சனி, 25 மார்ச், 2017

கண்ணகி இலங்கை முழுவதும் கோயில்கள்

aathi tamil aathi1956@gmail.com

11/4/16
பெறுநர்: எனக்கு
தொகுப்பு- மார்க்கண்டு தேவராஜா (LLB)Mayuraagoldsmith Switzerland,கண்ணகி
அம்மன் வழிபாடு கி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து
ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென
இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது
இலங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு
. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய
வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து
கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான் . கிபி 178ல் நடந்த அவ்விழாவிற்கு
செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு விழாவில் கலந்து
கொண்டான்.
இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன்
பெருநற்கிள்ளியும், கொங்குதேச அரசன் இளங்கோ அடிகளும், மகத தேச மன்னரும்
கலந்துகொண்டாதாக துரை ஜெயநாதன் ‘ஆதிதிராவிடரும் அழிந்துபோன
சங்கங்களும்என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு
, கண்ணகியை செங்குட்டுவனைப் போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன்
நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு
பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென ஆசி கேட்டு
கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகி மேல் கூடிய நம்பிக்கை கொண்டான்.
இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்ப தன் விருப்பத்தை செங்குட்டுவனிடம்
கஜபாகு தெரிவித்தான். செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி
சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப் பேழையில் வைத்து கஜபாகுவிடம்
கையளித்தான்.
கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன்
பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான்.
அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள சம்புகோள
துறைமுகம். யானை மேல் சிலையை வைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பல
இடங்களுக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு
தோன்றிற்று.
யாழ்குடாநாட்டில் கண்ணகியம்மன் வழிபாடு
இம்மன்னனால் யாழ்ப்பாணத்தில் முதலாவது கண்ணகி கோயில் ஸ்தாபிக்கப்பட்ட
இடம் அங்கணாகடவை எனப்படும். அங்கனா என்பது அம்மனை குறிக்கும்.
சிங்களநாட்டில் 'பத்தினி தெய்யோ' என கண்ணகி அம்மனை அழைத்தனர். ஒல்லாந்தர்
காலத்தில் அக்கோயிலும் சிலையும் யானையால் சிதைக்கப்பட்டது.
யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்த பல கண்ணகி அம்மன் கோயில்கள் நாளடைவில் நாக
அம்பாள் , இராஜேஸ்வரி அம்பாள் , முத்துமாரி அம்பாள் என்ற பெயரில்
வணங்கப்பட்டது. இன்று இளவாலை, மண்டதீவு , பளை , வீமன்காமம், தெல்லிப்பளை
, மாசியப்பிட்டி , கச்சாய் , பருத்தித்துறை , புலோலி , காரைநகர் ஆகிய
இடங்களில் கண்ணகி அம்மனுக்கு கோயில்களுண்டு.
மூத்ததம்பியின் யாழ்ப்பாண சரித்திரம் என்ற புத்தகத்தில் முதற் கண்ணகி
அம்மன் கோயில் நாவற்குளியில் உள்ள வேளம்பாடியில் தோன்றியதென
குறிப்பிட்டுள்ளார். எங்கு முதலில் கண்ணகி அம்மனுக்கு கோயில்
தோன்றியதென்பதற்கு தக்க ஆதாரங்கள் கிடையாது. முல்லைத்தீவில் உள்ள
பிரசித்தம்பெற்ற வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் கஜபாகுவினால்
ஸ்தாபிக்கப்பட்ட பத்தாவது கண்ணகி ஆலயம். அனுராதபுரத்தில் இசுருமுனிய
விகாரகவிற்கு அருகேயுள்ள தடாகத்துக்கு முன்னால் கண்ணகி ஆலயம் அமைத்தான்.
வருடாவருடம் ஆடிமாத பூரணையில் கண்ணகிக்கு விழா எடுத்தான். இதனை சிங்களவர்
'எசல பெரஹரா' என அழைத்தனர். கண்ணகி வருகையால் இலங்கையில் மழைவளம்
பொழிந்து விளைச்சல் பெருகி செழிப்புள்ள நாடாகியது.
இக்கதைக்கு மாறாக சிங்கள சரித்திர நு¡ல்கள் கஜபாகு தெனிந்தியாவுக்கு
படையெடுத்துச் சென்று 24000 சிங்களவரை சிறைமீட்டி வரும்போது கண்ணகியின்
விக்கிரகத்தையும் சிலம்பினையும் இலங்கைக்கு கொண்டுவந்ததாகக்கூறுகின்றன.
சோழ அரசன் செங்குட்டுவன் கஸபாகுவை வரவேற்று 24.000 சிங்களவரை விடுதலை
செய்யும் போது 24.000 சோழநாட்டவர்களையும் கூட்டிச்செல்ல ஒப்புதல்
கொடுத்ததாக மஹாவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை.
கண்ணகியின் காற்சிலம்பிற்கு சின்னம்மை, பெரியம்மை , சின்னமுத்து,
கூவக்கட்டு, குக்கல் போன்ற தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும் அதிசயமான
சக்தியுண்டு என்பது மக்கள் நம்பிககை.
சிங்களப் பகுதிகளில் கண்ணகி வழிபாடு
சீதாவக்கை காலத்தில் (கி.பி 1530 - 1592) பத்தினி வழிபாடு பிரபல்யமானது.
டிக்கிரி பண்டார என்ற இளவரசன் சீதாவக்கையை ஆண்ட மாயதுன்னை என்ற தன்
தந்தையை நஞ்சு வைத்து கொலைசெய்து சீதாவாக்கைக்கு 1582ல் முதலாம்
இராஜசிங்க என்ற நாமத்துடன் அ¡¢யாசனம் ஏறினான்.
பெளத்த தர்மத்தின்படி தகப்பனைக் கொன்ற பாவம் அவனைவிட்டு பல
ஜென்மங்களுக்குப் போகாது என பெளத்த பிக்குமார் சொல்லியதைக்கேட்டு அவன்
பொருமாள் என்ற பிராமணன் அல்லாத நண்பணின் உபதேசத்தின் பேரில் இந்துமதத்தை
தழுவினான். கற்புக்கரசியான கண்ணகிக்கு களனி கங்கை ஓரத்தில் கொழும்பு
அவிசாவலை பதையில் உள்ள கடுவலை எனும் ஊரில் கோயில் கட்டினான். இக்கோயில்
போர்த்தகேயர் காலத்தில் (1505-1658) கட்டியதென கோயிலுக்கு அருகேயுள்ள
கற்தூணில் உள்ள கல்வெட்டில் காணக் கூடியதாகயிருக்கிறது என காலம் சென்ற
கலாநிதி செனரத் பரனவித்தாரன குறிப்பிட்டுள்ளார். மலபாரைச் சேர்ந்த
நாயக்கர் பரம்பரை கண்டி இராச்சியத்தை 17ஜ9 முதல் 1815 வரை ஆண்டபோது
கண்ணகி வழிபாட்டுக்கு கண்டி இராச்சியத்தில் முக்கிய இடம்
கொடுக்கப்பட்டது. சமன் என அழைக்கப்கட்ட சமனலகந்த என்ற மலையின் காவல்
தெய்வ வழிபாட்டுக்கு பதிலாக பத்தினி தெய்வம் வழிபாடு ஆரம்பிக்கப் பட்டது.
கஜபாகு அரசன் நடத்தி வந்த கண்ணகி அம்மன் விழாவின் தொடர்ச்சியே கண்டியில்
நடக்கும் எசல பெரஹராவாகும். தலதா மாளிகை எசல பெரஹராவில் கீழ்கண்ட
பெரஹராக்கள் இடம்பெறும:
தலதா மாளிகை பெரஹரா,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக