வெள்ளி, 20 செப்டம்பர், 2019

பாண்டியர் வரலாறு மூவேந்தர் பட்டியல் 1920 ஆண்டு வேளாளர் வெள்ளாளர் நூல்

aathi1956 aathi1956@gmail.com

புத., 4 ஜூலை, 2018, முற்பகல் 11:56
பெறுநர்: எனக்கு
Mr Thevar
பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை
மாறன் வழுதி மாறன் திரையன்
மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
தமிழ்மூ வரசிவர் தாமா வாரே (ந.வே.வ.பாயிரம்)
மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொலைவு
ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர். கடல் கடந்த தொலைவிடங்களிலிருந்து நெற்பயிர் கொண்டு வந்து பயிர் செய்ததால் சொல் – சொல்லர் -
சோலர் – சோழர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது.
மாறன் வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.
பாண்டியர் வரலாறு மீட்டமைப்பது
பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாலக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறா
ர்.
இந்நிலையில் 1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உரியவனுக்குப் பட்டம் கட்டி வந்த வழக்கத்தை இவர்கள் கொண்டிருந்தனர். பாண்டியரின் ஐவகைப் பிரிவில் கொடி என்றும் பிதிர் என்றும் பிரிக்கப்பட்ட வண்ணம் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை. . இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா
இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது.
இந்நூலில் பெயர் தெரிந்த பாண்டியர்களின் ஆட்சிக் காலம் கலியாண்டுக் கணக்கில் குறிக்கப்பட்டுள்ளது.
காசுமீர வரலாற்றை இராச தரங்கிணி குறிப்பிடுவது போல் நெடிய பாண்டியர் மரபை நற்குடிவேளாளர் வரலாறு குறிப்பிடுவது, நெடிய மூவேந்தர் வரலாற்றை மீட்டமைப்பதற்கு ஓரளவு துணை செய்கிறது. இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும், வெற்றிவேள்செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி
வருகிறது. இந்நூலில் கண்ட குறிப்புகளின் வண்ணம் விடுபட்ட பாண்டியன் பெயர்களையும் சேர்த்தால் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை 1000 ஆண்டுக் கால பாண்டியர் தலைமுறைகளைக் கண்டறிய முடிகிறது.
1000 ஆண்டுகளில் 40 தலைமுறை குறிப்பிடப்படுகிறது. ஒரு தலைமுறைக்குச் சராசரி 25 ஆண்டுகள் என்பது இயல்பான நிகழ்ச்சி ஆகும். இவர்களுள் கடைக் கழக நூல்களில் 20 பாண்டியர் பெயர்கள் மட்டும் உள்ளன.
ஏனையவற்றுள் பிற சான்றுகள் வாயிலாகக் கிடைத்த பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடைக்கழக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படும் முதுகுடுமிப் பெரு வழுதி, கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி ஆகிய இருவரும் முறையே 66 ஆவது, 67 ஆவது பாண்டிய மரபிரராக அறிய முடிகிறது.
இமயவரம்பனும், பல்யானச் செல்கெழு குட்டுவனும் வாழ்ந்த கி.மு. 350 – 300 கால அளவில் 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆட்டி புரிந்ததாக நற்குடி வேளாளர் வரலாறு கூறுகிறது.
பாண்டியரின் கிளை மரபாகிய இருங்கோவேள் மரபு கி.மு. 2283 கூன் பாண்டியனில் தொடங்குகிறது.
கோசாம்பியை தலைநகராகக் கொண்டு வடநாட்டில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் உதயணன் கி.மு.701 இல் (கலியாண்டு 2400) ஆரியர்களைப் போரிட்டு வென்றான். அவன் ஆட்சி செய்திருந்தால் கி.பி. 199 – இல் குப்தர் தலையெடுக்காமல் தடுத்திருக்கலாம். பணிநது பேசிய ஆரியர்களை நம்பி அடங்கிப் போன பண்பாட்டு அடிமைத்தனமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என நற்குடி வேளாளர் வரலாறு ஆசிரியர் ஆறுமுக நயினார்
பிள்ளை பின்வரும் செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டை நாலறு நூறாண்டினாகரிறை பாடலிக்க ணளவில் படை
விண்டிருந்தவடவர்படை தடுத்ததமிழ்வேந்தர் முப்பத்து முந்நூற்றுமேற்
கொண்டுகுத்தரை யடக்கிடாததெனை கூடுநின்ற வடவோர் வழித்
தொண்டராயதிறன் பின்னர் சாங்கரடி தொத்தினார் (ந.வே.வ.414)
மேற் சொன்ன செய்திகள் முனைவர் இரா. மதிவாணனின் கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் எனற நூலில் இருந்து தட்டச்சு செய்யப்பட்டது.

வரலாற்றுக் காலப் பாண்டியர்கள்
கி.மு. 2082 – முடத்திருமாறன் – 6ஆவது பாண்டியன்
கி.மு.1932 – மாறன் வழுதி – 10 ஆவது பாண்டியன்
கி.மு. 1002 – 960 திருவழுதி – 45 ஆவது பாண்டியன்
கி.மு. 910 – 854 வீர பாண்டியன் – 49 ஆவது பாண்டியன்
கி.மு. 884 -832 பாண்டீசன் (நிலந் தரு – 50 ஆவது பாண்டியன் திருவின்பாண்டியன்)
கி.மு. 340 – 302 தேவ பாண்டியன் – 70 ஆவது பாண்டியன்
கி.மு. 302- 260 செயபுஞ்ச – 71 ஆவது பாண்டியன்
கி.மு. 202 நன்மாறன் – 74 ஆவது பாண்டியன்
கி.மு. 138 இராசகுலோத்தமன் – 77 ஆவது பாண்டியன்
கி.மு. 56 தேவ பூடணன் – 82 ஆவது பாண்டியன்
கி.பி. 142 ஆரியப் படை கடந்த நெ.செ – 87 ஆவது பாண்டியன்
கி.பி. 150 வெற்றிவேற் செழியன் – 88 ஆவது பாண்டியன்
கி.பி. 172 நெடுஞ்செழியன் II – 89 ஆவது பாண்டியன்
கி.பி. 198 உக்கிர மாறன் – 90 ஆவது பாண்டியன்
பாண்டியர் தலைமுறை மீட்டமைப்பு
கி.மு. 500 – 450 பல்சாலை முதுகுடுமி பெரு வழுதி – 66 ஆவது
கி.மு. 450 – 400 கருங்கை யொளைவாட் பெரும் பெயர் வழுதி 67 ஆவது
கி.மு. 400 – 380 போர்வல் வழுதி – 68 ஆவது
கி.மு. 380 – 340 கொற்கை வழுதி நற்றேர் வழுதி – 69 ஆவது
கி.மு. 340 – 302 தேவ பாண்டியன் – 70 ஆவது
கி.மு. 302 – 270 செய புஞ்சன் – 71 ஆவது
கி.மு. 270 – 245 பசும் பூண்பாண்டியன் – 72 ஆவது
கி.மு. 245 – 220 ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் – 73 ஆவது
கி.மு. 220 – 200 பாண்டியன் நன்மாறன் – 74 ஆவது
கி.மு. 200 – 180 கடலன் வழுதி – நெடுஞ்செழியன் – 75 ஆவது
கி.மு. 180 – 160 மருங்கை வழுதி – 76 ஆவது
கி.மு. 160 – 150 பாண்டியன் இத்தமன் — புலிமான் வழுதி – 77ஆவது
கி.மு. 150 – 140 பாண்டியன் கீரன் சாத்தன் – 78 ஆவது
கி.மு. 140 – 120 கலிமான் வழுதி (அண்டர் மகன் குறுவழுதி) – 79 ஆவது
கி.மு. 120 – 100 பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்) – 80 ஆவது
கி.மு. 100 – 87 கொற்கை வழுதி(பசும்பூண்பாண்டியன் II) – 81ஆவது
கி.மு. 87 – 62 தேவபூடணன்(இலவந்
திகை தூஞ்சிய நன்மாறன் – 82ஆவது
கி.மு. 62 – 42 தலை. கான. செரு. நெடுஞ்செழியன் – 83ஆவது
கி.மு. 42 – 1 கானப்பேரெயில் கட உக்கி பெருவழுதி – 84 ஆவது
கி.மு. 1 – 30 பாண்டியன் அறிவுடைநம்பி புற 184 – 85ஆவது
கி.பி. 30 – 60 வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி – 86 ஆவது
கி.பி. 60 – 117 ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் – 87 ஆவது
கி.பி. 117 – 160 வெற்றிவேற் செழியன் – 88 ஆவது
கி.பி. 160 – 198 நெடுஞ்செழியன் II – 89 ஆவது
கி.பி. 198 – 220 சித்ர மாட துஞ் நன்மாறன்/ உக்கிரமாறன் – 90 ஆவது
கி.பி. 220 – 250 பன்னாடு தந்த மாறன் வழுதி – 91 ஆவது
கி.பி.250 – 270 கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 92 ஆவது
கி.பி. 270 – 297 தென்னவன் கோ – 93 ஆவது
கி.பி. 298 – 310 பராக்கிரமபாகு (மானாபரணன்) – 94 ஆவது
நல்வழுதி கலியன் கூத்தன் – 95 ஆவது
கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு – 96 ஆவது
பொற்கைப் பாண்டியன் புற -18 – 97 ஆவது
பாண்டியன் மதிவாணன் 98 ஆவது முதல் 102 வரை
கி.பி. 475 -490 கடுங்கோன் – 103 ஆவது
கி.பி. 498 உக்கிரபாண்டியன் – 104 ஆவது
கி.பி. 498 – 540 சோம சுந்தர பாண்டியன் – 105 ஆவது


சேரர் தலைமுறை மீட்டமைப்பு
காலம் – பெயர் – ஆட்சி ஆண்டுகள்
கி.மு. 430-350 வானவன் (அ) வானவரம்பன்
350 – 328 (குட்டுவன்) உதியஞ் சேரலாதன் – 22
329 – 270 இமயவர நெடு சேரலாதன் – 58
270-245 பல்யானை செல்கெழு குட்டுவன் – 25
245- 220 களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் – 25
220 – 200 பெருஞ்சேரலாதன் – 20
200 – 180 குடக்கோ நெடுஞ்சேரலாதன் – 20
180 – 125 கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவன் – 55
125 -87 ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் – 38
87 – 62 செல்வக் கடுங்கோன் வாழியாதன் – 25
62 – 42 யானைகட் சேய் மாந்த சேரல் + மாரிவெண்கோ – 20
42 – 25 தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – 17
25 – 9 இளஞ்சேரல் இரும்பொறை – 16
9 – 1 கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை – 8
கி.மு. 20 – கி.பி. 10 வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவன் சேரல் – 30
1 – 30 பாலை பாடிய பெருங்கடுங்கோ – 30
20 – 30 கணையன் ( கணைக்கால் இரும்பொறை) – 10
30 – 60 கோக் கோதை மார்பன் – 30
60 – 140 சேரன்செங்குட்டுவன் – 70
140 – 150 கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை – 10
150 -160 சேரமான் முடங்கிக் கிடந்தநெடுஞ்சேரலாதன் – 10
160 – 180 சேரமான் கணைக்கால் இரும்பொறை – 20
180 – 200 சேரமான் இளங்குட்டுவன் – 20
200 – 220 நம்பி குட்டுவன் – 20
220 – 250 பூரிக் கோ – 30
250 – 270 சேரமான் குட்டுவன் கோதை – 20
270 – 300 சேரமான் வஞ்சன் – 30
330 – 380 மாந்தரஞ்சேரல்(சமுத்குப்தன் கல்வெட்டு) – 50
இவர் தவிர சேரருள் குறுநிலமன்னராக இருந்திருக்கலாம் என கருதப்படுவோர்;
சேரமான் எந்தை (குறு 22, அக 41 ) ;
கரூவூர் சேரமான் சாத்தன் (குறு 268),
மருதம் பாடிய இளங்கடுக்கோ(அக 96, 176 நற் 50),
நன்னன்,
ஆட்டன் அத்தி எனபோர்.


சோழர் தலைமுறை மீட்டமைப்பு
கி.மு. 450 – 380 முதற் கரிகாலன்
கி.மு. 380-320 சேரமான் பாமளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட் சென்னி
கி.மு. 320 – 270 செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
கி.மு. 270 – 245 பெரும்பூண் சென்னி
கி.மு. 245 – 232 உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
கி.மு. 232 – 200 கரிகாலன் II
கி.மு. 200 – 180 மணக்கிள்ளி
கி.மு. 180 – 160 வேல் ப்றடக்கை பெருவிற் கிள்ளி
கி.மு. 160 -125 போரவைக் கோல் பெருநற் கிள்ளி
கி.மு. 125 – 87 முடித்தலை கோல் பெருநற்கிள்ளி
கி.மு. 87- 62 கோப்பெருஞ் சோழன்
கி.மு. 62- 40 ஒற்றுமை வேட்ட பெருநற் கிள்ளி (ராசசூய)
கி.மு. 40 – 22 சேட்சென்னி நலங்கிள்ளி + மாவளத்தான்
கி.மு. 22 – 1 குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
கி.பி. 1 – 40 குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன்
கி.பி. 40 – 60 நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
கி.பி. 60 – 110 கரிகாலன் III
கி.பி. 110 -130 மாவண் கிள்ளி
கி.பி. 130 – 150 நெடுமுடிக்கிள்ளி
கி.பி. 150 – 180 செங்கணான்
கி.பி.180 — 210 இசை வெங்கிள்ளி
கி.பி. 210 – 240 கைவண்கிள்ளி
கி.பி. 240 – 260 பொலம் பூண் கிள்ளி
கி.பி. 260 -285 கடுமான் கிள்ளி
கி.பி. 285 – 330 நல்லடி (அக 356)
கி.பி. 300 – 400 ஆந்திர நாட்டில் சோழராட்சி
மேற்சொன்ன பாண்டிய, சேர, சோழ மன்னர்களின் காலத்தை மதிவாணர் நற்குடி வேளாளர் வரலாறு என்ற நூலைக் கருவி நூலாகக் கொண்டு மீட்டமைத்துள்ளார்.
அவர் ஒரு சில கூற்றுகள் பூராணப் பாங்கிலும் அரசர்பெயர் வடமொழி தழுவியும் இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் வரலாற்று உண்மைகளோடு பொருந்தி வருகின்றன் என இந்நூல் குறித்து கூறுகிறார். எனவே நற்குடி வேளாளர் வரலாறு நூற்பா ஆவணமாக சேர்க்கப்பட அன்பர்கள் முயல வேண்டு
14 டிசம்பர், 2015, PM 10:54

1 கருத்து: