புதன், 14 பிப்ரவரி, 2018

முத்தரையர் வேளிர் மரபு சாதி கள்ளர் பட்டம்

aathi tamil aathi1956@gmail.com

29/10/17
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் ராஜா முத்துராஜா அம்பலக்காரன் உடன்.
# முத்தரையர்_வேளிர் குலத்தவரே:-
முத்தரையன் (முத்திராசு, முத்திரியன்):-
+++++
வேளிர் (குறுநில மன்னர்) பதவியும் விருந்தோம்பி வேளாண்மை செய்யும்
இயல்புங்கொண்ட முத்தரையர் என்னும் வகுப்பார்,6ஆம் நுற்றாண்டிலேயே
தமிழ்நாட்டிலிருந்தமை,
"பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்"
(நாலடி.200)
"நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்"
(நாலடி.296)
என்னும் நாலடிப் பகுதிகளால் அறியக்கிடக்கின்றது.
அவர் தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைஆண்டு
வந்தவர் என்பது, செந்தலைக் கல்வெட்டால் தெரிய வருகின்றது.
பல்லவர் கீழ்ப்பட்டிருந்த சோழர், தஞ்சையை ஆண்டு வந்த பெரும்பிடுகு
முத்தரையனை வென்ற செய்தி, திருவாலங் காட்டுச்செப்பேட்டிற்
குறிக்கப்பெற்றுள்ளது.
இன்று தஞ்சை திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிற் பயிர்த் தொழில் செய்து
வாழும் முத்திரியர் என்பார், பண்டை முத்தரையர் வழியினரே.
தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பிய முத்தரையர் என்னும் பட்டங் கொண்ட கள்ளர்
வகுப்பினர், முத்தரையரின் படைமறவர் வழிவந்தவராகவே யிருத்தல்
வேண்டும்.(கள்ளரின் செம்பிய முத்தரையர் பட்டம்)
கடைக்கழகக் காலத்திற் புல்லியும் பிற்காலத்தில் திருமங்கை யாழ்வாரும்
போன்ற கள்வர் கோமான்கள் பலர் இருந்தமை வெள்ளிடைமலை. ஆயின், முத்தரையர்
வேளிர்மரபினர் என்பதே நடுநிலை முடிபாம்.
(தமிழர் வரலாறு பகுதி 2 பக்கம் 118 : தேவநேயப்பாவாணர்).
++++++++
@# தமிழ்தேசிய_பாலை_வாணர் கூட்டமைப்பு.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக