திங்கள், 19 பிப்ரவரி, 2018

சென்னை யை ஆந்திரா வுக்கு கேட்ட பிரகாசம் பெயரில் சென்னையில் சாலை சிலை

aathi tamil aathi1956@gmail.com

31/10/17
பெறுநர்: எனக்கு
சென்னையை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று தீவிரமாக போராடிய பிரகாசம்
அவர்களுக்கு சென்னை பிராட்வேயில் 1960 வாக்கில் சிலை வைத்தார்கள். ( அவர்
பிராட்வேயில் பிறந்து வளர்ந்தவர்). அது மட்டுமல்ல அந்த சாலையைக் கூட "
பிரகாசம் சாலை " என்று வைத்தார்கள்.
ஆனால் சென்னையை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று தீவிரமாக போராடிய
ம.பொ.சி அவர்களுக்கு 2009- 2010 வாக்கில்தான் சென்னையில் சிலை
வைக்கப்பட்டது. அதற்கு முன் இல்லை. இன்று வரை சென்னையில் அவர் பெயரில்
முக்கிய சாலை எதுவும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்.
உடன் போராடிய செங்கல்வராயனுக்கு சென்னையில் சிலை இருக்கிறதா என்று
தெரியவில்லை. ராஜாஜி பெரிய தலைவர் என்பதால் அவருக்கு செய்திருக்காங்க.
அது கூட முதல்வர் பதவியில் இருந்ததால் இருக்கலாம்.
இதுதான் தமிழர்களின் லட்சணம்.
நாகப்பன் சாத்தப்பன்

தெலுங்கர் ஆதிக்கம் நினைவிடம் பெயர்வைத்தல் மண்மீட்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக