புதன், 22 மார்ச், 2017

பாண்டியன் தமிழ் மரியாதை மூவேந்தர்

aathi tamil aathi1956@gmail.com

28/5/16
பெறுநர்: எனக்கு
தமிழர் அரசு
# பாண்டியன்_தமிழுக்கு அளித்த மரியாதை !
நேற்றைய பதிவில் திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை ஊரை பற்றியும் அங்குள்ள
ஸ்வஸ்திக் கிணறு பற்றியும் குறிப்பிட்டு அங்கு இன்னும் ஒரு கல்வெட்டு
உள்ளது என்று சொல்லிஇருந்தேன் !
அது அவ்ஊரில்உள்ள பாடல்பெற்ற வைணவதளமான பெரியகோவில் என்று குறிக்கபெரும்
# ஸ்ரீவிண்ணகரமாகும் இங்கு
கோவில் நிலை வாசல்களில் இரண்டு கல்வெட்டு பாடல்கள் பொறிக்கப் பெற்று உள்ளன.
அந்த இரண்டு பாடல்களும் கி.பி.1216ல் மதுரையில் முடிசூடி பாண்டிய நாட்டை
மீட்டெடுத்த சுந்தரபாண்டியன் பொறித்தவை.
ஒரு பாடல் அப்பெருவீரன் காவிரி நாட்டை எப்படி தனதாக்கிக் கொண்டான் என்று
கூறுகிறது. அதன் எதிர்ப்புறம் உள்ள பாடலோ பின் வருமாறு உள்ளது:
‘‘வெறியார் தவளத் தொடை செயமாறன்
வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன் செல்பட்டினப்
பாலைக்கன்று
நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே’’
கோபம் மிகுந்த மாலை அணிந்த மாறவர்மனாகிய சுந்தரபாண்டியன்,
சோழனுக்குரிய காவிரிநாட்டின் மீது படைஎடுத்து அங்கிருந்த எல்லா
மண்டபங்களையும் இடித்துத் தள்ளினான்.
ஆனால், அக்காவிரி நாட்டில் அவன் அழிக்காமல் விட்டது 16 தூண்களை உடைய ஒரு மண்டபம்.
அது முற்காலத்தில் (அக்கல்வெட்டு எழுதப்பெறுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு)
# கரிகாற்பெருவளத்தான் என்னும் (கரிகாற்சோழன்) சோழமன்னனின் புகழை
# உருத்திரங்கண்ணனார் என்ற சங்ககாலப் புலவர் # பட்டினப்பாலை என்ற நூலாகப்
பாடியதற்காக அவ்வேந்தன் பரிசாக அளித்தது என்று கூறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக