வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கரும்புலி வரலாறு சாதனைகள் 325 பேர்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 14 ஜூலை, 2018, முற்பகல் 10:57
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் வசந்தன்
விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்ற நடவடிக்கையொன்றை 1987 இன் நடுப்பகுதியில் மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.
திட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன. இப்போது எப்படியோ தெரியவில்லை. இத்தாக்குதல் பற்றிய முழுவிவரத்துக்கும் மில்லரின் தாயாரின் கருத்துக்களை அறியவும் இங்கே செல்லவும்.
அத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம் வந்துவிட்டது.
அதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில் கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பு போராட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்படத் திட்டமிடப்பட்டது. ஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத் தளபதியாயிருந்த போர்க் அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3 நாள் கடும் சமரின்பின் கரும்புலி லெப்.கேணல். போர்க்கின் அத்தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்படுகிறது. (இன்று கண்டி வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.)
அதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் மோதி கட்டளைக் கப்பலொன்றின் மீதான தாக்குதலைச் செய்தனர். அது தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள் தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக் கரும்புலிப்படகுகள் தான் என்றால் மிகையாகாது.
வெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம் மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம் மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு மாற்றமடைந்தது. பலாலி விமாத்தளத்தின் மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆண்கள் பெண்கள் என இருநூற்றைம்பதுக்கும் அதிகமான வீரர் வீராங்னைகள் தற்கொடைத்தாக்கு
தல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இதைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறைய.
பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (பெண்களைக் குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு. ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி இன்னும் அப்படிச் சொல்லப்படவேண்டிய தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.) முதற் பெண் கடற்கரும்புலி கட்பன் அங்கயற்கண்ணி. முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.
பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் பிரபாகரன் சொல்கிறார்: “பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”
போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தான் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தது. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்தது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டதுக்கான முழு வினியோகமும் கடல்வழி மூலந்தான். அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணி. பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும்பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான். மீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்தத
ும், மக்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான். இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகள் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக் கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை. பெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள் தாக்கியழிக்கட்ட
ிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160 கிலோ மீற்றருக்குமதிக
ம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. கடற்புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தது தான் காரணம்.)
பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலந்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தான் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தது. பொருளாதாரமென்றா
லும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி இத்தாக்குதல்கள் தான் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “தடை நீக்கிகள்” என்று இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.
எதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப் புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள். யாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும் ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டடியலில் அவர் பெயரும் இருக்கும். நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால் முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல், கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தான். எதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாத படிதான் தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர். அப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.
“நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள் சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்.”
பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான்.
கரும்புலிகள் நாளான இன்று அனைவரையும் நினைவு கூர்வோம்.
(Pathivu)
5 ஜூலை, PM 3:35 · பொது
சேமி
Dharanidharan AP மற்றும் 128 பேர்

கோ ஜெயச்சந்திரன் வன்னியன்
எத்தனை மாவீரர்கள் அடையாளமில்லாமல் தன்னையழித்து தன் இனத்திற்காக வீரமரணமடைந்திரு
ப்பர்... பதிவை படிக்கும் பொழுது எல்லாம் காட்சிகளாய் ஓடுகிறது மனதில்... கரும்புலியாய் இருந்து இனத்திற்காக இறந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது...
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · ஜூலை 5

Ganesharajah Ganesh
வெளியே தெரிந்த கரும்புலிகளாக (இறுதி சண்டையைத்தவிர) 325 கடல்,தரை,வான் கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்...
மறைமுக கரும்புலிகள் எத்தனை பேர் என்டது தெரியல்ல...

புலிகள் போர்த்தந்திரம் போர் ராணுவம் 

சிந்துசமவெளி அகழ்வாராய்ச்சி அறிஞர்கள் ஆரியர் கற்பனை

aathi1956 aathi1956@gmail.com

சனி, 14 ஜூலை, 2018, முற்பகல் 10:43
பெறுநர்: எனக்கு
நிலா. வேங்கடவன் , ந.ம.நிரஞ்சன் குமார் மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
சிந்து சமவெளி நாகரிகமும் ஆரியர் படையெடுப்பும்...!
தினத்தந்தி நாளிதழ் செய்தி (2018.07.07): ““ ‘கோட்டா திம்பா’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ‘தோலாவிரா’ எனும் (குசராத் மாநிலம் - கட்ச் மாவட்ட தலைநகர் புச்-இலிருந்து 200 சீர்கல் தொலைவில் - காதிர்பேட் தீவில் அமைந்துள்ள) சிற்றூரில் இந்திய தொல்லியல் ஆய்வகமும் காந்திநகர் ஐ.ஐ.டி. குழுவினரும் நடத்திய அகழ்வாராய்ச்சிப் பகுதியில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிந்து சமவெளி நாகரிக நகரம் இருந்ததும் அங்கு மிகப்பெரிய நீர் சேமிப்புக் கட்டமைப்பு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
‘சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர். தோலாவிரா கிராமம் பாலைவனத்தில் அமைந்திருந்தாலும் ஒரு காலத்தில் அது வளம்மிக்க , கலாச்சார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது; ஒரு சர்வதேச வர்த்தக நகராகவும் திகழ்ந்திருக்கி
றது’ என்று தெக்கான் தொல்லியல் கல்லூரியின் துணைவேந்தர் வசந்து சிண்டே கூறுகிறார்.
சிந்துவெளி நாகரிகம் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக முனைவர் சமர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் சிண்டேவும் சிந்துசமவெளி நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்கிறார்.
மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர்கள் படையெடுப்பே, சிந்து சமவெளி நாகரிகம் அழியக் காரணம் என்று இங்கிலாந்து இராணுவ அதிகாரியும் தொல்லியல் ஆய்வாளருமான சர் எரிக் மார்டிமர் வீலர் குறியிருந்தார்.
அதை மறுக்கும் சிண்டே, இயற்கை சீற்றமே அந்த நாகரிகம் அழியக் காரணம் என்கிறார். சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை, தோலாவிரா நகரம் அழியக்காரணமாக இருந்திருக்கலாம் என்று அங்கு ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர்.””
ஏற்கனவே நாங்கள் வந்து,
{‘அருள்நிலா’ கட்டுரைகள் இந்த ‘ஆரியர் ’ கருத்தியலை ( Aryan Migration )மறுத்து எழுதிய முகநூல் பதிவுகள்,ஆரிய இனம் என்றோர் இனமுண்டா? 2016, மற்றும் 2017 சூன் 17 ; யார் ஆரியன்? - யார் திராவிடன்...? (1 செப்டம்பர், 2017 ) ....போன்றவை}
இந்தக் கருத்தை - அதாவது ‘ஆரியர்’ வந்து ஒரு இனத்தைச் சுட்டுமானால், ஒரு தவசத்திற்கு ‘ஆரியம்’ என்று வைக்கமுடியுமா?காட்டாக, தமிழன் என்று ஓர் இனம் ; அப்ப, ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது தவசத்திற்கு ‘தமிழன்’ என்று பெயர் வைப்பார்களா??
அண்மைக்காலத்தில் வெளியான ‘பாலிமொழி அகரமுதலியில்’ ஆரியர் என்ற சொல், ஆசியாக்கண்டம் முழுக்கவும்,பல மொழிகளிலும் ‘உயர்ந்தவன்’, ’தலைமையானவன்’, ‘அரிய ஆற்றலுள்ளவன்’ என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது! மேலும் அந்த அகரமுதலி ‘ஆரியர்’ என்ற சொல்லின் வேர் ‘தமிழில் தான் உள்ளது’ என்று அறிவித்துள்ளது. அந்தவேர் >அருமை - அருமையர் -அரியவர் > ஆரியர் .
ஆக, ஆரியம் - உயர்வு என்ற பொருளைக்கொண்ட ஒரு பண்புப் பெயர். ‘பண்பு’ப் பெயரில் ஒரு இனம் இருக்க முடியுமா??
அதாவது, ஆரியர்கள் வந்து நம்மிடமிருந்த அறிவுத் தரப்பினர் - நச்சு எண்ணம் கொண்ட அறிவர்கள், கொடுங்கோல் மன்னர்களுடன் உறவு கொண்டு, மக்களுக்கு எதிராகப் பேசிய அறிஞர் தரப்புத்தான் ‘ஆரியர்’ களாக மாறினார்கள்; மற்றபடி அவர்கள் வேறு எங்கிருந்தோ வரவில்லை என்று குறிப்பிட்டிருந்தோம்.
இப்படி பல கோணங்களில், ஆரியர் என்ற சொல்லை , அதன் மூலக்கருத்தை ஆய்ந்து, அது ஒரு பண்புச் சொல் - அது ஒரு இனத்தைக் குறிக்க வாய்ப்பே இல்லை! இடையில் வந்த அரசியல் சூதாட்டம் கருதி அது நிலைத்து விட்டது என்ற கருத்துக்களைப் பதிவுசெய்திருந்
தோம்.
அக்கருத்துகளுக்கு அரண் செய்யும்வண்ணம் அடுக்கடுக்கான சான்றுகள் வந்துகொண்டுள்ளன. அதில் மேற்சுட்டிய (2018.07.07 தினத்தந்தி) நாளிதழ் செய்தியும் ஒன்று.
“ஆரிய மெய்யினம் (Aryan Race) எனும் கருத்து 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றியது” என்பார் வரலாற்றாய்வறிஞர் குணா (தமிழரின் தொன்மை -பக் 53)
ஆரிய இனக் கோட்பாடு முழுப்பொய்யானது, அடிப்படையற்றது! எப்படி மூல திராவிடமொழியின் எச்சங்கள் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லையோ, அப்படியே ஆரிய இனம் என்ற கருத்தாக்கத்தின் சான்று அடிப்படைகள், உலகில் எங்கு தேடினாலும் ,இதுவரை கிடைக்கவில்லை; இனியும் கிடைக்காது!
‘திராவிடம்’ என்பது வர்ணநெறி மனுவியத்தின் (நச்சு ஆரியத்தின் ) நீட்சி; வர்ணநெறி மனுவியத்தின் மறுபக்கம். வர்ணநெறி மனுவியத்திற்கு இணையான தமிழர் இனப்பகை திராவிடம். வடுகர்கள், திராவிட வில்லையைத் தமிழர்கள் நெற்றியில் கட்டி விட்டிருக்கிறார்கள்.
ஒரு புரிதலுக்காகக் கூறுவதானால்,
இங்கு இருக்கிற சுப.வீரபாண்டியன
்களும் செந்தலை கவுதமன்களும் அவரன்னோரும் தான் இப்ப இருக்கிற (அ) நம்மில் உருவாகிவாகிவருகிற ஆரியர்கள்; இன்றைய திராவிடப் போர்வையில் இருக்கிற ஆரியர்கள் இவர்கள்தாம்.
திராவிடம், தமிழை ஒழித்துக் கொண்டே - கல்வியிலிருந்து - ஆட்சியிலிருந்து - மக்கள் பயன்பாட்டிலிருந்து - ...தமிழை நீக்கிக் கொண்டே, திராவிடம் தமிழுக்காக இருக்கிறது - தமிழுக்காகப் பாடுபடுகிறது என்ற தோற்றத்தைக் கொடுப்பதற்குப் பயன் பட்டவர்கள்/படுகிறவர்கள் பலர்! இதில் பேரா.நன்னன், திராவிட அணி, ‘ரொம்ப தமிழுக்குத் தொண்டு செய்கிறது’ என்பதாகக் காட்டப் பயன்படுத்திய கருவிகளில் முதன்மையானவர். பேரா.நன்னனுடைய வரிசையில்மற்றும் சில தமிழர்களும் அடங்குவார்கள் : சிலம்பொலி செல்லப்பன், சுப.வீரபாண்டியன், க.ப.அறவாணன்... போன்றவர்கள்.இவர
்களெல்லாம் திராவிடத்திற்கு, ஏதோ ஒருசில பயன்களுக்காக, இந்த இனத்தையே காட்டிக்கொடுக்கிற பணியைச் செய்தவர்கள்/செய்கிறவர்கள்.
-அருள்நிலா.

ஆரியர் என்ற இனம் கிடையாது அருள்நிலா

aathi1956 aathi1956@gmail.com

சனி, 14 ஜூலை, 2018, முற்பகல் 10:36
பெறுநர்: எனக்கு
இந்தியாவில் உள்ளவர்கள் யாவரும் வந்தேறிகளா? ஆரிய இனம் என்றோர் இனமுண்டா?
June 17, 2017 · nilaavengadavan
(இன்றைய ஆங்கில இந்து நாளேடில் ஒரு முக்கிய ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. ( How Genetics is settling the Aryan Migration Debate..by Tony Joseph) இதில் இந்தியாவில் உள்ளவர்கள் யாவரும் வந்தேறிகள் என கடைசிவரி முடிகிறது… – Palani Deepan 17-06-2017-FB)
ஆரிய இனம் என்றோர் இனமுண்டா?
ஆரிய இனம் என்று ஓர் இனம் இருப்பதாக இந்நாள் வரை பரப்பப்பட்டும் நம்பப்பட்டும் வருகிறது. அப்படியோர் இனம் இல்லவே இல்லை!ஏனெனில் ஆரிய இனத்திற்கென்று ஒரு மொழி இல்லை; வரையறுக்கப்பட்ட வாழ்நிலம் இல்லை! அதனாலேயே, எங்கிருந்தோ ஆரியர்கள் வந்ததாகக் கதை கட்டப்பட்டது. ஆரியர் புறப்பட்டு வந்ததாகச் சொல்லப்படும் ’புறப்பாட்டிடம்’ இதுவரை யாராலும் சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்படவில்லை.
பதினாறாம் நூற்றாண்டுக் காலத்திலிருந்து உலகமெங்கும் அடிமை நாடுகளைக் கைப்பற்ற புறப்பட்ட ஐரோப்பியர்கள், அவர்களுடைய தேவைக்காக மொழியியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டனர். அந்த அடிப்படையில்,வில்லியம் சோனிசு[William Jones], மாக்கிசு முல்லர் [ Max Muller] ஆகியோர் இந்தியாவினுடைய மேட்டுக்குடி மக்களின் மொழி சமற்கிருதம் என்றும், அவர்கள் ஆரியர் என்று அழைக்கப் படுகிறார்கள் என்றும் அறிந்தார்கள். சமற்கிருதமே, இந்திய மொழிகளுக்கும்,ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமாக இருக்கும் என்றும் நம்பினர்! உடனடியாக ஐரோப்பியர்களும், இந்திய ஆரியர்களும் உறவினர்கள் என்ற கருத்தாக்கத்தை ஏற்படுத்தினர்.அதன் விளைவுதான்,இந்தியாவில் உள்ள ஆரியர்கள், இந்தியாவிற்கு வெளியேயிருந்து வந்தவர்கள் என்ற கோட்பாட்டை முன்மொழிந்தனர்.இந்தக்கருத்திற்கு துணைசெய்வதற்காக, மாக்கிசு முல்லர் அவர்கள், ’ஆரியன்’ என்ற சொல்லின் வேர், இலத்தீன் மொழியிலுள்ள ‘ஏர்’ என்பதாக முன்மொழிந்தார்.ஆனால்,’ஏர்’ என்பது இலத்தீன் மொழியிலும் உறவு சார்ந்த பொருளிலேயே இருக்கிறது. ஆனால்,மாக்கிசு முல்லர் காலத்து இந்திய -ஆரியர்களுக்கு, ’உழவு’ என்பது இழிதொழில். எனவே, மாக்கிசு முல்லரின் வேர்ச்சொல் ஆய்வால்,இந்திய -ஆரியத்தைக் காப்பாற்ற முடியவில்லை! பின்னர், ஆரியத்தின் வேர்,’ரூ’ என்று சமற்கிருதவாணர்களால் முன்மொழியப்பட்டது. ‘ரூ’ என்ற முன்மொழிவு, முழுக்க முழுக்க மொழியியல் நெறிகளின்படி பொருத்தமற்றது என்று பல மொழியியல் அறிஞர்களால் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!
அண்மைக்காலத்தில் வெளியான ‘பாலிமொழி அகரமுதலியில்’ ஆரியர் என்ற சொல்,ஆசியாக்கண்டம் முழுக்கவும்,பல மொழிகளிலும் ‘உயர்ந்தவன்’, ’தலைமையானவன்’, ‘அரிய ஆற்றலுள்ளவன்’ என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது! மேலும் அந்த அகரமுதலி ‘ஆரியர்’ என்ற சொல்லின் வேர் ‘தமிழில் தான் உள்ளது’ என்று அறிவித்துள்ளது. அந்தவேர் >அருமை – அருமையர் -அரியவர் > ஆரியர் ‘. இந்த வெளிப்பாட்டுக்குப் பின்னால் ஐரோப்பியர்கள் எவரும் ஆரியத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு உறவாட முன்வரவில்லை!
ஆனால்,தமிழ்நாட்டிலுள்ள வடுக அநாகரிகர்கள்,இன்றுவரை ஆரிய வந்தேறி இனம் இருப்பதாகவும், அதுவே அனைத்துக் கேடுகளுக்கும் கரணியம் என்பதாகவும், அந்த ஆரிய இனத்திலிருந்து, தமிழர்களைக் காக்க,வடுகர்களால் மட்டுமே முடியும் என்றும் கூறி,தமிழ்நாட்டு இறையாண்மையை திராவிட முகமூடியின் கீழ் இருந்துகொண்டு தக்கவைத்து வருகின்றனர்.
எப்படி ’காலிடு வெல்’ முன்மொழிந்த திராவிடக் கருத்தியலும், மூலதிராவிட மொழிக்கோட்பாடும் முழுப்பொய்யானது, அடிப்படையற்றது என்று பாவாணர் போன்றோரால் மெய்ப்பிக்கப்பட்டதோ, அதுபோலவே, ஆரிய இனக் கோட்பாடும் முழுப்பொய்யானது, அடிப்படையற்றது! எப்படி மூல திராவிடமொழியின் எச்சங்கள் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லையோ, அப்படியே ஆரிய இனம் என்ற கருத்தாக்கத்தின் சான்று அடிப்படைகள், உலகில் எங்கு தேடினாலும் ,இதுவரை கிடைக்கவில்லை; இனியும் கிடைக்காது!
இனி, ஆரியத்தை, பாலிமொழி அகராதி தெளிவு படுத்தியதற்கு ஒப்ப, தமிழிலிருந்தே தொடங்கவேண்டும். அந்த வகையில், ஆரிய இனம் தனி இனமன்று,தமிழ்க்குடியில் இருந்த ஓர் அரிய உட்குடி மட்டுமே! மேலும் தொடருமுன்னால், ஆரியர் என்ற சொல்பற்றி சில விளக்கங்கள் : எந்தவோர் ஆரியப்படையும், வடக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு {குறிப்பாக கும்பகோணத்திற்கு } படையெடுத்து வந்ததாக வரலாற்றுச் சான்றில்லை! ஆனால்,கும்பகோணத்துக்குப் பக்கத்தில் இன்றும் ‘ஆரியப் படையூர்’ ; பம்பப் படையூர் ‘ என்று இரண்டு சிற்றூர்கள் உள்ளன. இப்போதைய நிலையில், இரண்டு ஊர்களிலும், தமிழ்க்குடியினரே வாழ்ந்து வருகின்றனர்! தங்களை ஆரிய வழி வழியினர் என்று சொல்லிக் கொள்ளும் மனுவாதிகளுடைய சில குடும்பங்கள் மட்டும், பக்கத்திலுள்ள ‘ பத்தீசுரம்’ என்ற சிற்றூரில் காணலாம். தமிழர்களுடைய அந்தக்கால படைப் பிரிவுகளில், மிக அரிய ஆற்றல் படைத்த படைப் பிரிவிற்கு ‘அரிய படை’ அல்லது ‘ஆரியப் படை’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். பம்பப் படை என்பது அந்தக் காலத்திலிருந்த தனியொரு படை! இந்தச் செய்திகளைத்தான் ‘ஆரியப் படையூரும்’ , ‘பம்பப் படையூரும்’ சொல்கின்றன.இந்தத் தெளிவின் அடிப்படையில், பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரிய இனத்துப் படையை வென்று வரவில்லை; வடபுலத்திலிருந்த ஓர் அரிய படையை வென்றுவந்தான் என்று விளங்கிக் கொள்ளவேண்டும்.
மேலும் ‘ஆரியம்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு ‘அருகிச் சிறந்தது’; ‘அருமை உடையது’ என்று பொருள். இந்த அடிப்படையில் தான் அருமை கருதி ‘அரிசி’ என்றும்,அரிய ஊட்டங்கள் கொண்டது என்ற அடிப்படையில் ‘கேழ்வரகு’ – ஆரியம்’ என்றும் அழைக்கப் படுகின்றன.. மேலும், 2001, 2011 மக்கள் குடிக்கணக்கில் பழனிமலை வாழ் மக்கள், தங்களை ‘ஆரிய வேளாளர்’ அதாவது ‘ அரிய வேளாளர்’ என்று பதிந்துள்ளனர். இன்று , மனுவாதி ஆரியன் என்று சொல்லிக்கொள்கிறவனுக்கும் ’வேளாண்மைக்கும்’ ஏதேனும் தொடர்புண்டா? எனவே , ஆரியர் என்பது, வேற்றினத்தைக் குறிப்பதல்ல,தமிழ்க்குடியில் ஓர் அரிய உட்குடியைக் குறித்த சொல்லே ஆகும்!
இந்த அரிய தமிழ்க்குடிதான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கொள்கைத் தமிழ்ச் சான்றோர் குடியாகும்! இவர்கள் காலத்தில் தான், ‘கொடுப்பது உயர்வு – அதனை மறுத்தல் அதனினும் உயர்வு’
என்றும்
‘ தீதும் நன்றும் பிறர் தர வாரா’
என்றும்,
‘துய்ப்போம் எனினே தப்புந பலவே’
என்றுமாய்
அமைந்த பொதுமை நெறி சார்ந்த தமிழியக் கருத்துக்கள் நிலைநிறுத்தப்பட்டன.
இந்த அரிய தமிழ்க்குடி, மக்களுக்காக வாழ்ந்தனர்; மன்னனைக் கட்டுப்படுத்தி, மக்கள் நலனுக்காக வழிநடத்தினர்! எனவேதான், அந்தக் காலத்தில் ‘அரச கருமத்தலைவர்’ ஆரியர் அதாவது ‘அரியர்’ என்றே அழைக்கப்பட்டுள்ளார். காலப் போக்கில்,அரசர்கள், அறிஞர் சொல் கேட்பதைவிட, தந்நலப் போக்கிலும்,தம்முணர்வுப் போக்கிலும் செயலாற்றுவதே படிநிலை வளர்ச்சியாயிற்று. எனவே, செம்மாந்த அரிய தமிழ்க்குடி, அரசனுக்குட்பட்ட அடிமைக்குடியாயிற்று.அரசர்களின் ஆட்சி, அறத்தின்பாற்பட்ட வெளிப்படையான,மக்களுக்கான ஆட்சி என்ற நிலையிலிருந்து, அரசர்கள் நலம் சார்ந்த, கரவான ஆட்சி என்ற நிலைக்கு மாற்றம் கொண்டது. இந்தச் சூழ்நிலையில், மக்களுக்காகவே வாழ்ந்த அரிய தமிழ்க் குடியினரில் பெரும்பகுதியினர் அரசப் பிடியிலிருந்து விலகி, மக்களோடு சேர்ந்து வழக்கம்போல மக்களுக்காகவே வாழ்ந்தனர்.
அரிய தமிழ்க்குடியில், தந்நலம் சார்ந்த ஒரு பகுதியினர் மட்டும், தங்களுடைய அரிய ஆற்றலை, மன்னனுக்குப் பயன்படுத்தி, தாங்களும்,மேனிலையும் – தந்நலப் பயன்பாடும் கொள்ளத் துணிந்தனர். இந்த அரிய ஆற்றல் கொண்ட கும்பல்தான், மன்னனுக்கு கரவான ஆட்சி புரிவதற்குத் துணையாக, ஒரு கரவான ஆட்சிமொழியை உருவாக்கிக் கொடுத்தனர் ; அதுதான் ‘சமற்கிருதம்’.
இந்தக் கும்பல்தான் பின்னாளில், அரசர்களுடைய மக்கள் இரண்டக செயல்பாடுகளை முழுக்கத் தெரிந்துகொண்டு ,மன்னர்களை, மக்களைக் காட்டிக் காட்டி மிரட்டி ,அவர்களை [அரசர்களை]த் தங்களுக்குக் கீழ்ப்படுத்தினர். இந்தக் கும்பல்தான், பின்னாளில் வந்த ’வர்ண மனுதர்மக்’ கோட்பாட்டுக்கும் அடிப்படை.
இந்தக் கும்பல் உருவாக்கிய கரவுமொழியாம் சமற்கிருதமே தமிழ் பலநூறுமொழிகளாய்ச் சிதையக் காரணம். இந்த தந்நல அரிய தமிழ்க்குடி, முழுக்க முழுக்க தமிழர்களுக்கு எதிரான குடியாக மாறிப்போனது.
இந்தக்குழுவினர், வாய்ப்புக் கிடைக்கும் போது மன்னர்களையே ஆள்வதும், வாய்ப்பில்லாத காலங்களில் மன்னர்களுக்கு அடங்கிக் கிடப்பதும் வரலாற்றில் நெடுகவும் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த நச்சு குழுவினர்களின் கை ஓங்கியதற்குப் பின்னர், தமிழியத்தில் இருந்த பல விழுமியங்கள் அழிக்கப்பட்டன.மக்களின் பொதுச் சொத்தாக தமிழில் இருந்த :’வானியல் நூல்கள்,மருத்துவ நூல்கள்,கட்டிடக்கலை நூல்கள்,கப்பல்படை நூல்கள்..’ போன்ற பலதுறை நூல்கள் தமிழில் முற்றாக அழிக்கப்பட்டு, சமற்கிருதத்துக்கு மாற்றப்பட்டன.
இந்த நச்சுக் குழுவினரின், நச்சு விளைச்சலின் ஒரு வடிவம்தான், ‘வடுக அநாகரிகர்’ !
இப்பொழுது புரிகிறதா? ஆரிய இனம் எங்கிருந்தோ வரவில்லை,இங்கிருந்துதான் கிளம்பியிருக்கிறது. இன்றுவரை தன் தாய் இனத்தை, ஈவிரக்கமின்றி கீழ்மைப்படுத்தி வருகின்றது!இந்த நச்சுக் கும்பலின் அட்டகாசம் தாங்கமுடியாமல் , உண்மையிலேயே ‘ஆரியன்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு ‘தலைவன்’,உயர்ந்தவன்’, ’அரியவன்’, ‘அரசகருமத்தலைவன்’ என்றெல்லாம் பொருளிருக்க, சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த ‘திவாகர பிங்கல நிகண்டு’களில் ‘ஆரியன்’ என்ற சொல்லுக்கு ‘மிலேச்சன்’, இழிந்தவன்’..என்று பொருள் எழுதி வைத்தனர்.
இந்த நச்சுக் குழுவினரை மறுத்து, மக்களோடு சேர்ந்து வாழ்ந்தார்களே – அந்த அரியர்கள் வழி வழியினர்தான் :’தொல்காப்பியர்’, திருவள்ளுவர்’, ‘கணியன் பூங்குன்றனார்’,’சங்க இலக்கியப் படைப்பாளிகளாக இருந்தவர்கள்’, பின்னாளில் வந்த ’சித்தர்கள்’,’ஐயா வைகுந்தர்’,’வள்ளலார்’..போன்றோர்.
இன்றைய தமிழர் சமூகநிலையைப் பார்ப்போம் : ’தமிழர் தங்களைத் தமிழராக அறிந்து உணர்ந்தவர்களாக இல்லை’. ஒரு பக்கம், வடுகர்கள், திராவிட வில்லையைத் தமிழர்கள் நெற்றியில் கட்டிவிட்டிருக்கிறார்கள்; மறுபக்கம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழருக்கு எதிராகக் கிளம்பிவிட்ட அரிய நச்சுத் தமிழ்க் குடியினர், இந்தியாவெங்கும் கால்பரப்பி சமற்கிருதத்தைப் பயன்படுத்திக் கொண்டு,ஒரு இந்திய மேலாளுமைக் கும்பலை நிலைநிறுத்தி பல அரசாட்சிகளையும், கடைசியாக வந்த ஆங்கிலப் பேராட்சியையும் தாக்குப் பிடித்து, தொடர்ந்து நிலைத்துவரும் தங்களுடைய மேலாண்மையின் பேரால், தமிழர்களுடைய நெற்றியில் ‘இந்தியன் ‘ என்ற வில்லையை தொங்கவிட்டிருக்கின்றனர். தமிழன், தனக்குரிய ’தமிழன் வில்லையைக்’ கண்டறிவது எப்போது?
அதைப் போலவே தமிழர் இறையாண்மையைப் பறித்துக்கொண்டு,தொடர்ந்து தமிழர்தம் இறையாண்மை தமிழ்நாட்டில் தலையெடுக்காதபடி அத்துணை சதிவேலைகளையும் செய்துவருகிற தெலுங்கு,கன்னட,மராத்திய,உருது-முகமதிய படையெடுப்பாளர்கள் தமிழர்களின் பிறவிப் பகைவர்கள்! தமிழ்நாட்டில், தமிழர் இறையாண்மை தலையெடுக்க வேண்டுமானால்,தமிழ்நாட்டு சமூகவாழ்க்கையிலிருந்து தள்ளிவைக்கப் படவேண்டியவர்கள். தமிழ்நாட்டில் தமிழருக்காக இயங்கிவரும் தமிழர் அமைப்புக்களிலிருந்து அகற்றப்படவேண்டியவர்கள். உடனடியாகத் தமிழர்களுக்காக இயங்கிவரும் அமைப்புகளில், தலைமைப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படவேண்டியவர்கள்.
சொல்லுக்குச் சொல் சமூகநீதி பிதற்றும் வடுகர்களே, 10-பேர் அறக்கட்டளை உறுப்பினர் என்றால், 9-பேர் தமிழராக இருக்கவேண்டும்! வடுகர்கள் சமூகநீதியை நிலைநாட்டாவிட்டால்,தமிழர்களே போராட்டங்களை முன்னெடுத்துத் தமிழர்க்கு தமிழர் சொத்துக்களின் மீதுள்ள உரிமையை நிலைநாட்டுங்கள்.இந்தவகையில் போலி சமத்துவம் பேசும் வடுக அநாகரிகர்கள், தமிழர்களிடமிருந்தே சொத்துக்களைப் பறித்துக்கொண்டு,தமிழர்கள் துணையுடனே, தமிழர்களுடைய சொத்துக்களின் இறையாண்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கிற அயோக்கியத்தனத்தாலும்,குள்ளநெறித்தனத்தாலும் உடனே அம்பலப்படுத்தப் படவேண்டியவர்கள்!
எனவே மேற்கண்ட படையெடுப்பாளர்கள், அவர்கள் படையெடுத்து தமிழரிடமிருந்து பிடுங்கிக் கொண்டவற்றையெல்லாம், தமிழரிடம் ஒப்படைத்து,தமிழர் இறையாண்மையை ஏற்கும்வரை, அத்தரப்பினர் அனைவரும் தமிழர்களின் எதிரிகளே! இதில் எந்தவித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.
மேலே குறித்த மூலப்பகைவனாம் ‘தமிழோ-சமற்கிருதனையும்’, அடுத்து படையெடுத்து தமிழர் இறையாண்மையைப் பறித்த பிறமொழி எதிரிகளையும் இன்னும் அறியாமையால், அல்லது கைக்கூலித் தன்மையால் போற்றித்துதிபாடும் தமிழர்க்கு, அறிவார்ந்த தமிழர்களே, தக்கப் பாடம் புகட்டுங்கள். இன்னும்கூட, படையெடுத்து வந்த பிறமொழியாளர்களிடம் அறிவுப்படையாகவும், ஆளணிப்படையாகவும்,பணியாற்ற நேர்ந்த அவலத்தை மறந்துவிட்டு, பிறமொழிப் படையெடுப்பாளர்களை எதிரிகளாகக் கருதும் தமிழர் நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
சுருக்கமாக, ஆரியன் என்று ஓர் இனத்தவனோ, அந்த ஆரிய இனத்தைச் சார்ந்த மனுதர்மவாதியோ, மனுதர்மத்தைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக்கொள்கிற ஆரியப் பார்ப்பனனோ , தமிழ்க்குடிக்கு வெளியேயிருந்து வந்தவர்களல்லர்,ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அரிய ஆற்றல்களைக் கொண்ட நச்சுத் தமிழறிஞர்களின் வழிவழியினரே! எனவே தமிழோ-சமற்கிருதன் [ஆரிய இன வடிவமைப்பாளன்] என்றைக்கும் தமிழரின் மூலப் பகைவனே! தமிழோ-சமற்கிருதர்களின் மற்றொரு வடிவமானவர்களும்,தமிழ்நிலத்தின் இறையாண்மையைப் பறித்தவர்களுமான ‘தெலுங்கு-கன்னட-மராத்திய-உருது முகமதியர்’கள், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கும்வரை, விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லா எதிரிகள்! மேற்குறித்த இரண்டு வகை எதிரிகளோடும் ஏதோவொருவகையில் உறவாடுபவர்கள், தமிழர்களாகப் பிறந்திருப்பினும், அவர்களும் தமிழர்க்கு எதிரிகளே!
எனவே, எதிரிகளை ஈவிரக்கமின்றிப் புறந்தள்ளிவிட்டு, தமிழை வாழ்வியல் மொழியாகவும்,தமிழியத்தை [இயற்கை தழுவிய வாழ்வியல், ஐந்திணையியல், ஐம்பூதவியல்,ஐந்திரவியல்,எண்ணியம்,உலகாய்தம்,துன்பப்படும் தமிழர்க்கு உடனடித் தீர்வுடன் தொண்டுசெய்யும் ஆசீவகநெறி,சமத்துவத்தையும் பொதுமைநெறியையும் போற்றிய வள்ளுவம்,சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அன்புக்கொடி ஏந்தி, அனைத்துத்தரப்பு மக்களையும் திரட்டிப் போராடிய தமிழர்தம் தன்மானத்தந்தை ஐயா வைகுந்தரின் ‘ஒவ்வொரு மனிதனும் கடவுள், சமத்துவ அடிப்படையில் நடக்கும் சடங்குகளற்ற மனிதக் கூடலே இறைவழிபாடு, பதிகள்தோறும் பள்ளிகள் அமைத்தல் ‘ போன்ற கோட்பாடுகள்,சாதிமதம் கண்மூடிப்பழக்கங்கள் போன்றவற்றை மறுத்து, உயிரிநேயம் போற்றும் வள்ளலாரியம்] வாழ்க்கை நெறியாகவும், விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லாத தாய்நிலமாம் தமிழ்நாட்டை போற்றிக்காப்பவனும் மட்டுமே தமிழன்!
தமிழர்களே , தமிழர்களாகத் திரளுங்கள், விழிப்புடன் எதிரிகளை ஈவிரக்கமின்றிப் புறந்தள்ளுங்கள்,தமிழர் இனத்தைக் கட்டுங்கள், தமிழர் இறையாண்மை தானே தழைத்து வரும்! தமிழர் இன மீட்பர்களின் வரிகளை எண்ணிப் பாருங்கள் :
“ எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்… இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”. [பாவேந்தர்] ;
“தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் – அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் “ [பாவாணர்].
“[தமிழர்க்கு] விடுதலை வேண்டும் முதல் வேலை, வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!” [பாவலரேறு].
Published by
nilaavengadavan
View all posts by nilaavengadavan
Share this:
Twitter Facebook Google அறிவர்-சி.பா.அருட்கண்ணனார்.
(கடந்த ஆண்டுப்பதிவு)

மொத்தம் எட்டு 8வழி சாலைகள் வரவுள்ளன

aathi1956 aathi1956@gmail.com

சனி, 14 ஜூலை, 2018, முற்பகல் 9:35
பெறுநர்: எனக்கு
Veeraa VK
தமிழ் நாட்டில் விவசாய நிலங்களை அழித்து பாரத் மாலா திட்டத்தின் 9 சாலைகள்
சென்னை - சேலம் சாலை போல, க்ரீன் பீல்ட் என்று சொல்லக்கூடிய புதிய 8 வழி சாலைகள் 570 கிமீ அளவிற்கு 8 சாலைகள் வர இருக்கிறது. இதற்காக 43,000 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது அனைத்துமே பெருமளவு விவசாய நிலங்களை அபகரித்து தான் செய்லபடுத்தப்படும். காரணம் விவசாயிகளிடம் நிலத்தை பறிப்பது எளிது என்கின்றனர் அதிகாரிகள். இந்த சாலைகள் அனைத்தும் மத்திய அரசின் NHAI கட்டுப்பாட்டில் வந்துவிடும்
ஒன்பது சாலையின் விவரங்கள் :
1. சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் வே,
2. கரூர் - கோயம்புத்தூர் சாலை
3. மேலூர் இருந்து திருப்பத்தூர் - புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் வரை
4. கும்பகோணம் - சீர்காழி சாலை
5. மஹாபலிபுரம் - பாண்டிச்சேர சாலை
6. ஓட்டாஞ்சத்திரம் - கமலாபுரம் சாலை (திண்டுக்கல் - ஒடிஞ்சாத்ரம் - பொள்ளாச்சி வழியாக)
7. மதுரை - தனுஷ்கோடி
(பரமகுடி - ராமநாதபுரம் 4 வழியாகவும் அங்கிருந்து தனுஷ்கோடி வரை இரண்டு வழி ) தனுசுகோடி முதல் தலைமன்னார் வரையிலான பாலம் உற்பட
8. சென்னை - சித்தூர் சாலை
9. ஓசூர் வட்ட சாலை (பெங்களூரு சேட்டிலைட் சுங்க சாலையின் பகுதியாக)
இது அனைத்தும் BIMSTEC கூட்டமைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியான பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறது. இது அனைத்தும் கனிம வளங்கள் மற்றும் துறைமுகத்துடனான போக்குவரத்துக்காக காட்டப்படுகிறது

வழிச்சாலை சாலை திட்டம் நாசகார கார்ப்பரேட் 

வலையர் முத்தரையர் இடையர் மக்கட்தொகை சதவீதம்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 14 ஜூலை, 2018, முற்பகல் 9:23
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah, Gunaseelan Samuel மற்றும் 14 பேருடன் இருக்கிறார்.

விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் வலையர், முத்தரையர், இடையர்
- - - - - - - - - - - - -
1891 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பில் உள்ள தொகை 4-5 மடங்குக்கு அதிகரித்துள்ளது. 

1981 கணக்கெடுப்பில் வலையர், முத்தரையர், இடையர் கணக்கெடுப்பு கிடைக்காததால் 1891 ஆம் ஆண்டு கணக்கை 4.5 கொண்டு பெருக்கினால் தற்போதைய இவர்களின் தொகையை தோராயமாக சொல்லிடலாம்.

1. அந்த வகையில் 1891 கணக்கெடுப்பில் வலையரும் முத்தராசரும் 5,86,154 பேர் உள்ளனர். இப்போது 23 - 29 லட்சங்கள் வரை முத்தரையர் இருக்கலாம்.

2. அதே சமயம் இடையர் 1891 கணக்கெடுப்பில் 6,65,232 உள்ளனர். அதனால் தற்போது 27 - 33 லட்சங்கள் வரை இடையர் இருக்கலாம்.

அதனால் தமிழ்நாட்டில் 24 பேரில் ஒருவர் இடையராகவும் மற்றொருவர் வலையமுத்தரையராகவும் உள்ளனர்.

ஈவேரா தமிழ்வெறுப்பு பற்றி கி.ஆ.பெ.விசுவநாதம்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 13 ஜூலை, 2018, முற்பகல் 9:50
பெறுநர்: எனக்கு
””தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்மக்கள், தமிழ்நாட்டு (தமிழ்)த்தலைவர்கள், தமிழ்ப்பெரியார்கள், தமிழ்இளைஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ்நூல்கள், தமிழர்இயக்கம், தமிழர்கழகம், தமிழ்க்கொடி ஆகிய இவைகள்மீது என்றும்வெ றுப்புக்கொண்டவர்.””
- தமிழர்நாடு இதழ் (17/10/1949).

ஆசிரியர்- கி.ஆ.பெ.விசுவநாதம்.

{பதிவு : -Arutchelvan Thiru 2017.11.15}

இமயம் வரை தமிழர்நாடு நாவந்தீவு நாவலந்தேயம்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 13 ஜூலை, 2018, முற்பகல் 9:14
பெறுநர்: எனக்கு
தமிழ்ச்சமூகத்தின் சுய அடையாளத்தில் மிகநுட்பமான ஒரு தனித்தன்மை உண்டு. கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதல் இன்றுவரை தமிழ்ச்சமூகத்தின் மனதில் ஒரேசமயம் இரண்டுவகையான சுயஅடையாளங்கள் காணப்படுகின்றன. ஒன்று- நாவலந்தேயம் என்ற விரிந்த நிலப்பகுதியை தங்கள் பண்பாட்டின் உறைவிடமாக எண்ணியிருக்கிறார்கள். அந்நிலம் தங்களுக்குரியது, தாங்கள் அந்நிலத்தின் மக்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை ஏராளமான வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. “தென்குமரி வடபெருங்கல் குணக் குட கடலா எல்லை குன்று மலை காடு நாடு ஒன்றுபட்டு வழிமொழிய. (புறம் - 17) என்ற புறநாநூற்றுப்பாடலில், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றிப் பாடும் குறுங்கோழியூர் கிழார் ஓர் நில எல்லையை அளிக்கிறார். தெற்கே குமரி, வடக்கே மாமலை. கிழக்கும் மேற்கும் கடல்கள் கொண்டது தங்கள் நாடு என. அந்த நாட்டிலுள்ள அனைவராலும் ஏற்கப்பட்டவன் என அம்மன்னனை சொல்கிறார். சிலர் இந்த வட எல்லையின் மலை எந்த மலை என்ற வினாவை எழுப்பக்கூடும். அதற்கு இன்னும் தெளிவான விடை புறநாநூற்றின் ஆறாவது பாடலில் உள்ளது. ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தைச் சேர்ந்த பாடல் இது. “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் - 6) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை காரிகிழார் பாடிய பாடல் இது. ஒருவேளை புறநாநூற்றின் மிகத்தொன்மையான பாடல் இதுவாக இருக்கலாம். இங்கே வடக்கே உள்ள மலை பனிபடர்ந்த பெரிய மலை என்று திட்டவட்டமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கே இமயம் எல்லையாகச் சொல்லப்பட்டதுமே தெற்கே குமரி சொல்லப்படுகிறது. இப்பாடல்கள் தெளிவாகவே நாவலந்தேயம் என்ற தேசத்தை நிலவியல்ரீதியாக வகுத்துவிடுகின்றன. அந்த நிலத்துமக்கள் தாங்கள் என்ற தன்னடையாளம் அக்காலத்தில் வலுவாகவே இருந்துள்ளது.
செந்தமிழ்நாடு.
ஆனால் கூடவே தங்களை அந்த விரிந்த நிலப்பரப்பில் ஒரு தனியடையாளம் கொண்டவர்களாக சொல்லிக்கொள்வதையும் காணலாம். சங்கப்பாடல்களைக் கொண்டுபார்க்கும்போது நாவலந்தேயம் என்ற நிலவியல் அடையாளமே பழையது என்று தெரிகிறது. அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்னர்தான் அதற்குள் தங்களுடைய தனித்த நிலஅடையாளத்தை தமிழ்ச்சமூகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரம் இவ்வகையில் தலையாயது. தமிழ்நில அடையாளத்தையும் தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்தையும் தெளிவாக வரையறுத்து முன்வைத்ததில் சிலப்பதிகாரத்தின் பங்கு முக்கியமானது. அக்காவியத்தின் அமைப்பே முடியுடை மூவேந்தர்களுக்கும் சம இடம் அளிப்பதாக அமைந்துள்ளது. சிலப்பதிகாரம் தமிழ்நிலத்தை இவ்வாறு வரையறை செய்கிறது: நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு (வேனில்காதை) வடக்கே நெடியோனாகிய திருமால் நிற்கும் வேங்கட மலை, கீழே தொடிவளை அணிந்த தென்குமரியின் கடல். நடுவே உள்ளது தமிழ்நன்னாடு என்கிறார் இளங்கோ. இந்த நில அடையாளம் காலம்செல்லச்செல்ல மேலும் பரவலான அங்கீகாரம் பெற்றது என்பதை தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பனம்பாரனார் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து என்று சொல்வதிலிருந்து காணலாம். தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக தமிழ்மொழியே இருந்துள்ளது என்பதை சிலப்பதிகார வரியும் பனம்பாரனாரின் வரியும் காட்டுகின்றன. ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்ற சொல்லாட்சி தமிழ்பேசப்படுவதனாலேயே இந்த நிலப்பகுதி தங்களுடையதாக ஆயிற்று என்று அன்றைய தமிழர் எண்ணியிருந்ததைக் காட்டுகிறது.
திசைமொழிகள் புலங்கிய நிலமும் செந்தமிழ் நிலமும்.
தமிழின் திசைமொழிகள் புலங்கிய நிலம், செந்தமிழ் நிலம் என்னும் இவ்விரு சுயஅடையாளங்களும் நடைபோட்டு வந்த காலகட்டத்தில் ஆரியர் வருகைக்குப் பின்தாம் பேரெல்லை சிற்றெல்லை என்று தமிழர்கள் பகுத்து காணப்படுகின்றார்கள். பழந்தமிழ்நூல்கள் குறிப்பிடுவதுபோல திருப்பதிக்கு தெற்கே குமரிவரைக்கும் அரபிக்கடல்முதல் வங்காளவிரிகுடா வரைக்கும் விரிந்திருக்கும் நிலத்தை தமிழர் வரலாற்றின் களம் என்று வரையறை செய்யலாம். அதேசமயம் பழந்தமிழ்நூல்களின் வழியை பின்பற்றி அந்த தமிழ்நிலத்தின் வரலாறு விரிந்த நாவலந்தேயப் பெருநிலத்தின் வரலாற்றின் ஒரு பகுதியே என்ற தெளிவும் நமக்குத் தேவை. தமிழக வரலாற்றை எழுதும் எந்த முயற்சியும் இவ்விரு கோணங்களிலும் முற்றிலும் சமநிலைப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். இல்லையேல் அதற்கு எந்த அறிவார்ந்த மதிப்பும் இல்லை. தமிழக வரலாற்றை இன்றைய இந்தியாவின் பொதுவரலாற்றில் இருந்து பிரித்து அதன் விதிகளையும் இயங்குமுறைகளையும் தனியாக புரிந்துகொள்ளவும் வகுக்கவும் முயல்வது குறைபட்ட பார்வையையே உருவாக்கும். அதேபோன்று, தமிழ்நிலத்தின் தனித்தன்மையை முற்றிலும் பொருட்படுத்தாமல் இன்றைய இந்தியாவின் பொதுவரலாற்றின் ஒரு பகுதியாக மட்டுமே அதை ஆராய்வதும் போதாமையையே உருவாக்கும். இவ்விருவகைகளுக்கும் வரலாற்றாய்வுத்தளத்தில் முன்னுதாரணமாக அமையும் ஏராளமான நூல்கள் உள்ளன. அந்த வகையாகதான் இன்றைய இந்தியாவை தமிழர்களுக்குத் தொடர்பே இல்லாத தனி நிலம் போலவும் அதில் தமிழகம் ஏதோ தவறுதலாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் போலவும் வரலாற்றை முன்னெடுத்துச் செல்லுகிறோம்.
நாவலந்தேயமே இந்தியா.
இந்த இடத்தில் நாவலந்தேயம் என்று பழந்தமிழர் போற்றிக் கொண்ட சொல்லில் இருந்துதாம் இன்றைய இந்தியா என்ற சொல் வந்தது என்பதை புரிந்து கொண்டாக வேண்டும். பத்தாயிரத்திற்கு குறையாத ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர். இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம். உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம். உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம். இந்தியா குறித்து ‘நாவலந்தேயம்’ என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது. அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - India என்று பதிவு செய்தனர். அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.
நாவலந் தேயத்திற்கு ஆரியர் சூட்டி பெயர் பாரதம்.
வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை ஒப்பு நோக்குங்கள். அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது- ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால், அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவலIndia இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை. பிந்தைய வரலாறு நாம் அறிந்ததுதானே. நாவலந்தேயத்தை- ஆங்கிலத்தில் India என்கிறோம் வடஇந்தியர்கள் பாரத் என்றே எழுதுகின்றார்கள்
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்பு •
கணினி பதிப்பு நாவலந்தேயம்.


மண்மீட்பு இலக்கியம் 

ஸ்டெர்லைட் ஐ துரத்திய ரத்னகிரி விடவில்லை கார்ப்பரேட்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 13 ஜூலை, 2018, முற்பகல் 8:44
பெறுநர்: எனக்கு
இந்த படத்தில் சாக்பீஸால் தரையில் என்ன எழுதியிருக்கிறார்கள் ?

ஒரு காலத்தில் (1992) ஜெய்தாபூர் அணுமின் நிலையத்தை  வரவிடாமல் மஹாராஷ்டிரா கடற்கரையில் உள்ள  ரத்னகிரி மாவட்டம்,  தாபோல் கிராம மக்கள் வெற்றிகரமாக தடுத்தார்கள்.   அந்த என்ரான் (Enron) என்ற அமெரிக்க நிறுவனம் பின்னாளில் ஊழல் செய்து திவாலாகிப்போனது.

லோகமானிய பாலகங்காதர திலக் பிறந்த ஊர் ரத்னகிரி.

ஆனாலும் மீண்டும் அரசாங்கம் இந்த திட்டத்தை ஒரு பிரஞ்சு கம்பெனிக்கு Areva) கொடுத்து, 2,400 குடும்பங்களை காலிசெய்து, மக்கள் மீது திணித்து, நில அபகரிப்பு செய்து (968 hectares) வெற்று நிலத்தை தேவுடு காத்து வருகிறது.  5 வருடமாக அறவழியில் போராடிய மக்களை ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி நுழைந்து வன்முறையாக மாற்றி துப்பாக்கி  சூடுவரை கொண்டுவிட்டது.  எந்த நேரத்திலும் இந்த அணுமின் நிலையம் கட்டப்படலாம்.

இதே  ரத்னகிரி மக்கள்தான் 1992 ஆம் ஆண்டு வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை  அங்கிருந்து   வெற்றிகரமாக துரத்தியடித்தார்கள்.  இல்லையென்றால் தூத்துக்குடியைப்போல  சட்காவன் (Zadgaon) என்ற ஊரை விழுங்கியிருக்கும்.

விதி ரத்னகிரியை சுற்றியே வருகிறது.  ஒரு காலத்தில் பாண்டவர்கள் கொஞ்சகாலம் Viratnagari விராடநாகரியில் இருந்தார்கள்.  குருஷேத்திர போரிலும் இந்த வீரவத் ரேய் என்ற மன்னன் போரிட்டுள்ளான்.  என்ன சாபமோ ?

தற்போதைய அரசாங்கம், சவூதி அரேபியாவின் ஆராம்கோ (Aramco’s oil wells in Saudi Arabia) நிறுவனத்தின் மூலம் உலகிலேயே மிகப் பெரிய பெட்ரோலியம் சுத்தகரிப்பு தொழிச்சாலையை ரத்னகிரியில் கட்டவிருக்கிறது.  இதற்க்கு 3 லட்சம் கோடி ருபாய் செலவாகும்.  இது கடனாக பெறப்படும். இதற்கான நில அபகரிப்பு போன மாதம்  துவங்கிவிட்டது.

இந்த முறை ரத்னகிரி மக்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.  தமிழ்நாட்டில் அடிமை துரோகிகள் என்றால் இங்கே  அனைவரும் ஊழல் துரோகிகள். எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பேதமில்லாமல் கொள்ளை அடிப்பார்கள். 95% சதவீத மக்களுக்கு பிடிக்காத ஒரு  திட்டம் அரசியல் சூழ்ச்சி மூலம்  திணிக்கப்படுகிறது.

ஏனெனில் இது இயங்கும்போது நாளொன்றுக்கு 12 லட்சம் பேரல் குரூட் ஆயிலை சாப்பிடும்.  பிறகு வாந்தி எடுக்கும். சுற்றுசூழல்  பாதிக்கும். நிலத்தடி நீர்  மாசுபடும். வெப்பமாகும்.  இது மக்களுக்கு தெரியும்.

நாற்பது வருடமாக பயிரிட்டு தனக்கென ஒரு சந்தையை பிடித்துள்ள அல்போன்சா மாறும் ரத்னகிரி மாம்பழங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.  இப்படித்தான் அந்த ஊரில் உள்ள  ரானேவின் தந்தையார் 40 வருடங்களுக்கு முன்பு  நட்டு வளர்த்த 350 மாமரங்கள் அந்த குடும்பத்துக்கு வருடம் 15 லட்ச ரூபாயை வருமானமாக கொடுக்கிறது. இனிமேல் ரானே என்ன செய்யப்போகிறான்? தெரியாது.  அது ஒரு கூட்டுக்குடும்பம்.

இதேபோல 8000 குடும்பங்கள்  உள்ளன.  இந்த மாம்பழத்தை நம்பி, நேபாளிகள் மட்டும் 1.2 லட்சம்பேர் வேலைசெய்கின்றனர். இவர்களுக்கு வேலை போகும்.  விஜயதுர்க் என்ற ஊரில்  கோயில், குளம்,பள்ளிகள், வீடுகள், கோட்டைகள் எல்லாமே போகும்.

சிவாஜி மகராஜ் இந்த கோட்டையை 1653ல் பிஜப்பூர் ஆதில்ஷா விடமிருந்து கைப்பற்றி விஜயதுர்க் என்று பெயர் சூட்டினார்.

இந்த அரசாங்கத்துக்கு சிவாஜியாவது, திலகராவது,  கோட்டையாவது,  கோயிலாவது....மண்ணாங்கட்டி.

வரப்போகும் நானார் (Nanar) எண்ணெய் சுத்தகரிப்பு மையம் 15000 ஏக்கரையும் 12.3 லட்சம் மாமரங்களையும் விழுங்கிவிடும்.  அரசாங்கம் 64000 மரங்கள் என்று சொல்கிறது, ஏனெனில் கால்குலேட்டர் மூலம் ஹெக்டேருக்கு 100 மரங்கள் என்று உத்தேசமாக கணக்கிட்டுள்ளனர்.

கடற்கரையிலும் (Vijaydurg) புதிய துறைமுகம்  கட்டப்படும்.  Ratnagiri Refinery and Petrochemicals Complex Limited (RRPCL).  பல்வேறு எண்ணெய் குழாய்கள் 35 கிலோமீட்டருக்கு கடலுக்குள்ளும் வெளியிலும் பதிக்கப்படும்.

எண்ணெய் கசிவு மிதந்துவரும். பக்கெட்டால்  அள்ளப்படும்.  மீன்கள் செத்து விழும். அல்லது உணவே விஷமாகும்.

போராட்டத்துக்கு  முடிவு இல்லை.  ஆனால் துவக்கம் இருந்தது.

இந்த படத்தில் சாக்பீஸால் தரையில் என்ன எழுதியிருக்கிறார்கள் ?      "நாங்கள் நானார் திட்டத்தை எதிர்க்கிறோம்" என்று சாலையில் எழுதிவைத்துள்ளார்கள் அந்த மக்கள்.

இப்போதைக்கு முடிந்தது இவ்வளவுதான்.