|
பிப். 15
| |||
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் எழுத படிக்கத்தெரியாத
தமிழ்ப்பிள்ளைகளுக்கு, இலவசமாக 25 மையங்களில் தமிழ், சொல்லிக்
கொடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் மேலும் இரண்டு மையங்களில் தமிழ் வகுப்புகள் துவக்கி வைத்து
தமிழ்சங்க தலைவர் தாமோதரன் பேசுகையில்,
பெங்களூரில் தமிழ்க் கல்வி திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது, இதனை
எதிர்கொள்ள தொலைநோக்கு திட்டம் வகுத்து, சங்கமே நேரிடையாக இலவசமாக தமிழ்
கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு 25 மையங்களில் துவக்கினோம்.
இன்று பழமை வாய்ந்த இந்த மெமோரியல் தேவாலயத்தில் தமிழ் வகுப்பு
துவக்கியுள்ளோம். நாமெல்லாம் தமிழர்கள். நமது தாய்மொழி தமிழ், நமது மொழி
நிலைத்து இருக்க வேண்டுமானால் அதுமக்களால் பேசப்படவேண்டும். எழுதப்பட
வேண்டும்.
தமிழர்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழில் தான் பேசவேண்டும். தமிழ்
அவமானமல்ல அது நமது அடையாளம். அவசியத்திற்கு ஆங்கிலம் அடையாளத்திற்கு
தமிழ்.
மலேசியாவில் தமிழ்க்கல்வி போதிக்கப்படத் தொடங்கி 200 ஆண்டுகள்
நிறைவடைந்து இன்னும் நீடித்திருப்பதை கொண்டாடடும் விதமாக மலேசிய கல்வி
அமைச்சகம் பல்வேறு விதமான நிகழ்சிகளையும் கொண்டாட்டங்களையும், நடத்தி
வருகிறது. “தமிழ்க்கல்வி 200ஆம்ஆண்டுக்கொண்டாட்டங்கள்” என்றமுழக்கத்துடன்
கொண்டாடப்படுகிறது.
மலேசிய நாட்டுப்பிரதமரே தன் கையெழுத்தை நஜிப்துன்ரசாக் என்று தமிழியில்
எழுதுகிறார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா
நடத்துகிறார்கள். எனவே நாம் நம் அடையாளத்தை இழக்கக் கூடாது கூறினார்.
Related Topics: Tamil Online News Live
selvaraj

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக