புதன், 14 பிப்ரவரி, 2018

திரௌபதை வழிபாடு பாஞ்சாலி சிங்கப்பூர் கோவில் வன்னியர் மகாபாரதம் கூத்து

aathi tamil aathi1956@gmail.com

29/10/17
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம் Vijay Kumar Thangappan உடன்.
மகாபாரதத்தில் சொல்லப்பட்டு இருக்கும்
# திரௌபதி என்ற பெண்ணும்,
தமிழர்கள் வழிபடும் # திரௌபதி_அம்மனும் ஒன்றா?

Mathi Vanan
திரௌபதி என்பது நிலம்.
அதை பாண்டவர்கள் சொந்த கொண்டாடுவதாக குறியீடே பின்னாளில் திரௌபதி பெண்ணாக
காப்பியப்படுத்தப்பட்டது.
பாண்டவர் பாண்டியர்
குறவர் கௌரவர்.
குறிஞ்சி நில, மருத நில சண்டையே மகாபாரதம்.
நடந்தது தமிழ்நாட்டில்.
இப்படி கருத்தாக்கம் உண்டு.

வடை பெரியசாமி சான்றோர்
4நாளைக்கு முன் திருச்சுழி போயிருந்தேன் ஒரு இறப்பு வீடு அந்த
வீட்டெதிரில் திரௌபதி அம்மனுக்கு கோவில் உண்டு லேசா விசாரித்தேன்
ஊர்க்கோவில் தம்பி 18 சாதிகள் கும்பிடுதுது தம்பி என்றார் நம்மாளுகதான்
எடுத்து விழா நடுத்துவாக என்றார் அந்த பெரியவர்

Gopalakrishnan Sathyamurthy
தமிழர்கள் வணங்கிய சிறு தெய்வங்களை சமஸ்க்ரிதவாதிகள் கவர்ந்துகொண்டனர் .
எ.கா "- பேச்சி அம்மன் - சரஸ்வதி ஆனார்
அது போல தான் . தமிழர்கள் வணங்கிய ஒரு சிறு தெய்வத்தின் பெயரை "திரௌபதி"
என்று சமஸ்க்ரித பெயர் சூட்டி விட்டனர்.

Thanga Thamilan
தமிழ்ச் சான்றோர் பேரவை பாண்டியனின் காணொளி பாருங்கள் சகோ.
அவரது கூற்றுப்படி மகாபாரதம் என்பது நெல்லை மாவட்டத்தில் நடந்த மாடு /
நிலம் சார்ந்த ஒரு விவசாய இனக்குழு விற்கும் காடு / ஆடு என்கிற மேய்ச்ல்
சார்ந்த இனக்குழுவிற்கும் இடையே நடந்த சண்டை என்கிறார்.

மேட்டூர் தமிழ் கோவிந்தன்
தமிழகத்தில் திரௌபதி அம்மன்:-
பண்டைய தமிழகத்தில் மக்களிடம் போர்க் குணம் அதிகரிக்கப் பாரதம் படிக்க
வைத்தார்கள். பாரதம் படிப்பதற்கென்று மன்னர்கள் பெரும் நிதி
செலவிட்டுள்ளனர். பாரதக் கதையின் பாதிப்பால் பல இடங்களில் திரௌபதி அம்மன்
கோவில்கள் உருவாயின. எல்லா திரௌபதி அம்மன் ஆலயங்களும் வன்னியர்
சமூகத்தினர் கோவில்களாக நீடிக்கின்றன. அச் சமூகத்தினரே பூசாரிகளாக
உள்ளனர்.
மன்னர், போர், படைகளைக் கட்டி ஆள்வது என்று வாழ்ந்த வன்னியர் சமூகத்தினர்
இன்றும் அரசியலில் ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். தங்களது
சித்தாந்தத்திற்காக கடுமையாகப் போராடும் குணம் இன்றும் அவர்களிடையே காண
முடிகிறது.
மேலும் தகவல்:-
http://www.smt.org.sg/Services/EventCalendarDes
c/468

மேட்டூர் தமிழ் கோவிந்தன்
வன்னியர்கள் தமிழர்கள் தானே. சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்கள் வணங்கும்
திரௌபதி புராண கதையில் வரும் திரௌபதி தானே. அப்போ தமிழர்களுக்கும் புராண
திரௌபதிக்கும் உள்ள தொடர்பு என்ன . இதை பற்றி தமிழ் தேசிய ஆய்வாளர்கள்
கருத்து என்ன?

சீனி. மாணிக்கவாசகம்
தனித்தனியாக குடும்பம் நடத்தாமல் மொத்தமாக ஒரே நேரத்தில் ஐந்து
கணவர்களுடனுமா பாண்டவ மகாராணி குடும்பம் நடத்தினார் மேட்டூர் தமிழ்
கோவிந்தன் ?
மகாபாரதம் படித்து இருக்கிறீர்களா இல்லையா ?

சீனி. மாணிக்கவாசகம்
யாருங்க திரௌபதி அம்மன் பற்றி பேசியது?
நான் எங்காவது அப்படிப் பேசி இருக்கிறேனா?
காட்டுங்கள் பார்க்கலாம் மேட்டூர் தமிழ் கோவிந்தன் ...
ஆரிய பாண்டிய மகாராணி திரௌபதி யையே மிக நாகரீகமாக "குடும்பம் நடத்தினார்,
குழந்தைகள் பெற்றுக் கொண்டார்" என்று விமர்சிக்கிற நான்,
தமிழர்களின் குலதெய்வமான திரௌபதி அம்மனை அநாகரீகமாக விமர்சிப்பேனா?

மேட்டூர் தமிழ் கோவிந்தன்
நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். வன்னியர்கள்
வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக்
காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து
வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர்
சமூகத்தினரிடையேதான். பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும்
பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.

மேட்டூர் தமிழ் கோவிந்தன்
18 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். மகாபாரத போர் தினமும் நடக்கும்.
சிங்கப்பூரிலும் தமிழர்கள் (வன்னியர்கள்+ பிறர்) கொண்டாடுகிறார்கள். பாரத
போர் கதையோ புராணமோ அதில் வரும் திரெளபதி அம்மனை நெருப்பின் அவதாரமா
எண்ணி வழிபடுகிறார்கள்.
மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்வில் கூட புராணக் கதை உண்டு
ஆகையால் மாரியம்மன்னை தமிழர்கள் கும்பிடக்கூடாதா?
சரி தமிழர்கள் குலதெய்வம் என்ன?அதன் வரலாறு என்ன? இதைப்பற்றி தமிழ் தேசிய
அறிஞர்கள் அராய்ச்சி செய்து கூறுங்கள்.

சீனி. மாணிக்கவாசகம்
இலங்கையில் சிங்களவர்களுக்கும் திரௌபதி அம்மன் கோயில் வழிபாடு இருக்கிறது...
சிங்கப்பூரில் வழிபடுபவர்கள் தமிழர்கள்....

குறிஞ்சிச் சான்றோன்
மகாபாரதம் என்பது வியாசன் என்ற ஒரு தனி முனிவரால் புதிதாக
உருவாக்கப்பட்டதல்ல அது காலம் காலமாய் கர்ண பரம்பரையாய் இந்திய பழங்குடி
இனங்களால் சொல்லப்பட்டு வந்தவை. வியாசர் தனது அறிவு மேதமையால்
நவீனபடுத்தி தொகுத்தருளினார். ஒருவேளை வியாச முனி தென் தமிழ் நிலத்தில்
பிறந்தவராக இருந்திருந்தால் ஹஸ்தினாபுரம் மதுரையாக
இருந்திருக்கும்.பாண்டவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வனவாசம் போனதாக
இருந்திருக்கும். பிதாமகர் பீஷ்மர் காவேரி மைந்தனாக இருந்திருப்பார்.

மேட்டூர் தமிழ் கோவிந்தன்
அர்சுணன் தபசு கூத்து. வட தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கூத்து:-
https://youtu.be/gF_Z1xb8SPM
அர்சுணன் தபசு

மேட்டூர் தமிழ் கோவிந்தன் , 10 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
"சிங்கப்பூர் திரௌபதியம்மன் கோவில்"
தீ மிதி விழா அன்று கோவிலுக்கு உறவினர்களுடன் சென்றிருந்தபோது எடுத்த
படங்கள் மற்றும் இணையத்தில் எடுத்த படங்கள்.
பக்தர்கள் பல நாட்கள் விரதம் இருந்து அக்டோபர் 8ஆம் தேதி அன்று தீ மிதி
விழாவில் பங்கேற்றனர். கோவிலில் பல தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. அன்னதானம் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் திரௌபதி அம்மன்:-
பண்டைய தமிழகத்தில் மக்களிடம் போர்க் குணம் அதிகரிக்கப் பாரதம் படிக்க
வைத்தார்கள். பாரதம் படிப்பதற்கென்று மன்னர்கள் பெரும் நிதி
செலவிட்டுள்ளனர். பாரதக் கதையின் பாதிப்பால் பல இடங்களில் திரௌபதி அம்மன்
கோவில்கள் உருவாயின. எல்லா திரௌபதி அம்மன் ஆலயங்களும் வன்னியர்
சமூகத்தினர் கோவில்களாக நீடிக்கின்றன. அச் சமூகத்தினரே பூசாரிகளாக
உள்ளனர்.
மன்னர், போர், படைகளைக் கட்டி ஆள்வது என்று வாழ்ந்த வன்னியர் சமூகத்தினர்
இன்றும் அரசியலில் ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். தங்களது
சித்தாந்தத்திற்காக கடுமையாகப் போராடும் குணம் இன்றும் அவர்களிடையே காண
முடிகிறது.
மேலும் தகவல்:-
http://www.smt.org.sg/Services/EventCalendarDes
c/468


Aathimoola Perumal Prakash

search வான்மீகியூர் திருவான்மியூர் காட்டுப்பாடி காட்பாடி மகாபாரதம் fbtamildata
search குறிஞ்சாக்குளம் காந்தாரி கந்தஹார் வேட்டொலி
search பாண்டவர் பாண்டியர் கௌரவர் குறவர் வேட்டொலி

திரௌபதி குலதெய்வம் பல்லவர் புராணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக