வெள்ளி, 20 செப்டம்பர், 2019


aathi1956 aathi1956@gmail.com

வியா., 12 ஜூலை, 2018, முற்பகல் 10:15
பெறுநர்: எனக்கு
தாத்தா  இரட்டைமலை சீனிவாசன்
"""""""""""""""""""""""""""""""'"'"''''''''"""""""""""""""""""""""""

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சூலை 7, 1859  அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம்  என்ற ஊரில் பிறந்தார்.

கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே ஐயர் ஐயங்கார்  மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார்.

உயர்க் கல்வியை கோயம்புத்தூர் அரசு
கலையியல் கல்லூரியில் பயின்றார்.
வழக்குரைஞர், பத்திரிக்கையாளர், சமூக போராளி என பன்முகங்களை கொண்டவர்.

1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர்.

நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின்
1890 இல் சென்னைக்கு வந்தார்.

பொது வாழ்வில் :
"""""""""""""""""""""""""""""""""
1891 ல் பறையர் மகாசன சபையை தோற்றுவித்தார்.

1893ல் பறையன் என்கிற வார இதழை ரூபாய் 15 முதலீட்டில் தொடங்கினார்.
அதனை தன் நெருங்கிய மலையாளி நண்பரிடம் கடனாகப் பெற்றார்.

பின்னர் சில காலம் தென் ஆப்பிரிக்க நீதிமன்றத்தில் பணியாற்றினார். அப்போது காந்தியடிகளுடன் பழகினார்.

  காந்தியடிகளுக்கு தமிழ்ப்பற்றியும் திருக்குறளை புரிந்து கொள்ளவும் கற்று கொடுத்தார். மோ. க. காந்தி என்று தமிழில்  கையொப்பமிட கற்று கொடுத்தவரும் இவரே.

1923 ல் மெட்ராஸ் சட்ட கவுன்சிலில் உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டார்.

1924 ல் தன் மனைவியின் வேண்டுதல் படி ஒரு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி பொது இடங்கள் , சாலைகள், கிணறுகள், விடுதிகள் ஆகியவற்றை பயன் படுத்த ஆவண செய்ய கொண்டுவந்த தீர்மானம் 1925 ல் நடைமுறைக்கு வந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்களுக்கான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்தார்.

1928 ல்பட்டியல் வகுப்பினருக்கான கல்வி மையத்தையும் சென்னை மாநில பட்டியல் வகுப்பு மையம் ஒன்றையும் நிறுவினார். இதுவே பட்டியல் வகுப்பு அமைப்பானது( The schedule caste federation)

1935 ல் இந்திய தேசிய காங்கிரசு I.C.S  தேர்வை இந்தியாவில் நடத்த முயன்ற போது அதனை எதிர்த்து இந்தியாவில் தேர்வு நடந்தால் முறைகேடுகள் நடக்கும் என்பதால்,

அதனை  கடுமையாக எதிர்த்து இந்திய செயலாளருக்கு மனு  கொடுத்து தடுத்து வெற்றியும்  கண்டார்.

தன்னுடைய நீண்ட கால கோரிக்கை போராட்டங்கள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற ஆங்கில அரசு  தொழிலாளர் நலத்துறை
( Labour welfare department)  ஒன்றை நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஐயன் இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர்.

பட்டியல் பிரிவு மக்களுக்கு  அடிப்படை சட்ட உரிமைகள் வழங்கப் பட வேண்டுமென தீர்மானத்தை கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டார்.

மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும்  பட்டியல் பிரிவினர் சார்பாக கலந்து கொண்டவர்.

முதல் வட்ட மேசை மாநாடு 1930 ல் லண்டனில் நடைபெற்ற போது தன்னை வரவேற்க கைநீட்டிய ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு கைகொடுக்க மறுத்து நீங்கள் இந்தியாவின் பேரரசர்,  உங்களுக்கு இந்தியர்கள் அடிமை.

நான் அந்த அடிமைகளின் அடிமை எனவே ஒரு பேரரசருடன் அடிமைகளின் அடிமையாகிய நான் கைகுலுக்குவது முறையல்ல என்ற சொல்லி   தீண்டாமைக் கொடுமையை இங்கிலாந்து அரசருக்கு உணர வைத்தார்.

மதமாற்றம் பற்றி:
"""""""""""""""""""""""""""""""

அம்பேத்கர் புத்த மதத்தை தழுவ நிலை எடுத்த போது அதனை எதிர்த்து ஐயா எம்சி. ராசா வின்  நிலைப்பாட்டையே மேற்கொண்டார்.

அது குறித்து அம்பேத்கருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். பட்டியல்இன மக்கள் இந்து வர்ணத்தில் வரமாட்டார்கள்.

அவர்கள் சாதிபேத மற்றவர்கள் என்றும் மதமாறிவிடுவதால் சமூக நிலையோ, பொருளாதார நிலையோ கல்வி நிலையோ ஒரு போதும் மாறிவிட போவதில்லை.

அவர்கள் மதமாறுவதால் சமுக சமநிலையையும் அடைந்துவிட இயலாது என்றும் தீண்டாமை அனைத்து மதங்களிலும்
உள்ளது.

கிறித்துவம் ,இசுலாம், பௌத்தம் மதத்திலும் சாதிப் பாகுபாடு உண்டு. இசுலாம் மதத்தில் உள்ள லெப்பை பிரிவு ஒடுக்கப்பட்டோரை குறிக்கும் பிரிவு.

புத்த மத்திலும் மதமாறிய
ஒடுக்கப்பட்டோரை நியோ புத்திஸ்ட் என்கின்றனர். இத்தாலி மற்றும் அபீசினியா கிறித்துவ நாடு ஆனால் அங்கு அபார்தீட்( நிறவெறி) கொள்கை
பிரச்சனை உண்டு.

எனவே மதம் மாறுவதால் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என்றும்

கல்வி கற்று அரசு வேலைவாய்ப்புகளில் உயர் பதவியை பெறும் போது பிற சமுதாயங்களின் முன்னே தங்கள் நிலையை உயர்த்தி சமத்துவ புரிதலை உருவாக்க முடியும் என்றும் தெளிவு படுத்தியிருந்தார்.

1923 முதல் 1945 வரை மெட்ராஸ் கவுன்சில் சபையில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினராக பணியாற்றிய போது பல தீர்மானங்களை கொண்டு வந்து அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தவர்.

1927  மார்ச் 18ல் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு(Criminal tribes act )
எதிராக சட்ட சபையில் குரல் கொடுத்தார். கல்வியறிவற்ற  பின்தங்கிய மக்கள் இச்சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
( ref.M.L.C.P. volume XXXV.. Page 467)

சிறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பாகுபாடோடு நடத்தப் பட்டதை எதிர்த்து
குரல் கொடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

மெட்ராசு பல்கலை கழகத்திற்கு செனட் உறுப்பினராக ( எம்.சி். ராசா போல்) நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

மது ஒழிப்பு தீர்மானத்தை கொண்டுவந்து வெற்றி கண்டார்.

ஆலய நுழைவுப் பற்றி:
""""""""""""""""""""'"'"'""""""""""""""""""
ஆலய நுழைவு தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.

பட்டியல் இன  மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார்.

திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந் தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்ப கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஐயன் இரட்டைமலை சீனிவாசன் பேசியிருக்கிறார்.

மாரியம்மன் என்று நாம் வழிபடும் மாரியம்மன் திருவள்ளுரின் சகோதரி என்கிற  ஒரு கருத்தையும் முன்வைத்துள்ளார்.

இவரின் சேவைகளை பாராட்டி அப்போதைய அரசு
1926 ல் ராவ் சாகிப் பட்டமும்
1930 ராவ் பகதூர் பட்டத்தையும்
1936 ல் திவான் பகதூர் பட்டத்தையும் வழங்கியது

1945 ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

எப்பெயரால் இழிவு படுத்தப் படுகிறமோ அப்பெயரைக் கொண்டே முன்னேற வேண்டுமென முழங்கியவர்.

ஐயனுக்கு பிறந்தநாள்
வணக்கங்கள் !

நன்றி கார்திபழனி

மதமாற்றம் குற்றப்பரம்பரை தீண்டாமை இடவொதுக்கீடு ஆலயநுழைவு பறையர் கோவில் கோயில் பௌத்தம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக