|
பிப். 14
| |||
Mugilan Swamiyathal , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Naanal
Nanbargal மற்றும் 30 பேர் உடன்.
'இப்படியும் காதலிக்கலாம்!'
அசத்தும் பசுமைக் காதல் தம்பதி
============================== ===
பசுமை விகடன் ....
காதல் தம்பதி
மதுரை குலுங்க ஒரு இயற்கைத் திருவிழாவை, தனது திருமண விழாவாக நடத்தி
முடித்திருக்கின்றனர் பூபாலன் -சரண்யா இணையர். திருமணத்தில் பசுமை
கலந்ததற்கு காரணம் வேறென்ன காதல் தானாம். இருவரும் தங்களது தனித்துவ
அடையாளங்களை இழக்காமல் வாழ்வில் இணைய வேண்டும் என்பதே இந்த காதல்
பறவைகளின் பயணத் தத்துவம்.
அப்படியென்ன ஸ்பெஷல் இந்த திருமணத்தில்....
* எளிதில் மக்கிப் போகும் அட்டையில் திருமண அழைப்பிதழை அச்சடித்ததில்
கவர்ந்திழுக்க ஆரம்பித்தது இவர்களின் பசுமை நேசம். புத்தகம் வடிவில்
இருந்த அழைப்பிதழில் பசுமையை உணர்த்தும் கவிதை, கட்டுரை, நேர்காணல் என்று
அழைப்பிதழிலேயே இயற்கையின் மீதான அன்பை அவ்வளவு அழகாய்
வெளிப்படுத்தியிருந்தனர். பச்சை நிற எழுத்துகளில் மகிழ்வுக்கான
துளிர்ப்புகளை உணர முடிந்தது.
* தங்களது மகிழ்ச்சித் திருவிழாவில் தமிழுக்கு மட்டுமே அனுமதி. தேவார
திருவாசக பாடல்கள் சாட்சியாக கரம் கோர்த்தனர்.
* தாலி இல்லாத் திருமணம்.
மணப்பெண் சரண்யாவே முதலில் பூ மாலையும், பின்பு திருமண அடையாளமாக
தங்கத்தால் ஆன செயினும் பூபாலனுக்கு அணிவித்தார். பின்பே பூபாலன்
சரண்யாவுக்கு மாலையிட்டு செயின் அணிவித்தார்.
* தந்தையை இழந்த மணமக்கள் இருவரும்..
மங்கள நிகழ்வில் கலந்து கொள்ள தயங்கி
நின்ற தாய்மார்கள் இருவரையும் அழைத்து முன்னிலைப்படுத்தினர். இரண்டு
பெற்றவர்களுக்கும் பாத பூஜை செய்து மரியாதை செய்து பெற்ற மனதை நெகிழ
வைத்துள்ளனர்.
* தங்கள் திருமணம் ஒரு விழாவாக இல்லாமல்... திருவிழாவாக இருக்க வேண்டும்
என்பது இருவரின் விருப்பம். சிலம்பம், விளையாட்டு என குழந்தைகளின்
திறன்களை மேடை ஏற்றி மெய்சிலிர்க்க வைத்தனர். திருமண அரங்கில் ஜவ்வு
மிட்டாய், பொரி உருண்டை, எலந்தைப் பழம் என விழாவுக்கு வந்தவர்கள்
நாவிலும் இனித்தது கிராமியம்.
காதல் தம்பதி...
* திருமணத்துக்கு வந்த அன்பளிப்பை மண் பானையில் சேமித்தது அழகு. அதைவிட
அழகு அந்த அன்பளிப்பை குக்கூ காட்டுப்பள்ளிக்கான நன்கொடையாக தந்தது.
* வறட்சியையும் தாங்கிக் கொண்டு பலன் தரும் பனை மரத்தின் பயன்களைப் பற்றி
இயற்கையியலாளர் அழகேஸ்வரி தொகுத்த தகவல்களை புத்தகமாக்கி திருமண விழாவில்
வெளியிட்டனர்.
* திருமணத்துக்கு வந்திருந்தவர்கள
ுக்கு மரக்கன்றுடன், பாரம்பர்ய காய்கறி மற்றும் கீரை விதைகளுடன் பனையின்
பயன் சொல்லும் புத்தகத்தையும் பரிசளித்து வழியனுப்பினர் இந்த தம்பதியர்.
* திருமண விழாவையே இயற்கைத் திருவிழாவாக நிகழ்த்திக் காட்டிய அந்த
தம்பதியின் வாழ்க்கைப் பயணமும் மண்ணோடும், மரங்களோடும், வயல் சார்ந்த
உயிர்களோடும்தானாம். தாங்கள் படித்த பொறியியல் பணிகளை விட்டு விட்டு,
இயற்கை விவசாயத்தையே வாழ்வியலாக மாற்றிக் கொண்ட இணையர்களை வாழ்த்திய
உள்ளங்களிலும் பசுமையை விதைத்து அனுப்பினர்.
காதல் தம்பதி திருமணத்தில்
யார் இந்த பூபாலன், சரண்யா இணையர்:
மதுரை மேலூர் பகுதியில் ஒரு கம்யூனிச குடும்பத்தில் பிறந்தவர் பூபாலன்.
பொறியியல் படிப்பை முடித்து விட்டு சென்னையில் ஒரு ஆண்டு வேலை பார்த்த
பூபாலனுக்கு நகரத்தின் நெருக்கடிகளில் மூச்சுத் திணறி வெளியேறியுள்ளார்.
நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை வேளாண்மை பற்றி ஒரு ஆண்டு பயிற்சி
எடுத்துக் கொண்டவர் பூபாலன், சொந்த ஊர் திரும்பி வறண்ட நிலத்தில் தனது
விவசாயப் பணியை துவங்கியுள்ளார்.
இயற்கையின் மீது கொண்ட காதலால் சரண்யாவும் பொறியியல் படிப்பு,
எம்.என்.சி. வேலை தாண்டி ப
ரமக்குடி 'ட்ரீ பிளாண்டிங் அமைப்பை நடத்தி வந்துள்ளார். இயற்கையின் மீதான
இருவரின் தேடலும் 'குக்கூ' அமைப்பில் இவர்களை இணைத்துள்ளது. பரஸ்பரம்
நண்பர்களாக அறிமுகம் ஆகி விருப்பங்களை பகிர்ந்து கொண்ட இருவரின் பாதியாக
மற்றொருவர் தோன்றியதால் வாழ்விலும் இணைந்துள்ளனர். இணை ஏற்பு விழாவையும்
இயற்கை விழாவாக மாற்றுவதற்கான விதையை நம்மாழ்வார் இருவரது இதயத்திலும்
தூவிச் சென்றுள்ளார். அதுவே காதலாகி மலர்ந்து அடுத்தடுத்த தலைமுறையிலும்
அடர்த்தியாக வளரும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.
திருமண விழாவின் தித்திப்பை பூபாலன் பகிர்ந்து கொண்ட போது, ‘‘மனம் விவசாய
முறைக்கு மாறிவிட்டதால், நான் ஒரு எளிய வாழ்வுக்கு தயாராகி இருந்தேன்.
தேவையற்ற ஒரு பொருளை நான் வாங்குவதில்லை. பொருளாதாரம் சார்ந்த தேடலும்
இல்லை. இப்படியான ஒரு வாழ்க்கையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்
பெண்ணோடுதான் திருமண வாழ்வை தொடர முடியும். அப்படி ஒரு பெண்
கிடைக்காவிட்டால் திருமணமே வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.
அப்போது இயற்கையின் காதலியாக சரண்யா எனக்கு அறிமுகம் ஆனார். இருவரது
விருப்பங்களும் சம அலைவரிசையில் அமைந்ததால் நாங்கள் காதலால் இணைந்தது
எளிதாக நடந்தது. ஆனாலும் இருவரும் எங்களுடைய அடையாளத்தை இழந்து விடாததாக
அந்த பயணம் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். திருமணம்
என்பது பெண்ணை எந்த வகையிலும் அடிமைப்படுத்துவ
தாக இருந்து விடக் கூடாது என்பதில் நானும் தெளிவாக இருக்கிறேன்,’’
என்கிறார் பூபாலன்.
இயற்கையை காதலிக்கும் இவர்களின் காதலும் அழகல்லவா!
6 மணிநேரம் · பொது
Nanbargal மற்றும் 30 பேர் உடன்.
'இப்படியும் காதலிக்கலாம்!'
அசத்தும் பசுமைக் காதல் தம்பதி
==============================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக