|
17/11/16
| |||
# நாம்_தமிழர்_கட்சி_சீமான்_தமிழ்
_சமூகத்துக்கு_விரோதி_தியாகு
!
" Thiyagu slams Naam Tamilar Seeman - நாம் தமிழர் கட்சி சீமான் தமிழ்
சமூகத்துக்கு விரோதி : தியாகு !....! "
திரு.செந்தமிழன் சீமானை நோக்கி, தோழர் தியாகு முன் வைத்த வினாக்கள் பற்றி
ஒரு பார்வை (குறுந்தொடர்-மீள் பதிவு):
உ) “தமிழ்நாடு தமிழருக்கே”...! முழக்கம்...!?
அடுத்ததாக, “’தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தைத் தந்தவரும்,
அதற்காக இறுதிவரை போராடியவருமான திராவிடப் பெரியார் ஈ.வெ.ரா.தான்
தமிழ்நாட்டின் கேடுகள் அனைத்திற்கும் காரணம் என்று தூற்றுவதை ஏற்றுக்
கொள்ள முடியாது” , என்ற கருத்தை தோழர் தியாகு வெளியிட்டுள்ளார்.
மேற்கண்ட கருத்து முற்றிலும் தவறானது. 1938-ஆம் ஆண்டு பிறந்த “தமிழ்நாடு
தமிழர்க்கே” என்ற முழக்கத்தின் தாய் நாவலர்-சோமசுந்தர பாரதியாரே!
உடனிருந்த செவிலியார்- மறைமலை அடிகளார் ஆவார்!
சரி, ஒரு பேச்சுக்கு, திரு.ஈ.வெ.ரா.தான் அம்முழக்கத்தின் தாய் என்பதாக
வைத்துக் கொள்வோம். அப்படியென்றால், அம்முழக்கத்தைப் பெற்றெடுத்த தாயே,
ஆறு மாதங்களுக்குள் அக் குழந்தையைக் கொன்றுவிட்டு, ‘திராவிட நாடு
திராவிடர்க்கே,’
என்ற குழந்தையை உடனே பெற்றுக் கொள்வாரா?!
மீண்டும் 1956-இல் அம்முழக்கத்தை ஏற்றுக் கொண்டதாக நம்பப்படுகிற
திரு.ஈ.வெ.ரா., மனமாற ஏற்றிருந்தால், முழக்கத்தில் வருகிற “தமிழர்க்கே”
என்ற சொல்லைச்சார்ந்த
ு, தம் இயக்கத்தின் பெயரைத் “தமிழர் கழகம்” என்று மாற்றியிருக்க
வேண்டாமா? சாகும்வரை மாற்றினாரா?!
1957-இல் நடுவணரசின் சுங்கவரியை எதிர்த்து, தான் உருவாக்கிய வானொலிப்
பெட்டிகளை உடைக்கும் போராட்டத்தை ஈ.வெ.ரா. முன்னிலையில் , அறிவியலார்
திரு.கோ.துரைசாம
ி (சி.டி.நாயுடு) அவர்கள் நடத்தியபோது, “ ஈ.வெ.ரா. அவர்களே,
தனித்தமிழ்நாட்டுப் போராட்டத்தை உடனே தொடங்குங்கள்; வேண்டிய கருவி உதவியை
நான் ஒருவனே செய்கிறேன்” என்று அறிவித்தார். திரு.ஈ.வெ.ரா. அவர்கள்
தொடர்வினையாக த் தமிழ்நாட்டுப் ‘போராட்டத்தை அறவழியிலேனும்,
அப்போதிருந்தாவது நடத்தினாரா?
பின்னாளில் 1969-ஆம் ஆண்டளவில் அறிஞர் ஆனைமுத்து அவர்கள், ஈ.வெ.ரா.விடம்,
“ ஒன்று தமிழ்நாட்டு விடுதலைக்கான செயல் திட்டத்தை வகுத்துச்
செயற்படுத்துங்கள்: அன்றேல் விடுதலையில் வருகிற, “தமிழ்நாடு தமிழருக்கே”
என்ற முகப்பு முழக்கத்தை எடுத்துவிடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
இச்செய்தியை, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் 5-ஆம் பொதுக்குழு
மாநாட்டின் போது,அவர்தம் சிறப்புரையில் கூறியுள்ளார். அதை ஒட்டி
திரு.ஈ.வெ.ரா. தனித்தமிழ் நாட்டுப் போராட்டத்திற்கு என்ன செயல் திட்டம்
தீட்டினார், என்னென்னவாறு செயல் பட்டார் என்பதை நாடறியும்!
1973-ஆம் ஆண்டு தனித்தமிழ்நாட்ட
ு விடுதலை மாநாட்டை மதுரையில் கூட்டிய பாவலரேறு பெருஞ்சித்திரனாரிடம்
மாநாட்டிற்கு வருவதாகக் கூறிய திரு. ஈ.வெ.ரா. மாநாட்டில் கலந்து
கொள்ளாததோடு,மாநாட்டின் மீது அரசால் எடுக்கப்பட்ட ஒடுக்குமுறை
நடவடிக்கைகளையும் மாநாட்டுச் செய்திகளையும் தமது விடுதலை நாளேட்டில்
வெளியிடவே இல்லை!
திரு.ஈ.வெ.ரா.வின் மறைவிற்குப் பின் , இப்போதைய திக தலைவர் திரு.வீரமணி
அவர்கள், “தமிழ் நாட்டு விடுதலை பெரியாரின் குறிக்கோளாக என்றுமே
இருந்ததில்லை” என்று கூறியுள்ளார்.!
மேலும் திரு.ஈ.வெ.ரா.1956-ஆம் ஆண்டுக்குப்பின்னர் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’
என்ற முழக்கத்தில் ஒரு தொடர்ச்சியான நிலைப்பாட்டை கருத்தளவிலேனும்
கொண்டிருந்தாரா?!
’இல்லை’ என்பதற்கு கீழ்க்காணும் மேற்கோள் விளக்கம் தரும்: “நமது
திராவிடர் கழகத்தில் திராவிட நாட்டுப் பிரிவினை ஒரு கொள்கையாக
இருந்தாலும், காமராசர் காங்கிரசுத் தலைவர் ஆனவுடன் சமதர்ம சோசலிசம்
காங்கிரசின் கொள்கையாக ஆக்கப்பட்டு விட்டதால் அது தக்கபடி அமலுக்கு
வந்தால், திராவிட நாட்டுப் பிரிவினை அவசியமாக இராது என்று கருதி ’திராவிட
நாட்டுப் பிரிவினையை’ அதிகமாய் வெளியே சொல்லாமல் இருந்தோம்”.
(சான்று:1967-03-30 -ஆம் நாளிட்ட விடுதலை)
மேற்கண்ட கூற்றுகளிலிருந்து, திரு.ஈ.வெ.ரா. “தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற
முழக்கத்தைத் தந்த மூலவர் அல்லர் என்பதையும், அம்முழக்கத்திற்கு என்றுமே
அவர் தொடர்ச்சியாகவும் உண்மையானவராகவும் இருந்ததில்லை என்பதையும் எந்தப்
பொது நிலையாளரும் தயக்கமின்றி ஒப்புவர்.
-அருள்நிலா.
(தொடரும் உ/உ0)....நளி-உ,உ0சுஎ.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக