திங்கள், 20 மார்ச், 2017

வீரப்பனார் அறிவு பறவை வழி காட்டியது வீரப்பன் விகடன்

aathi tamil aathi1956@gmail.com

19/10/16
பெறுநர்: எனக்கு
'பறவையை வைத்து பாதையை முடிவு செய்த வீரப்பன்...!' - வீரப்பனின் சகா
சொல்லும் தகவல்கள்
10.3K 2.5 52
'வீ ரப்பன் '... தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாத பெயர். இன்று
காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு தண்ணி காட்டி வரும் கர்நாடகத்துக்கும்,
தமிழக காவல்துறைக்கு முப்பது ஆண்டுகளாக சிம்ம சொப்பனமாக இருந்தவரை, கடந்த
2004-ம் ஆண்டு தமிழக காவல்துறை சுட்டுக்கொன்றது. இறந்து பன்னிரண்டு
ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், அவரின் பின்னணியை வைத்து இங்கு
திரைப்படம் எடுக்கின்றார்கள், அவரின் படத்தைப் போட்டு லண்டனில் வாசனை
திரவியம் விற்கின்றார்கள் என்றால் வீரப்பனின் தாக்கம் இன்றும்
குறையவில்லை என்றே தெரிகிறது.
வீட்டை விட்டு காட்டிலே நாடோடி வாழ்க்கை வாழ்ந்துவந்த வீரப்பனின் காட்டு
வாழ்க்கையும் பல்வேறு சுவாரஸ்யங்களை கொண்டதாக இருந்ததுள்ளது. தமிழ்நாடு
விடுதலைப் படையைச் சேர்ந்த சிலர் வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்தனர்.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு காட்டை விட்டு வந்துவிட்டார்கள். வீரப்பன்
குறித்த பல்வேறு சுவையான தகவல்களை அவர்களில் ஒருவர் நம்மிடம்
தெரிவித்தார்.
“ வீரப்பனுக்கு காடுதான் வாழ்க்கை என்றானதும், காட்டை பற்றிய அனைத்து
விவரங்களையும் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார். அனைத்து மிருகங்களை
பற்றியும், பறவைகள் பற்றியும், அவற்றின் சத்தம் குறித்து சரியாக தெரிஞ்சு
வச்சிருப்பார். வழக்கத்தைவிட வித்தியாசமா கத்துனா, அந்தப் பறவையின் பெயரை
சொல்லி அது “குறி சத்தம் போடுது” உஷாராகணும்னு எங்களுக்குச் சொல்லித்
தருவார்.
அப்படிதான் ஒரு முறை ஒரு முக்கிய ஆளை சந்திக்க காட்டில் ஒரு இடத்துல
காத்திருந்தோம், ஆனா வந்த வேலை முடியலை. சரி திரும்பிப் போலாம்னு,
சொன்னதும் எல்லாம் நடக்க ஆரம்பிச்சுட்டோம். அப்ப தீடிர்னு ஆட்காட்டி
குருவினு இடதுபுறத்தில் இருந்து வலது புறமா குறுக்க பறந்து போச்சு. நாங்க
தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சோம், திரும்பவும், அந்தக் குருவி எங்களுக்கு
குறுக்கா பறந்து போனது. திரும்பவும் நடக்க ஆரம்பிச்சதும், அதே மாதிரி
நடந்தது. உடனே எங்களை நிக்க சொல்லிட்டு “ குருவி நம்மளுக்கு ஆட்காட்டுது”
இனி இந்த வழில போகவேணாம்னு சொன்னாரு. நாங்க திரும்பி வேற வழியா
போய்ட்டோம்.
ஒரு மாசம் கழிச்சு நாங்க அதே இடத்துக்கு ஒருத்தவரை சந்திக்க
வந்திருந்தோம். வந்தவர் எங்களிடம், 'ஒரு மாசத்து முன்னாடி இந்த இடத்துல
காத்திருப்பு நடந்திச்சுன்னு' சொன்னார். அதாவது எங்கள் நடமாட்டத்தைக்
கண்காணிக்க போலீஸ் டீம் ஒண்ணு இருந்து இருக்கு. நாங்க அந்த வழியா
அன்னைக்கு போய் இருந்தோம்னா அப்பவே மாட்டியிருப்போம். இதை ஒரு குருவி
பறந்ததை வச்சே வீரப்பன் யூகம் பண்ணிட்டார். அதுமாதிரி ஒவ்வொரு நேரமும்
காட்டில் உள்ள பறவையும், விலங்குகளுமே அவருக்கு உளவாளியா இருந்ததுங்க.
அதுவும் அவருக்கு பலம்னு தான் சொல்லணும்.
புத்தகம் படிப்பதில் வீரப்பனுக்கு அலாதி பிரியம். காட்டிலே வாழ்ந்ததால,
பள்ளிக்கூடம்போய் படிக்கல. காட்டில் இருந்த காலத்தில்தான் ஊரில் இருந்து
அவருக்கு தெரிஞ்ச ஒரு வாத்தியார் காட்டுக்குள்ள வந்து இவருக்குப் படிக்க
சொல்லிக் கொடுத்திருக்கார். அரசியல்,வரலாறு புத்தகங்களை படிக்க
ஆரம்பிச்சா, முடிச்சுட்டு தான் வைப்பார். புத்தகம் வாங்கி வரதுக்குனே ஆள்
வச்சு இருந்தார். எவ்வளவு தூரமும் சளைக்காமல் நடந்துகிட்டே இருப்பார்.
வீரப்பனை அவ்வளவு காலம் பிடிக்க முடியாம போனதுக்கு, காடு ஒரு காரணம்னா,
வீரப்பன் மேல் காவல்துறைக்கு ஒரு பயம் இருந்துச்சுனு தான் சொல்லனும்.ஒரு
முறை வீரப்பனோடு, நாங்க ஏழு பேர் நடந்து போய்க்கிட்டு இருந்தோம் அப்ப
திடீர்னு எங்களுக்கு முன்னாடி பத்தடி தூரத்துல ஐந்து போலீஸார்
துப்பாக்கியோட நின்னாங்க. எங்களைப் பாத்ததும் பயத்துல அப்படியே
நின்னுட்டாங்க. வீரப்பன் உடனே தனது துப்பாக்கிய எடுத்து பொசிஷனுக்கு
வந்துட்டார். ஆனா பயத்துல அவுங்க நின்னத பாத்துட்டு நாங்க சுட
ஆரம்பிச்சதும், அங்கிருந்து ஓட ஆரம்பிச்சுட்டாங்க. கையில துப்பாக்கி
இருந்தும், அதை எடுக்கக் கூட தோணாத அளவுக்கு வீரப்பன் மேல அவுங்களுக்கு
பயம் இருந்துச்சு.
வீரப்பனுக்கு கிராமத்து திருவிழாவின்போது ஆடப்படும் தேவராட்டம் ரொம்பப்
பிடிக்கும். நாங்க இருந்தப்ப, சிறிய டேப்ரெக்கார்டர் வீரப்பன்கிட்ட
இருந்தது. அதுல இந்த கிராமத்து பாட்டுகளை போட்டுவிட்டு, அவரும்
சேத்துக்குளி கோவிந்தனும் ஆட ஆரம்பிச்சாங்கனா, ஒரு மணிநேரம் வரை விடாம
ஆடிக்கிட்டு இருப்பாங்க. அவருக்கு பிடிச்சது அந்த ஆட்டம். அவர்
வாழ்க்கையே கதை மாதிரி சொல்லிகிட்டே இருப்பார் எங்கிட்ட. எத்தனை தடவை
கேட்டாலும் சலிக்காம சொல்லுவார். பொதுவா அவரு யாரையும் எளிதா நம்பிட
மாட்டார். நம்பிட்டா... கடைசி வரை அந்த நம்பிக்கையோடு இருப்பார். அந்த
ஒன்றரை ஆண்டுகள் அவரோடு நாங்க இருந்தது, எங்களுக்கே புதிய அனுபவமாத்தான்
இருந்தது” என்றார் வீரப்பன் குறித்த நினைவுகளோடு.
- அ.சையது அபுதாஹிர்
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
' 3 தொகுதி இடைத்தேர்தல் நமக்கானது!' -அ.தி.மு.கவுக்
VIEW COMMENTS POST COMMENT
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வீரப்பன் போல ஆடியோ, வீடியோ ரிலீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக