|
புத., 4 ஜூலை, 2018, பிற்பகல் 9:40
| |||
Karthikeya Pandian Kalyani Gandhi
6 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தி
லிருந்து நீக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாழ்க்கை குறிப்பை உடனடியாக பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்.
6 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தி
லிருந்து நீக்கப்பட்ட பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத
்தேவரின் வாழ்க்கை குறிப்பை தமிழக அரசு தன் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்
ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“எனக்குப் பாய்தான் தெரியும்; பட்டுமெத்தைத் தெரியாது! எனக்கு அடக்கம் தெரியும்; ஆடம்பரம் தெரியாது! - என்று அறிவித்த எளியவர். பணத்தைப் பெற்று நல்ல குணத்தை இழந்துவிடாதே; குணத்தைப் பெற்று நல்ல மனத்துடன் வாழ்வதே மானுட வாழ்க்கையின் ஆக்கமான நோக்கம்! - என்று உரைத்த குணாளர். மக்களுக்கு நல்லதைச் செய்; அதை உடனே செய்! செய்வதை வேகமாகவும் செய்! அதற்காக வேலிதாண்டி விடாதே! - என்று கூறிய செயல்வீரர். நூறு ஏழைகள் ஒரு பணக்காரனை உண்டாக்குகிறார்
கள்; ஒரு பணக்காரனோ ஆயிரம் ஏழைகளை உண்டாக்குகிறான்! - என்று பகன்ற பாட்டாளிகளின் தோழன். நகரத்தைச் சுற்றி பொன்விளையும் பூமிகளையெல்லாம் கூறுபோட்டு விற்பார்கள்; பாலை விற்பதைப் போல், நாளை தண்ணீரையும் விற்பார்கள்! - என்று இன்று நடப்பதை அன்றே தீர்க்கமாய் கணித்த தீர்க்கத்தரிசி. . அன்னை நிலம் அந்நியனிடம் அடிமைப்பட்டுக்கிடப்பதை ஏற்க மறுத்து நாட்டின் விடுதலைக்குப் போராடிய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான தெய்வத் திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத
்தேவர் அவர்களின் கொள்கைகளையும், வரலாற்றையும் ஒவ்வொரு தமிழனும் படித்தறிந்து போற்றி பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். ஒருவன் கடந்த காலத்தை குனிந்து பார்ப்பது நிகழ்காலத்தில் நிமிர்ந்து நிற்கவே என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அப்படி பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக்க
ிடக்கின்ற தமிழ்ச்சமூகத்தின் பிள்ளைகள் எங்கள் கடந்தகாலத்தை திரும்பிப் பார்க்கிறோம் நிகழ்காலத்தில் நிமிர்ந்து நிற்பதற்காக.
கடந்த ஆண்டு பசும்பொன் ஐயாவின் வாழ்க்கை வரலாறு "தேசியம் காத்த செம்மல்" என்ற பெயரில் தமிழக அரசின் ஆறாம் வகுப்பு பாடநூலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்சமயம் எவ்வித காரணமுமின்றி நீக்கப்பட்டு இருக்கிறது
சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் பொருளேயில்லை;
சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால் நாடு கெட்டுவிடும் என்று போதித்த நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத
்தேவர் அவர்களை சாதிய அடையாளமாக கருதி நிறுத்தப்பட்டிர
ுப்பது எவ்வளவு பெரிய அவமானம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே
ண்டும்.
நமது மூதாதையர்கள் மருது பாண்டியர்கள் பூலித்தேவன், தீரன் சின்னமலை, அழகு முத்துக்கோன், சுந்தரலிங்கனார், பெரும்பிடுகு, வேலுநாச்சியார் போன்றவர்களை சாதியக் குறியீடுகளாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது காலங்காலமாய் தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்து வரும் வரலாற்றுத் துரோகம். இந்நிலையை மாற்றி பெருமைக்குரிய நம் இன முன்னோர்களைத் தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளமாகப் போற்றி கொண்டாடுவது நமது கடமை. ஐயா பசும் பொன் திருமகனார் ஒரு சாதிக்கான தலைவர் அல்ல. சாதித்த தலைவர். மேலும் தமிழ் இன முன்னோர்களின் வரலாற்றினை இன்றைய இளம் தலைமுறையினர் படிக்கத் தொடங்கும் போதுதான் வலிமையான தமிழகம் ஏற்பட வாய்ப்பாக அமையும்.
எனவே, ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம் எவ்வித காரணமின்றி தற்போது நீக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தமிழர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்குக் கற்பிக்காமல் திட்டமிட்டு மறைக்கும் செயலாகவே கருதத் தோன்றுகிறது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், ‘‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்திட்டம் 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெறவில்லை. ‘தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்’ என்ற தலைப்பில் வரும் ஆண்டு முதல் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும்.’’ என்கிறார் ஆனால் ஆறாம் வகுப்பு பாடநூலில் ஏன் நீக்கப்பட்டது என்பதற்கும் ஏழாம் வகுப்பு பாடநூலில் இந்த ஆண்டே சேர்க்காமல் ஏன் அடுத்த ஆண்டில் சேர்க்கப்படவிருக்கிறது என்பதற்கும் தகுந்த காரணங்களை அவர் விளக்கவில்லை. மிக முக்கிய முடிவுகளில் பின் வருவதை ஆராய்ந்து முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இது போன்ற தவறிய கால இடைவெளி ஏற்பட்டிருக்காது. எனவே தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு இந்தக் கல்வியாண்டு முதலே பாடநூலில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத
்தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம் மீண்டும் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும். இல்லையென்றால் தமிழ் இன முன்னோர்களின் வரலாற்றை மறைக்க முயலும் தமிழக மாநில அரசை எதிர்த்து மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை நாம் தமிழர் கட்சி சர்ர்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மீள்பதிவு
3 மணி நேரம் ·

அறிக்கை நாம்தமிழர் நாதக தேவர் முத்துராமலிங்கத் கல்வி பெருந்தமிழர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக