ஞாயிறு, 19 மார்ச், 2017

முருகன் வேடுவன் வேலன் முருகர்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 24
பெறுநர்: எனக்கு
நாஞ்சில் வேடுவன்.
திருமுருகாற்றுப்படை 5 - குன்றுதோறாடல்
(இங்கே கானவர் என்ற சொல் குறவர் இனத்தை தான் குறிக்கும், கொடுந்தொழில்
வல் வில் கொலைஇய கானவர் = வலிமையான
வில்லால் விலங்குகளை வேட்டையாடுவதன் மூலம்,
கொடுமையான கொலைத் தொழிலைச் செய்கின்ற காட்டில்
வசிக்கும் வேடர்கள்)
" பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் - - - - - - 190
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல் - - - - - - 195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர ..." - - - - - - 197
தெளிவுரை:
"பசுமையான கொடியால், நறுமணமுடைய சாதிக்காயினையும் அழகான
புட்டில் போன்ற தக்கோலக்காயினையும் நடுவில் வைத்து, காட்டு
மல்லிகை மலருடன் வெண் கூதாளம் [வெண்டாளி] என்னும்
மலரினையும் சேர்த்துக் தொடுக்கப்பட்ட கண்ணியை தலைமுடி மீது
அணிந்துள்ள வேலன், நறுமணம் பொருந்திய சந்தனம் பூசப்பெற்ற
[மஞ்சள்] நிறத்தால் விளங்கும் மார்பினை உடையவன்; கொடிய வில்லால்
விலங்குகளை வேட்டையாடிக் கொடுமையான கொலைத் தொழிலைச்
செய்யும் வேடர்கள், நீண்ட மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த
தேனாலான கள்ளின் தெளிவை மலையில் சிறு ஊரில் வாழும் தம்
சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து [அக் குறிஞ்சி நிலப் பகுதிக்குரிய]
தொண்டகம் எனப்படும் சிறியதொரு பறையின் தாளத்துக்கு ஏற்பக்
குரவைக் கூத்தாட ..."
அரும்பத அகராதி:
பைங்கொடி = பசுமையான கொடி;
நறைக்காய் = நறுமணம் உடைய சாதிக்காய்;
இடை இடுபு = நடுவில் இட்டு;
வேலன் = [திருமுருகனைப் போல] கையில் வேலை உடையவன்;
அம்பொதிப்புட்டில் விரைஇ = அழகான புட்டில் போன்ற
தக்கோலக்காயினை இணைத்து;
குளவி = காட்டு மல்லிகைப் பூ;
வெண்கூதாளம் = வெண்டாளி;
நறுஞ்சாந்து = நறுமணமிக்க சந்தனம்;
கேழ் கிளர் = ஒளியுடன் விளங்குகின்ற;
கொடுந்தொழில் வல் வில் கொலைஇய கானவர் = வலிமையான
வில்லால் விலங்குகளை வேட்டையாடுவதன் மூலம்,
கொடுமையான கொலைத் தொழிலைச் செய்கின்ற காட்டில்
வசிக்கும் வேடர்கள்;
நீடுஅமை = நீண்ட மூங்கில்;
தேக்கள் தேறல் = தேனால் விளைந்த கள், மது;
தொண்டகம் = சிறிய பறை வகைகளுள் ஒன்று;
சிறுகுடிக் கிளை = சிறிய ஊரில் வாழும் சுற்றத்தார்;
குரவை = ஏழு, எட்டு, அல்லது ஒன்பது பேர்கள் கை கோர்த்தாடும்
ஒருவகைக் கூத்து.
மொழிபெயர்ப்பைக் காணவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக