|
24/9/16
| |||
பாவலரேறு பெருஞ்சித்திரனார்....!
ஓர் உரையாடல்...!
எல்லாளன்: ஐயா, வணக்கம்.
நல்லப்பர்: வணக்கம் தம்பி
எல்லாளன்: ஐயா, கன்னி மாதத் (9/16) தென்மொழியில் பெருஞ்சித்திரனார் பாடல்
ஒன்றினைப் படித்தேன்; அப்பாடல் பற்றி ஒரு சில தெளிவுகளைப் பெறவேண்டித்
தங்களிடம் வந்துள்ளேன்.
நல்லப்பர்: தம்பி, அப்பாடலை ஒருமுறை படித்துக் காட்டிவிட்டு உங்களுடைய
ஐயங்களை எழுப்புங்கள்.
எல்லாளன்: (பாடலைப் படித்துக் காட்டுகிறார்; பாடல் கீழே தரப்படுகிறது.)
வெல்லாத ஆரியர் வென்ற கதையிது...!
வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே...!
தமிழம் திரிந்து சமற்கிரு தத்தில்
‘திரமிளம்’ ஆகித் ‘திரவிடம்’ நின்றது!
அமிழ்தாம் தமிழை அழித்துத் திராவிடம்
ஆக்கிய ஆரியத் தில்லு முல்லிது!
கமழும் மொழிப்பெயர் இனப்பெயர் அழிந்ததால்
கன்னித் தமிழும் தமிழரும் அழிந்தே
உமிழத் தக்க ‘திராவிடர்’ ஆயினர்!
உயிர்போய் விட்ட பிணமாய்க் கிடந்தனர்!
‘திராவிடர்’ எனும்சொ(ல்)லைத் தமிழர் தவிரத்
தெலுங்கரோ, கன்னட ரோ, மலை யாளரோ
பராவுதல் இல்லை; பயில்தலும் இல்லை!
பாழும் தமிழரே பயின்று வந்ததால்
திராவிடர் இருக்கத் தமிழர் அழிந்தனர்!
தமிழர் அழிந்ததால் தமிழுணர் வழிந்தது!
திராவிடர் எனும்சொல் கழகநூல் எதனினும்
தெள்ளிப் பார்க்கினும் தெரியவிய லாதே!
இல்லாத பெயரை இருப்பதாய்ச் சொல்லி
இருந்த பெயரை இழந்தனர் தமிழர்!
பொல்லாத ஆரியச் சூழ்ச்சியை அறியாப்
புழுக்கைத் தமிழரே தமிழரை அழித்தனர்!
எல்லாரும் தெலுங்கர் கன்னடர் மலையராய்
இருந்திடத் தமிழர் இல்லாது போயினர்,
வெல்லாத ஆரியர் வென்ற கதையிது!
வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே!
-பாவலரேறு 1994
எல்லாளன்: ஐயா, ‘தமிழம்’ என்ற சொல்லைச் சமற்கிருத வாணர்கள் ‘திராவிடம்’
என்ற சொல்லாகத் திரித்துத் தில்லுமுல்லு செய்துவிட்டனர் என்று
பெருஞ்சித்திரனார் கூறுகிறார். அது சரிதானே ஐயா?
நல்லப்பர்: ஆம்;கருத்தளவில் சரிதான்.சமற்கிருத உருவாக்கமே ஒரு
தில்லுமுல்லு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்! முழுத் தமிழையே
திரித்துச் சமற்கிருதமாக ஆக்கிய சமற்கிருத வாணர்கள், ‘தமிழம்’ என்ற
சொல்லைத் ‘திராவிடம்’ என்று திரித்துப் பலுக்கியதில் வியப்பேதுமில்லை;
அவர்கள் சொல்லைத்தான் திரித்தார்களே தவிரச் சொற்பொருளைத் திரிக்கவில்லை!
ஆனால் இப்போது ‘திராவிடர்’ என்ற சொல், தமிழரைக் குறிப்பதில்லை;
தமிழ்நாட்டில் வாழ்கிற மனுவாதிகள், கிறித்தவர்கள், முகமதியர்கள்
ஆகியோரைத் தவிர்த்துவிட்டுத் தமிழ்நாட்டில் வாழ்கிற தெலுங்கு,கன்னட,
மலையாளிகளையும் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிற அடிமைத்
தமிழர்களையும் குறிக்கின்ற சொல்லாக இருக்கிறது!
எல்லாளன்: சொல்லைத் திரித்ததையே ஒரு தில்லுமுல்லாகப் பார்க்கும் போது,
சொற்பொருளையும் சேர்த்து திரித்த செயலைப் பெரிய தில்லுமுல்லாக அன்றோ
பார்க்க வேண்டும்! அப்பெரும் தில்லுமுல்லாளர் யார் என்று
வெளிப்படுத்துங்கள் ஐயா?
நல்லப்பர்: அப்பெரும் தில்லுமுல்லைச் செய்தவர் வேறு யாருமில்லை;
திராவிடப் பெரியார் என்று திராவிடர்களாலும் திராவிட தாசர்களாலும்
போற்றப்படுகிற திரு.ஈ.வெ.ரா. அவர்களே!
எல்லாளன்:அப்படியானால், ‘தமிழர் உமிழத் தக்க ‘திராவிடர்’ ஆயினர் , ஆரியத்
தில்லுமுல்லினால்’ என்ற பெருஞ்சித்திரனாருடைய கருத்துப் பிழையானது தானே?
நல்லப்பர்: ஆம், பிழையானதுதான்; ‘தமிழம்’ என்று சொல்லைத் திரித்துத்
‘திராவிடத்தை’த் தொடக்கி வைத்தான் மனுவாதி; சொற்பொருளையும் திரித்து
‘தமிழர்’ என்ற இனப் பெயரைத் ‘திராவிடர்’ என்ற இல்லாத இனப்பெயராகத்
திரித்தான் வடுக திராவிடன் ஈ.வெ.ரா.! திராவிடம் என்ற பெயரால் இயக்கம்
நடத்திப் பேரளவில் ’திராவிடப் பரப்புரை’ செய்ததன் வழித் தமிழர் இன ஓர்மை
உருவாகவிடாமல் தடுத்துவரும் வடுக திராவிடனை மறைத்து மனுவாதியை மட்டும்
குற்றவாளியாகக் காட்டும் பெருஞ்சித்திரனாரது நிலைப்பாடு,
எதிரிகளைப்பற்றிய அவரது புரிதல் குறைபாடுடையது என்பதையே காட்டுகிறது.
எல்லாளன்:‘திராவிடர் ’ எனும்சொல்லைப்
பாழும் தமிழரே பயின்று வந்ததால்
திராவிடர் இருக்கத் தமிழர் அழிந்தனர்!
இல்லாத பெயரை இருப்பதாய்ச் சொல்லி
இருந்த பெயரை இழந்தனர் தமிழர் ! என்று பெருஞ்சித்திரனார் சொல்வதன் வழி,
தமிழர் இன வீழ்ச்சிக்கு மனுவாதிகளும் தமிழருமே கரணியம் என்று
பாடியிருக்கிறார்! அக்கருத்து சரியா?
நல்லப்பர்: சரியன்று; குறிப்பாக, நீண்ட காலமாகவே மீளத் தெரியாமல்
அடிமைகளாக வாழ்ந்து வரும் ‘தமிழரை’ப் பழி சொல்தல் சரியன்று. தமிழர் மீது
‘திராவிடர்’ என்ற இன முத்திரை திணிக்கப்பட்டது என்பதே சரி. திராவிடர்
என்ற சொல்லை உருவாக்கியவன் மனுவாதி; சொற்பொருளைத் திரித்து ‘திராவிடர்’
என்ற இன அடையாளத்தைத் தமிழர் மீது திணித்தவன் ‘வடுக திராவிட’ இன வெறியனான
ஈ.வெ.ரா.வே! ஈ.வெ.ரா.வையும் அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ போன்ற பிற வடுக
திராவிடர்களையும் வடுக தாசர்களையும் மறைத்துவிட்டுத் தமிழர் இன
வீழ்ச்சிக்குக் கரணியம் ‘மனுவாதிகளும் தமிழரும்’ மட்டுமே என்று
பெருஞ்சித்திரனா
ர் கூறுவது சரியன்று; சரியன்று!
எல்லாளன்: அப்படியானால் பெருஞ்சித்திரனார் திராவிடச் சார்பாளரா?
நல்லப்பர்: சரியான ஆய்வின்படி சொல்வதானால் பெருஞ்சித்திரனா
ர் ‘திராவிடச் சார்பாளரே.’ பெருஞ்சித்திரனார் உள்ளடக்கத்தில் திராவிடச்
சார்பாளராக இருந்ததினால்தான், அவர் பெற்றெடுத்த மக்களும், பல தென்மொழி
அன்பர்களும் அவரை மேற்கோள் காட்டித் திராவிடப் புகழ்பாடி வருகின்றனர்.
இந்தப் பிழைபாடு எப்படி நேர்ந்ததெனில், ‘தமிழ்,தமிழர்,தமிழ்நிலம்’ என்ற
முப்படிக் கொள்கையில் தன் உயிரையே வைத்திருந்தவரும் ‘மொழியையும்
நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை’ என்ற தம் உயிர் கொள்கைக்கு உரிய
உண்மையான ஈகவாழ்க்கை வாழ்ந்தவருமான பெருஞ்சித்திரனா
ர், தமிழை இழிவுபடுத்துவதிலும் அழிப்பதிலும், தமிழர் இனக் கட்டுமானத்தைத்
தடுப்பதிலும் தமிழர் இனத்தை அழிப்பதிலும் தமிழர் நிலம் பறிபோவதிலும்
தமிழர் மெய்யியல் மீட்சியுறாமல் தடுப்பதிலும் வெளிப்படையான
ஈடுபாடுகளையும் செயற்பாடுகளையும் அரங்கேற்றிய திராவிட வடுகப்
பெரியாரையும் இன்றுவரை அரங்கேற்றி வருகிற அவர்தம் பின்பற்றாளர்களையும்
எதிரிகளாகப் புரிந்துகொள்ளத் தவறியமையும் அவர்களுடைய மேம்போக்கான குமுக
சீர்திருத்தங்களை மிகவும் அடிப்படையான செயற்பாடுகள் எனத் தவறாகப்
புரிந்து கொண்டமையுமே கரணியங்கள்!
எல்லாளன்: பொல்லாத ஆரியச் சூழ்ச்சியை அறியாப்
புழுக்கைத் தமிழரே தமிழரை அழித்தனர்!
வெல்லாத ஆரியர் வென்ற கதையிது !
வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே!
என்ற பாடல் வரிகள் வீழ்ந்த தமிழினம் யார் யாரால் வீழ்ந்தது? என்பதை
முழுமையாகச் சொல்லவில்லை என்பதையும் வீரத் தமிழினம் மனுவாதிகளாலும்
மனுவாதிகளுக்குப் பிறந்த வடுக திராவிடர்களாலும் வீழ்த்தப்பட்டது
என்பதையும் பெருஞ்சித்திரனார் போன்ற தமிழின மீட்பாளர்களே வடுக
திராவிடர்களால் வீழ்த்தப் பட்டவர்களே என்பதையும் மனுவியத்தையும்
திராவிடத்தையும் தமிழர் இனத்தின் இரு சம அளவிலான பகைகள் என்று புரிந்து
கொண்ட இளந்தமிழர்கள் விரைவில் திரண்டு ஒரு தமிழர் இயக்கமாய் விரைந்து
எழவேண்டிய தேவை எழுந்துள்ளது என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டேன்;
மிக்க நன்றி ஐயா.
நல்லப்பர்: மிக்க மகிழ்ச்சி தம்பி; உன்னுடைய தெளிவுநிலை அறிந்து நானும்
ஊக்கம் பெறுகிறேன்.
-அருள்நிலா.
நேற்று, 02:11 PM ·

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக