திங்கள், 27 மார்ச், 2017

குறவர் தமிழர் நரிக்குறவர் தமிழரல்லர்

aathi tamil aathi1956@gmail.com

20/3/16
பெறுநர்: எனக்கு
கலந்துரையாடுவோம்:
======================
குறவர் என்பார் குறிஞ்சி வாழ் பெருமக்கள். அப்படி இருக்கையில்
தமிழகத்தில் நாடோடிகளாக காணப்படும் மராட்டி மொழி பேசும் நரிக்குறவர்
என்பாரின் பெயரில் வரும் "குறவர்" பட்டம் யாரால் எப்போது
அளிக்கப்பட்டது??? மேலும், அறிஞர் குணா அவர்கள் கந்தர்வகோட்டை குறவர்,
தாபி குறவர், சர்க்கரைதம்மாடைக் குறவர், சங்கையம்பூதிக் குறவர்,
சாரங்கப்பள்ளி குறவர், செட்டிப்பள்ளிக் குறவர், தப்பைக் குறவர்,
தோகைமலைக் குறவர், பொன்னைக்குறவர், மொண்டைக்குறவர், வராகநேரிக் குறவர்,
ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், ஆத்தூர் கீழ்நாட்டுக் குறவர்,
உப்புக்குறவர் ஆகியோரை தெலுங்கர் என்று தமது "தமிழின மீட்சி" நூலில்
குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் எவ்வாறு உண்மை எனக்கொள்வது???? ஏனெனில்
தூய தமிழரான "ஆயிர வைசியர்" என்பாரை அறிஞர் அவர்கள் தெலுங்கர் என்று
தவறாகவும் விளித்துள்ளார்.
..... "ஆரிய வைசியர்" என்பார் மட்டுமே தெலுங்கர்...... இஞ்சி குறவர்,
காலகுறவர், சேலம் மேல்நாட்டுக் குறவர்,குறவர், குறவர் சித்தனார்ஆகியோர்
மட்டுமே தமிழர் என்றும் வகைப்படுத்தியுள்ளார். எனவே,
கலந்துரையாடுவோம்..... குறவர் என்ற பெயரில் தெலுங்கர் எவ்வாறு நுழைந்தனர்
அல்லது உண்மையில் அவர்கள் தமிழர் தானா என்று.....

 Vijay Vel
குறவர்கள் பச்சைத்தமிழர்கள
் ..குறிஞ்சி நில வேடுவர்கள்? குறவள்ளியின் சமூகத்தார்
ஆம்,குறவர்கள் வேறு ..நரிக்குறவர் வேறு
Vijay Vel
இன்றும் பழனியில் அவர்களுக்கான மண்டகப்படி மறுக்கப்படுகிறது
 Asa Sundar
Vijay Vel குறவரில் அறிஞர் குணா அவர்கள் வகைபடுத்தியுள்ள சிலர் (மேலே
குறிப்பிட்டுள்ளேன்) தமிழர் தானா???

Vijay Vel
எனக்கு தெரிந்து உப்புக்குறவரெல்
லாம் தமிழர்தான்

தமிழன். இரா.பெ. அரி
நான் முதலில் குறவர்கள் தான் ஆதி தமிழர்கள் என்று என்னியிருந்தேன்.... (
( நரி குறவர்களை அல்ல )
அறிஞர் கூற்றை படித்து கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டதில் அதை ஆராய வேண்டும்
என்று கொங்கு மண்டலத்தில் சில வேட்டுவ கவுண்டர்களிடம் விசாரித்தேன்....
அவர்கள் பழனி மண்டகபடியை உதாரணமாக சொல்லி நாங்கள் எல்லாம் ஒரே குழு தான்
நிலத்துக்கு ஏற்ப சில வேற்றுமை உண்டு என்றனர்...
நரிகுறவர்கள் குறவர்களே இல்லை என மறுத்தனர்....

Ragesh Ð Antony
நரி குறவர் மிகவும் வருமையில் உள்ள குலம். அவர்களை வடுகராயினும்
அவர்களின் நிலைபொருட்டு வெறுக்க வேண்டாம்

Asa Sundar
அவர்களை விட வறுமையில் உள்ள தமிழர் ஏராளம்...

கேளிர்ப் பிரியலன்
வள்ளியூரில் (திருநெல்வேலி மாவட்டம்) புறம்போக்கு நிலத்தில் ஏகப்பட்ட
குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

Asa Sundar
அவர்கள் நரிக்"குறவர்கள்" ... தமிழர் அல்ல...

தென்காசி சுப்பிரமணியன்
நீங்கள் குறிப்பிட்ட தமிழ் குறவரில் நான்கு பிரிவுகள் தான் உள்ளது.
இன்னொரு பிரிவு குறவன் சித்தனார் என்ற எஸ்சி பிரிவு.
மூன்றாவதாக பிற தென்னிந்திய மொழிகளில் குறவர்களை கொரச்சா என்றும் எருகலா
என்றும் குறிப்பிடுவர். இதிலுள்ள பெரும்பாலான தெலுங்குக்குறவர
்கள் கொரச்சர்களே.

Asa Sundar
கொரச்சா தான் தெலுங்கு/கன்னடக் குறவர்கள் என்றால் சரியா???

தென்காசி சுப்பிரமணியன்
ஆம் சரிதான்.
பரங்கிகப்பய காலத்தில் உப்பை மலையில் விற்பதற்காக வேற்று மொழிகொரச்சர்களை
பரங்கி தமிழ்நாட்டுக்கு கூப்பிட்டு வந்தான். அவர்கள் தங்கிய இடத்தைவைத்து
குறவர் என்ற பெயரையும் சேர்த்து இப்போது இருக்கும் சாதிப்பட்டியலில்
அவர்களின் பெயர்கள் இற்றைப்படுத்தப்
பட்டது.

தென்காசி சுப்பிரமணியன்
இரண்டாவதாக நீங்கள் மேலே குறிப்பிட்ட குறவர் பிரிவுகளை வடுகர் என்கிறாரா?
தெலுங்கர் என்கிறாரா?

Asa Sundar
தெலுங்கர் என்றாலே வடுகர் என்று ஏற்பட்ட ஒவ்வாமை....தென்
காசியார்///

தென்காசி சுப்பிரமணியன்
தெலுங்கரென மாற்றவும். அதில் ஒரு ஆழ்ந்த பொருளுள்ளது.
நான்காவதாக இந்த சிக்கலின் வீரியம் பற்றி அறிய நீங்கள் எனக்கொரு உதவி
செய்ய வேண்டும்.

தென்காசி சுப்பிரமணியன்
தமிழ்நாட்டு மக்கள்தொகையில் சீர்மரபினரின் சதவீதம் எவ்வளவென கண்டறிந்து
சொல்லவும். 2001 மக்கள்தொகை அடிப்படையில் இருந்தால் கூட பரவாயிலை.
சீர்மரபினர் - denotified castes dnc

Asa Sundar
ok

1 கருத்து:

  1. ஐயா... என் குறவர் சமூகம் சார்ந்து நிறைய விவாதிக்க வேண்டும், சிலவற்றை பகிர வேண்டும், சிலவற்ற அறிய வேண்டும். விரும்புபவர்கள் அழையுங்கள்... 9500720555...

    பதிலளிநீக்கு