|
2/6/16
| |||
அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 2
புறம் 378 கீழ்வருமாறு போகிறது.
தென்பரதவர் மிடல் சாய
வடவடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத்து அன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்த வல்ல மிகப் பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழி தந்தோனே! அதுகண்
இலம்பாடு இழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ் சேர் மதரணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே
இருங்கிளை தலைமை எய்தி
அரும்படர் எவ்வ முழந்த தன் தலையே
இந்தப் பாடலின் காலத்தில், சோழரின் அரசு தெற்கே கடற்கரையை ஒட்டிப்
பரவவொட்டாமல், தடுத்ததில் பரதவரின் பங்கும், வேங்கடத்திற்கும் வடக்கே
பரவவொட்டாமல் தடுத்ததில் வடுகரின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்ல
வேண்டியவை. (முன்னே சொன்னது போல் இளஞ்சேட்சென்னி - கரிகாலன் II ஆகியோர்
தான் பெருஞ்சோழர் அரசை உருவாக்கியவர்கள். அதனால் தான் கரிகாலனுக்கு
அவ்வளவு பெயர் தமிழர் வரலாற்றில் ஏற்பட்டது. பரதவரை வென்றி
கொண்டதெல்லாம், சோழ அரசின் தொடக்க காலங்களில் நடந்திருக்க வேண்டும். ஒரு
பேரரசின் தொடக்கம், நிலைப்பு, முடிவு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து
கொண்டால், இந்தப் பாட்டைச் சங்கம் முடிகின்ற காலத்துக்கு அருகில் கி.பி.
150-க்குத் தள்ளுவது கொஞ்சமும் சரி வராது. மீண்டும், மீண்டும், கி.மு.
200ல் இருந்து கி.பி. 200 என்ற 400 ஆண்டு காலத்தையே சுற்றிக் கொண்டு சங்க
காலத்தைக் கொள்ளுவது, முன்னே சொன்ன செங்குட்டுவன் - கயவாகு என்னும் சம
காலப் பொருத்தத்தால் அமையும் செக்குமாட்டுச் சுற்று. அதைவிட்டு வெளியே
வந்தால் தான், சங்க காலம் என்பது ஆய்வாளருக்குச் சரியாகப் புலப்படும்.
குறிப்பாக, அண்மைக்கால அகழ்வு ஆய்வுகளும், தமிழிக் கல்வெட்டு ஆய்வுகளும்,
சங்க காலத்தை கி.மு.400-கி.பி.200 என்ற 600 கால அகண்ட இடைவெளிக்குக்
கொண்டு சென்றிருக்கின்றன. இன்னும் கொடுமணலும், ஆதிச்ச நல்லூரும் முழுதாக
ஆயப்படவில்லை. இது வரை இங்கு நடந்த 5% ஆய்வுகளே தமிழக வரலாற்றை அசைத்து,
200 ஆண்டிற்கு அகலப் படுத்தியிருக்கின்றன என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள். நண்பர்கள் பலரும் இன்னும் கி.அ. நீலகண்ட சாத்திரியாரிடமும்,
ஐராவதம் மகாதேவனிடமும் இருந்து கொண்டிருந்தால் எப்படி? ஆற்றில்
பெரும்நீர் சாத்திரியாருக்கும் அப்புறம், திரு. மகாதேவனின் தமிழிக்
கல்வெட்டு ஆய்வுக் காலத்திற்கு அப்புறம், ஓடிவிட்டது. அண்மைக்கால 10, 15
ஆண்டு ஆய்வுகளைக் கூர்ந்து கவனிக்குமாறு சொல்லுகிறேன். முனைவர்
கா.ராஜனின் "தொல்லியல் நோக்கில் சங்க காலம்" - உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், 2004 ஆம் ஆண்டு வெளியீட்டை படித்துப் பார்த்தால் நான்
சொல்லுவது புரிபடும்.)
புறம் 378 ஆம் பாடலின் முதற் பன்னிரு வரிகளில் இளஞ்சேட் சென்னியைப்
புகழும் புலவர் (அவற்றை நான் இங்கு விளக்கவில்லை), அதற்கு அடுத்த
வரிகளில், அரசன் தனக்கு முன்பு தந்த நகைகளைத் தன் சுற்றத்தார் அணிந்து
கொள்ளத் தெரியாமல் தடுமாறிய காட்சியை விவரித்துச் சிரிக்கிறார்.
"இப்பொழுது இவன் கொடுக்கப் போகும் செல்வம் என்ன பாடுபடும்?" என்பதே அவர்
உள்ளத்தே எழும் குறுகுறுப்பு.
"வறுமையைச் சட்டென்று இழந்த தன் சுற்றத்தார் விரலிற் செறிந்து
கொள்ளுவதைச் (அதாவது மோதிரத்தை) செவியிற் தோடாய்ப் போட்டுக் கொண்டும்,
செவியிற் போடும் தோட்டை, மோதிரம் ஆக்கியும், அரையில் போடும் இடுப்புச்
சங்கிலியைக் கழுத்திற் போட்டும், கழுத்துச் சங்கிலியை அரையில் போட்டுக்
கொண்டும், தடுமாறியது எப்படி இருந்ததாம்?"
மிகுந்த கோவத்தில் (கருந்தெறல் என்றால் அது ஒரு பொருள்) இருக்கும்
இராமனின் மனைவி சீதையை வலிமிகுந்த அரக்கன் கவர்ந்து கொண்டு போன போது,
நிலத்தின்மேல் நகைகளைத் தூக்கி விட்டெறிந்தாளே (இங்கே கொஞ்சம் ஊன்றி
ஓர்ந்தால், வான்வழி சீதையைக் கொண்டுபோன செய்தியும் கூட இந்தப் பாட்டில்
மறைந்து நிற்பது புலப்படும்), அந்த ஒளிமிகுந்த நகைகளை அள்ளி, இப்படித்
தாறுமாறாக அணிந்து கொண்ட, வான் கலத்திற்குக் (aircraft) கீழே இருந்த
குரங்குகளின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தது போல இருந்ததாம்.
இந்தக் குரங்குகளை எப்படி நாம் புரிந்து கொள்ள வேண்டும்? வெறும் சிறு
குரங்குகள் என்றா? அல்லது மாந்தக் குரங்குகள் என்றா? இந்தப் பாட்டில்
அதற்குக் குறிப்பில்லை. (செம்முகப் பெருங்கிளை என்பது உறுதியாகச் சிறு
குரங்குகளைக் காட்டவில்லை. மாந்தக் குரங்குகளா, காட்டு மனிதர்களா என்பது
அவரவர் விழைவு :-)) ஆனால் வலித்தகை அரக்கன் என்பது குறிப்பிடப் படுகிறது.
இந்த அரக்கனுக்குப் பொருள் காணும் போது ஒருமையை வைத்துப் பார்ப்பது
சரியாக அமையாது. அரக்கர் என்னும் பன்மைச் சொல்லாட்சியை வைத்துப் பார்க்க
வேண்டும். "இந்த அரக்கன் சீதையைக் கவர்ந்து போனான்" என்பது கதைப்படி
சரியான கூற்றுத் தான். இதற்கு மறுதலைக் கூற்றாய் "பெண்ணைக் கவர்பவன்
எல்லாம் அரக்கன்" என்று சொல்ல முடியுமோ? அப்புறம் என்ன இராட்சதன்,
இராக்கதன்? ஓர் அரக்கன் கவர்ந்தது விதப்பான செயல். அதே பொழுது அரக்கன்
என்பது பொதுமைப் பெயர்.
எப்படி வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர்,
இயக்கர், மாந்தர் என்பவை பொதுமைப் பெயரோ, அதைப் போல அரக்கர் என்பதும்
பொதுமைப் பெயரே! பொதுவாகப் பொதுமைப் பெயர்கள் எல்லாம் விதப்பான பொருளில்
எழுந்து நாளாவட்டத்தில் பொதுமைப் பட்டுப் பின் மற்ற விதப்பான
பொருண்மைகளையும் குறிக்குமாப் போலப் பேச்சில் பயன்படுவது பல மொழிகளிலும்
நடப்பது தான்.
அமெரிக்காவில் கருப்பர் அல்லாதவருக்கு, கருப்பர் மேல் இருக்கும் ஓர்
சுமையேற்றிய பார்வையை இங்கு குறிப்பிட விழைகிறேன். 1980ல் ஒருமுறை
மாண்ட்ரியாலில் இருந்து என் குடும்பத்துடன் அமெரிக்காவின் கிழக்குக் கரை
நகரங்கள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே
வாசிங்டன் நகருக்கும் போக முற்பட்டேன். மாண்ட்ரியாலில் என்னோடு இருந்த பல
தமிழரும்/இந்தியரும், கனேடிய வெள்ளைக்காரர்களும், என்னைக் கலவரப்படுத்தி
"வாசிங்டன் என்பது கருப்பர்நகரம். நீ கவனமாக இருக்க வேண்டும்; பொது
இடங்ளிலும், பேருந்து, தொடரி (train) போன்றவற்றிலும் உன் உடமை, குடும்பம்
ஆகியவற்றின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்"
என்றெல்லாம் அவரவரின் பொதுப் புத்திக்கு ஏற்பச் சொல்லி கருப்பர் மேல் ஒரு
பூதகரத் தன்மையை எனக்கு ஊட்டினார்கள். நானும் கலவரப்பட்டுத் தான்
வாசிங்டன் போனேன். ஆனால் அங்கு நடந்ததே வேறு கதை. (அதை இங்கு சொன்னால்
தடம் மாறிவிடும்). பின்னால் என் முட்டாள் தனம் கண்டு நானே வெட்கப்
பட்டுப் போனேன். "கேப்பையில் நெய்வடிகிறது" என்று சொன்னால், கேட்பவனுக்கு
எங்கே புத்தி போயிற்று? - என்று நினைத்து அமைந்துகொண்டேன். வெகு எளிதில்
ஆதிக்கப் பார்வை என்பதைப் பொதுப்புத்தி மூலம் புதியவருக்கும் பரவி விடும்
உலகம் இது.
பொதுவாக ஆதிக்கக்காரர்கள் தங்களுடைய குமுகப் பார்வையை தாங்கள் கையாளும்
மொழிக்குள்ளும் சுமையேற்றி வைப்பார்கள். விவரம் தெரியாத மற்றவரும்
தற்சிந்தனை இல்லாமல் அந்த ஆதிக்கப் பார்வையை தம்மை அறியாமலே
கைக்கொள்ளுவார்கள். "கருப்பரா? கவனம்" என்ற தொடர் எவ்வளவு சுமையேற்றிய
பார்வையோ, அதே போல "கிராதகன்" என்ற சுமையேற்றிய பார்வையும் வேத நெறியின்
காலத்தில் இருந்தே நாவலந்தீவில் பரப்பப் பட்டிருக்கிறது. (எப்படி
மேல்சாதி இளைஞரிடம் ஆதிக்கச் சிந்தனையாளர் கீழ்சாதியார் பற்றி இல்லாததும்
பொல்லாததும் சொல்லி ஒருசார்ப்பட இயக்கி வைப்போர்களோ அதே போல, இன்னொரு
மதத்தாரை "கொம்பு முளைத்தவர், பயங்கரவாதிகள்" என்று பொதுப்புத்தியில்
சுமையேற்றி வைக்கும் அடிப்படை மதவாதிகள் போல) "கிராதகன்" என்ற சொல்லும்
இந்தியர்களின் அடிமனத்தில் சுமையேற்றப் பட்டிருக்கிறது.
கிராதர் என்பவர் கருத்தவர்களே - கருப்பானவர்களே! இவர்களைத்தான் இன்றைய
மாந்தவியல் Mon-khmer என்றும். முண்டா மொழி பேசுகிறவர்கள் என்றும்
கூறும். இவர்களே இன்றைக்கும் வடபுலத்தின் ஆதிக் குடிகள். கருத்தர் என்ற
நிறவழிச் சொல்லை நாளாவட்டத்தில் சுமையேற்றி வடமொழியின் வழியாக இந்திய
மொழிகள் பலவற்றிலும் "கிராதகன்" என்ற கொடுமைப் பொருள் கொண்ட சொல்லை
உருவாக்கவில்லையா? கிராதகன் கொடுமையானவன் என்ற இரண்டாம் வழிப் பொருளை
வைத்துக் கொண்டு முதற்பொருளை விட்டொழிப்பது சிந்தனைத் தாக்கம் தானே?
முதற்பொருள் கருப்பு என்பதே. "அவன் கருப்பா, அப்பொழுது கிராதகன் என்பது
சரிதான்" என்று எத்தனை மக்கள் மனத்தில் அனிச்சைச் செயலாய் சொற்கள்
ஆளப்படுகின்றன? இத்தனைக்கும் இன்று புனிதம் என்று சொல்லப்படும் கங்கை
எனும் கருப்பு ஆற்றிற்குக் கூட முதலில் கிராத் என்ற பெயர்தான், இருக்கு
வேதம் முடிந்த காலத்தில், இருந்திருக்கிறது.
இருக்கு வேதத்தின் நாயகர்களான திவோதசும், அவன் மகனான சுதாசும் கி.மு.1200
களில் ஆரிய சப்தசிந்துவில் இருந்த சம்பரனென்னும் கிராத அரசனுடன் போர்
புரிந்து அவர்களை மலைக்கு ஓடச் செய்து தங்கள் ஆட்சியை நிலைத்துக்
கொள்ளுவார்கள். இருக்கு வேதத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இதைப் பற்றித்
தான் பேசுகிறது. "வேதத்தில் அது இருக்கிறது, இது இருக்கிறது" என்ற கற்பனை
வாதங்களைத் தூக்கி எறிந்து இருக்கைக் கூர்ந்து படித்தால், "அது வெற்றி
பெற்றவர் எழுதிய இலக்கியம், தாங்கள் வெற்றிபெறுவதற்காகத் தங்கள்
தெய்வங்களிடம் வேண்டிக் கொண்ட முல்லைநிலப் பாடல்களின் தொகுப்பு" என்பது
புரியும். (வேதம் அநாதியானது; அது 4000, 5000 ஆண்டுகளுக்கு முந்தியது
என்ற கருத்தை நான் ஏற்பவன் அல்லன். எனக்குக் காதுகுத்தி மிகுந்த ஆண்டுகள்
ஆயிற்று. பல ஆய்வாளர்களும் கி.மு.1200 யைத்தான் இருக்கு வேதத்தின் தொடக்க
காலமாகவும் கி.மு.1000 ஐ அதன் இறுதிக் காலமாகவும் சொல்லுகிறார்கள்.)
வரலாற்றிற்குச் சற்று முற்பட்ட காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில்
மக்கள் பெரும்பாலும் நிறம் பற்றியும், ஓரளவு இடம் பற்றியுமே, அறியப்
பட்டார்கள். இனக்குழுக்கள் காலத்தில் அது இயற்கையே. மேலே கொடுத்த
பட்டியலில் வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர்,
நாகர், இயக்கர், மாந்தர் என்ற எல்லாச் சொற்களுமே நிறத்தை ஒட்டி ஏற்பட்ட
பழைய சொற்கள் தான்.
ஒவ்வொரு சொல்லாக எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.
முதலில் வரும் சொல் பார்ப்பனர். கீற்று வலைத்தளத்தில் வரும் செய்திமடல்
சூலை 2006ல் "பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?" என்ற கட்டுரையை
இரா.மதிவாணன் எழுதியிருப்பார். அதில் பால்-பார்ப்பு-பார்ப்பார் என்று
வெண்மைநிறம் கருதியே பார்ப்பனர் என்ற சொல் எழுந்தது என்று அழுத்தமாக
நிறுவியிருப்பார். (இன்றையப் பார்ப்பனர் பலரும் நிறம் மாறிக் கிடப்பது
வரலாறு 3200 ஆண்டுகள் நகர்ந்துவிட்டதை உணர்த்துகிறது.) பேரா. இராகுல
சங்கிருத்தியாயனும், "ரிக்வேத கால ஆரியர்கள்" என்ற தன் பொத்தகத்தின்
மூன்றாம் அதிகாரத்தில் (வர்ணமும், வர்க்கமும்) இருக்கு வேதத்தின் பல
செய்யுட்தொகுப்புகளை எடுத்துரைத்து ஆரியரின் வண்ணம் பால்நிறம் என்றே
நிறுவுவார். (ஆரியர் என்று ஒருவரும் இல்லை; ஆரியர் அல்லாதவர் என்று
ஒருவரும் இல்லை என்று பூ சுற்றப் பார்க்கும் வாதத்தைப் புறம் தள்ளுவோம்.)
ஆரியரின் முடி வண்ணம் இரோப்பியர் பலரைப் போலத் தீ நிறம் - பொன் நிறம்
தான்; blonde.
தேவர் என்ற சொல் தீயென்னும் சொல்லில் இருந்து கிளைத்தது என்று பாவாணர்
தன் நூல்களில் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார். தேவர் என்பவர் பொன்
நிறத்தவர்; பொன் முடியாளர்.
(வெள்ளைக்காரர் என்ற சொல்லுக்கு நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை. அதே
போலக் கருத்தர், கருப்பர் என்பதற்கும் நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை.)
நாகர் என்பவரும் கருப்பரே. யா என்னும் கருமைக் கருத்தில் இருந்து
ந்யா>ஞா>நா என்ற வளர்ச்சியில் நாகர் என்ற சொல் பிறக்கும். (தஞ்சைத்
தமிழ்ப்பல்கலைக் கழகப் ஆய்வறிஞர் ப.அருளியாரின் "யா" என்ற கருவூலம்
படித்து ஓர்ந்து பார்க்க வேண்டிய பொத்தகம்.) நாகரின் சுருக்கம் தான்
நக்கர் என்பது ஆகும். நக்கவாரம் என்னும் nicobar -இல் வசிக்கும் மக்களை
நக்க சாரணர் என்றே மணிமேகலை குறிக்கும். நக்கர் என்ற சொல் தெரிந்தோ
தெரியாமலோ இந்தையிரோப்பிய மொழிகள் எங்கும் பரவி இன்று உலகெங்கும் nigger,
negro என்று பரவிக் கிடக்கிறது. (இதையெல்லாம் சொன்னால், இது என்ன
அபத்தம், மம்போ-ஜம்போ என்று சொல்லுவதற்கும் கேலிசெய்வதற்கும் பெயரில்லாத
சிலர் முன்னிகை தர முன்வருவார்கள். இவர்களின் வறட்டுத் தனத்திற்கு எல்லை
இல்லை. நாவல் பற்றிச் சொல்ல வேண்டியது நிறையக் கிடக்கிறது. அதற்கும்
இன்னொரு நாள் வரவேண்டும்.)
இயக்கர் என்ற ஈழத்தீவின் பழங்குடிகளும் (இவர்களின் தலைவனாகக் குபேரனை
வடமொழித் தொன்மங்கள் உருவகஞ் செய்யும்) கருப்பரே. யா என்னும் வேரின் வழி
யக்கர் இயக்கராவர்.
யாவகர் (கருப்பர்) இருந்த தீவு யாவகம்>ஸ்யாகவகம்>சாவகம் = java என்னும்
இந்தோனேசியத் தீவு. வாரணர் என்பரும் கருப்பரே. வாரணத் தீவு = borneo
தீவு.
(இன்னும் சொன்னால் சேரர், சோழர், பாண்டியர் என்பவை கூட நிறத் தொடர்பில்
பண்பாடு ஒட்டிய பெயர்கள் தான். அவற்றின் விளக்கத்தை இங்கு சொல்லாமற்
தவிர்க்கிறேன்.)
ஆகக் கருப்பர் தென் ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மிகுந்தே
இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் கி.மு. 60000 ல் தொடங்கிய கருப்பர்
சோமாலியா, தெற்கு அரேபியா, ஈராக், ஈரான், கூர்ச்சரம், மாராட்டியம்,
கொண்கானம், சேரலம், பாண்டியம் (அங்கிருந்து ஒரு ஈற்றாக ஈழம்), சோழம்,
கலிங்கம், அங்கம் எனக் கடற்கரை வழியே போய், பின் தென்கிழக்கு ஆசியா
வழியாக முடிவில் ஆத்திரேலியா வரை இன்னொரு ஈற்றாக அங்குள்ள பழங்குடிகளாக
கி.மு.40000த்தில் முடிந்ததாக அண்மைக்கால Y chromosome மாந்த ஆய்வு ஒரு
முடிவிற்கு வந்திருக்கிறது. நம்முடைய பிரான்மலைக் கள்ளரை ஆய்வு
செய்திருக்காவிட்டால் இந்த மாந்தப் பரம்பல் தெரியாமலே போயிருக்கும். இந்த
ஆதிக் கருப்பரை M130 வகையினர் - கடற்கரை மக்கள் - coastal people - என
ஈனியல் (genetics) குறிக்கும்.
கருப்பரும் வெளுப்பரும் இந்தத் துணைக்கண்டம் வந்தது போக இன்னும் சில
இடைப்பட்ட நிறத்தவரும் இங்கு வந்து சேர்ந்த மற்றவர்களில் குறிப்பிட
வேண்டியவர்கள் M20 எனப்படும் இந்தியர்கள் (இவர்கள் இங்கு வந்து சேர்ந்து
35000 ஆண்டுகள் ஆகிவிட்டன; திராவிடர் எனப்படுவோர் இவர்தான். என்னதான்
இந்துத்துவக் காரர்கள் "திராவிடம் என்பது மொழி பற்றிய கருத்தீடு; அதை
இனங்கள் பற்றிய முடிவிற்குள் நுழைக்கக் கூடாது" என்று முறுக்கிக்
கொண்டாலும் அறிவியல் அப்படித்தான் போகிறது), 9000 ஆண்டுகளுக்கு முன்வந்த
ஒரு குழுவினர், 3500 ஆண்டுகளுக்கும் முன்னால் வந்த இன்னொரு குழுவினர்
ஆகியோராகும்.
"Language of Harappans", "The Civilized Demons: The Harappans in
Rgveda" என்ற இரு பொத்தகங்களின் வழியாக அசுரர்/அரக்கர் என்போரை
ஆரியருக்கு முன்வந்த கூட்டத்தார் என்று மாலதி J ஷெண்கேயும், "Deciphering
the Indus Script" என்ற தன் பொத்தகம், மற்ற கட்டுரைகள் மூலமாய் திரு.
அசுகோ பர்போலாவும் இரட்டை நிலைக் குடியேற்றத்தை உணர்த்தியிருப்பார்கள்.
ஈனியல் குறித்துக் காட்டும் 9000, 3500 ஆண்டுகள் இந்த இரட்டை நிலைக்
குடியேற்றத்திற்கு அடையாளம் காட்டுகின்றன.
அரக்கர் (அசுரர்) என்பவருக்கும், தேவர் என்பவருக்கும் இடையே இருந்த
போராட்டம், துருக்கியில் ஹிட்டைட் தொடங்கி பாபிலோனியாவில் அசூர் நாகரிகம்
வழி (இன்றைய சிரியா அசூர்களின் நினைவில் எழுந்த பெயர்தான். பாபிலோனிய
அரசன் அசுர் பனிபால் - இப்படி அடுத்தடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்),
இரானில் செண்ட் அவத்தா வரை பல தெற்றுக்கள் தென்படுகின்றன. இந்தியத்
துணைக் கண்டத்திலும் அடையாளம் தென்படுகிறது. அசுரர்-தேவர் போராட்டம்
பற்றிய பல தொன்மங்கள் ஒன்றுக்குள் ஒன்றாய் இந்த நீண்ட நிலப்பகுதியில்
உருவெடுத்திருக்கின்றன. இந்த நிலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டமும் ஒரு
பகுதியே!
அரக்கர் என்பவர் அரக்கு நிறத்தவர். - கருஞ்சிவப்பு. தமிழ்ப் பொருண்மை
தான் சரியான புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. இன்றைக்குக் கருப்பருக்கும்
வெள்ளைக்காரருக்கும் இடையில் coloured என்று சொல்லுகிறார்களே, அந்த
கலப்பினத்தவர் போல இருப்பது அரக்கு நிறம். அமெரிக்காவில் coloured
என்பவரை வெள்ளை நிறத்தாருடன் யார் சேர்த்துப் பேசுகிறார்கள்? அவரும்
கருப்பு நிறத்தாரின் தாயாதியாகத்தானே எண்ணப் படுகிறார்?
வருணம் பற்றி இவ்வளவு எழுதியதற்கு நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
நான் வருணம் நிலைக்க வேண்டும் என்று சொல்பவன் அல்லன். நம்மை அறியாமலேயே
வருணச் சொற்கள் சுமையேற்றிய நிலையில் நம்மால் பயன்படுத்தப் படுகின்றன
என்பதை இங்கு உணர்த்த வேண்டியிருந்தது. அரக்கன் என்ற சொல்லை ஏரணத்தோடு
புரிந்து கொள்ள வேண்டும்.
நடைமுறையில் "அரக்கன் கருப்பனோடு சேர்த்தே எண்ணப் படுவான்". இருக்கு
அப்படித்தான் சொல்லுகிறது. அடுத்த செய்திக்குப் போவோம்.
அன்புடன்,
இராம.கி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக