புதன், 22 மார்ச், 2017

தாராசுரம் சிற்பக்கலை கலை

athi tamil aathi1956@gmail.com

31/5/16
பெறுநர்: எனக்கு
Shanmugapriyan Sivakumar
காஞ்சி தஞ்சை மல்லை சிற்பக் கலைகளுக்கு நிகரான சிற்ப சிறப்புக்களை
தன்னகத்தே கொண்டு விளங்குகிறது....
குடந்தையில் உள்ள தாராசுரம் சிற்பக்கலை கோவில்
யாளி மீது போர் பயிலும் வீரர்கள்,பெண் படைவீரர்கள்,ஒரு ஜான் அளவு
முழுமையான பல ஆடல் உருவங்கள்,எண்ணெய் செக்கிழுக்கிற சிற்பம்,காளை,யானை
இணைவாக்க சிற்பம்,ஒரு இன்ச் பிள்ளையார் சிற்பம்,பிரசவ சிற்பம்,பெண்கள்
தலைவி தலைவாருகிற சிற்பம்,இந்திரன் சிற்பம்,கருவறை கோபுரத்தில் ஒருபக்கம்
பௌத்த துறவிகள்,சமண துறவிகள் சிற்பம் இன்னொரு பக்கம் சிவ சைவர்கள்
சிற்பம் என அடுக்கிக்கொண்டே செல்லலாம் .......
கருவறை தொடங்கி சுற்றுப்புறம் வரை ஒவ்வொரு இடங்களிலும் நீர் சரியாக வெளி
ஏற அத்துனை அறிவியல் பூர்வமான நுண்கட்டிடழகியல் தொழிற்நுட்பம் என
கோவிலில் நீர்மேலாண்மை வரையறை சிறப்பாக உள்ளது....
அகழ்வாராய்ச்சி துறையில் நம்மவர்கள் இன்னும் இறங்கவே இல்லையா ? என
தோன்றுகிறது.மேலும் இதுபோன்ற ஆய்வுகளில் கட்டுரைகளில் ஐயா.பரமசிவம்,ஐய
ா.நெடுஞ்செழியன் என குறிப்பிட்ட 2 அல்லது 3 நபர்களை தாண்டி நம்மவர்கள்
பெயர்கள் இல்லை....இத்துற
ையில் நம்மவர்கள் நிறைய நபர்கள் தேவைப் படுகின்றனர்.
இங்கு உண்மையான கொஞ்சநஞ்ச வரலாறும் மண்ணில் மட்டுமே இருக்கிறது,ஆனால்
அந்த துறை நம்மிடம் ( மாநிலங்களிடம் )இல்லை....அகழ்வ
ாராய்ச்சி துறையை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் அதற்கு குரல் கொடுக்க வேண்டும்
நம்மை நாமே அணியமாக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக