட கிழக்கிந்தியக் கம்பெனியே சர்வே செய்திருக்கிறது என்றால் அந்தப்பகுதியின் முக்கியத்துவத்த
ை நம்மால் உணரமுடியும்.
மரியாதைக்குரிய ஐயா திரு மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப தலைமையில் இயங்கும் *மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை* சார்பில் கடந்த 2014 ம் ஆண்டு எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் கோயில் புனரமைப்பு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கின்
அடிப்படையில் ஏற்கெனவே கேரள தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தலை உயர்நீதிமன்றம் கொடுத்திருந்தாலும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை.
தொல்லியல் துறை புனரமைப்பு வேலைகளை தொடங்கினால் வனத்துறை அதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதால் வேலை கிடப்பில் போடப்பட்டது...
ஆனால் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கொடுக்கப்பட்ட தொடர் நெருக்கடிகளால் கேரள அரசு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
அதனடிப்படையில் முதலில் கேரள முதல்வர் மாண்புமிகு பினராயி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அத
ன்படி கேரள தொல்லியல்துறை கண்ணகி கோயிலை சீரமைக்கும் என்றும்...கேரள வருவாய்த்துறையு
ம்...வனத்துறையும் தொல்லியல் துறைக்கு தகுந்த ஒத்துழைப்பை கொடுக்கவேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
காணாமல் போன கண்ணகியின் திருவுருவச்சிலையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து கொடுக்கும் என்றும் உத்தரவைப்போட்டார்.
இந்த செய்தியை அறிந்த நமது பண்பாளர் ஐயா திரு மு.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கடந்த 15-06-2018 அன்று சபரிமலைக்கு சென்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் திரு பத்மகுமார் அவர்களை சந்தித்து பேசுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து 24-06-2018 அன்று கேரள முதல்வர் மாண்புமிகு பினராயி அவர்கள் தலைமையில் திருவனந்தபுரத்தில் இரண்டு மாநில நிர்வாகிகள் அடங்கிய கூட்டுக்கூட்டம் நடைபெறுகிறது.
அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையும்...திருவிதாங்கூர் தேவசம்போர்டும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.அ
தன்படி *தமிழக கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு* உருவாக்கப்பட்டு அதற்கு தலைவராக நமது ஐயா திரு.ராஜேந்திரன்இஆப அவர்களும்...செயலாளராக தேவசம்போர்டு தலைவர் திரு பத்மகுமார் இருப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
கேரள தொல்லியல் துறைக்கு அம்மாநில வருவாய்த்துறையு
ம்...வனத்துறையும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த வாரம் குமுளியில் ஒரு கூட்டத்தை திரு ராஜேந்திரன் ஐயா தலைமையில் ஒரு கூட்டுக்கூட்டம் நடந்தது.அந்தக் கூட்டத்தின் முடிவில் ஐயா ராஜேந்திரன் சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்...
சித்ரா பவுர்ணமி அன்று வெறும் 12 மணி நேரம் மட்டுமே இருக்கும் வழிபாட்டு நாட்களை இருபத்தி நான்காக உயர்த்தவேண்டும் எனவும்...புதிய கண்ணகி சிலையை தமிழ்க்கலாச்சாரத்தின் அடிப்படையில் நாங்களே வடிவமைத்து தருவோம் என்பது ஐயாவின் கோரிக்கைகள்...
இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் கற்புக்கரசி காப்பிய நாயகி மலையாள நாட்டுக்கு சொந்தமானவளோ என்ற ஐயம் மொத்த தமிழினத்திற்கும் ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை.
வேதனை என்னவென்றால் 1976 வரை தமிழகம் வசம் இருந்த கோயில் எந்தச்சூழ்நிலையில் கேரளாவிற்கு சொந்தமானது என்பதை ஏன் எங்கள் ஐயா திரு ராஜேந்திரன் அவர்கள் சீர்தூக்கிப்பார்க்கவில்லை என்ற
வருத்தம் நெஞ்சை உலுக்குகிறது.
1976-க்குப்பிறகு கண்ணகி கோயிலில் இருந்த அத்தனை வரலாற்றுக் கல்வெட்டுகளையும் சிதைத்தது யார்...?
எதற்காக சிதைத்தார்கள் என்ற கேள்வியும்...
சேரன் செங்குட்டுவனால் இமயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கண்ணகி சிலையை சிதைத்து உடைத்தது...மேலாக அதை திருடிச்சென்ற திருடன் யாரென்ற பெருங்கேள்வியும் இயல்பாய் எழுகிறது.
எந்த வரைபடத்தின் அடிப்படையில் கேரளா கண்ணகி கோயிலை சொந்தங்கொண்டாடுகிறது என்ற கேள்விக்கு மலையாளச்சகோதரர்
களிடம் விடை இருக்கிறதா...?
1956 -மொழிவழிப்பிரிவினை மோசடியால் தேவிகுளமும்...ப
ீர்மேடும் மலையாள நாட்டுக்கு தாரைவார்க்கப்பட்டது போதாதா...
கிட்டத்தட்ட 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பை தமிழகம் கேரளாவிடம் பறிகொடுத்திருக்கிறது...
மேலாக தமிழகத்திற்கும் கேரளத்திற்குமான மொத்த எல்லையில் இதுவரை அளந்தது 112 கிமீ மட்டுமே...மிச்சமிருப்பது 746 கிமீ எல்லை.
இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதே தேனி மாவட்ட எல்லைக்குள் வரும் கம்பம் மெட்டில் பட்டப்பகலில் கேரளா அத்துமீறியதை யாரும் இங்கே மறக்கவில்லை.கம்பம் மெட்டில் இன்று இருக்கும் கேரள காவல்நிலைய சோதனைச்சாவடி தமிழக எல்லைக்குள் வருகிறது என்கிறது வரைபடம்.
எங்கள் வேதனையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்...
கண்ணகி கோயில் பகுதியை வரைபட சோதனைக்குட்படுத்தி மீண்டும் ஒருமுறை அளக்கவேண்டும் என்பதுதான்.
1976 ல் நடத்தப்பட்ட தமிழக கேரள கூட்டு சர்வேயில் கண்ணகி கோயிலிலிருந்து நாற்பது அடி தள்ளியே கேரள எல்லை ஆரம்பிக்கிறது என்கிற உண்மையை மீண்டுமொருமுறை நிரூபிக்க வேண்டும்.
மூன்றுகோடியில் அல்ல முன்னூறு கோடியைக்கூட கொட்டிக்கொடுக்க தமிழ்ச்சமூகம் தயாராயாகவே இருக்கிறது.
எனவே *கண்ணகி கோயில் மீட்புக்குழு...* சார்பில் விரைவில் ஐயா பண்பாளர் திரு ராஜேந்திரன் அவர்களையும்...தமிழக அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தமிழக துணைமுதல்வர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து எங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைப்போம்.
RE SURVEY நடத்தி கண்ணகி கோயிலை சட்டப்படி மீட்போம் இல்லையேல் உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு...
இதற்குக்காரணம் எல்லைப்பகுதி விடயங்களில் கேரளா எப்போதுமே தமிழகத்துடன் நீதியோடு நடந்துகொண்டதில்லை என்கிற அச்சமே எங்களின் இந்த முடிவுக்கு காரணம்.
1979 ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக முல்லைப்பெரியாற
ு அணைவிடயத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் விதமே அவர்களின் செயல்பாட்டுக்கான சான்று என்று நிறைவு செய்கிறோம்.
பதிவர் புலவர் இளங்குமரன்

எல்லைக்கோடு மண்மீட்பு கோயில் கோவில் 
கேரளா

1 கருத்து: