|
28/9/16
| |||
Yuvaraj Amirthapandian.
தமிழர் நாகரீகம் - கீழடியில் நேர உள்ள அவல நிலை:
மிகவும் அவசரம்...
உயர்மதிப்பிற்குரிய "அரசு அதிகாரி பெயர்/பதவி ஐயா/அம்மா" அவர்களுக்கு,
மதுரையை அடுத்த கீழடி கிராமத்தில் மத்திய அரசு தொல்பொருள் ஆராய்ச்சி
நடத்தியது. மொத்தம் நூற்றி எட்டு ஏக்கர் பரப்பளவில் இதுவரை அரை ஏக்கர்
நிலப்பரப்பில் மட்டுமே ஆராய்ச்சி நடந்துள்ளது. சரித்திரத்தையே புரட்டிப்
போடும் அளவுக்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் ,
கண்டறியப் பட்டுள்ளது. தமிழ் பிராமி எழுத்து, ப்ராகிருதம் என எழுத்து
வடிவங்கள் கண்டெடுக்கப்பட்
டுள்ளது. வெறும் அரை ஏக்கரில் மட்டுமே 2500
பொருட்களை அகழ்ந்தெடுத்துள
்ளனர்.
நகர நாகரிகம்
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றா ளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்
குழுச் சமூகமாகத்தான் வரையறுத்தார்கள். சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் போல
ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள் கருத்தின் அடிப்படை.
இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஆனால், அவற்றைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அந்தக்
கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால், இன்று கீழடியில் கண்டறியப்பட்டுள்ள
தரவுகள் அந்தக் கருத்தைத் தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர
நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கிறது.
கீழடியில் இருப்பது அழிந்துபோன ஒரு பெரும் நகரம். நகர நாகரிகத்தின்
அனைத்துத் தடயங்களும், முதன்முறையாக அங்கு கண்டறியப்பட்டுள்ளன. எண்ணற்ற
கட்டிடங் களின் தரைத்தளங்கள், நீண்டு செல்லும் மதில் சுவர்கள்,
முத்துக்கள், தந்தத்தால் ஆன பல்வேறு பொருட்கள், சதுரங்கக் காய்கள்,
எண்ணிலடங்கா மணிகள். வணிகர்களின் எடைக் கற்கள், நெசவுக்கான தக்கை என்று
பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
இதுவரை 71 தமிழ்ப் பிராமி எழுத்துகள் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில்
பிராகிருதம் உள்ளிட்ட வேற்று மொழிப் பெயர்களும் உள்ளன. ஆப்கானிஸ்தானத்து
பகுதியைச் சேர்ந்த சூதுபவழத்தாலான மணிகளும், ரோமாபுரியைச் சேர்ந்த
மட்பாண்டங்களும், வட இந்தியப் பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும்
பண்பாடும் ஊடறுத்துப் பாயும் பெருநகரமாக இது இருந்துள்ளது.
தொழிற்சாலை
சென்ற ஆண்டின் இதே மாதத்தில், அகழாய்வு முடிவுறும் தறுவாயில் அதுவரை
கிடைத்த பொருட்களை வைத்து, இது நகரத்தின் குடியிருப்புப் பகுதியென
எல்லோரும் உறுதிசெய்தனர். ஆனால், இந்த ஆண்டு அகழாய்வுப் பணி அதற்கு சில
அடி தூரத்திலேதான் நடந்துள்ளது. அங்கு கிடைத்துள்ள தடயங்கள் எல்லாம்
பெரும் தொழிற்சாலை இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. வரிசை வரிசையான
கால்வாய்கள், அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள். அந்தத் தொட்டிகளுக்குள்
தண்ணீர் உள்செல்லவும், வெளிச்செல்லவுமான அமைப்புகள். அந்த கால்வாய்
தடத்தை ஒட்டிச் சிறிதும், பெரிது மான ஆறு உலைகள். கால்வாயின் ஆரம்பப்
பகுதியில் வட்டக் கிணறுகள். மூன்று விதமான வடிகால் அமைப்பு. மூடிய
வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினாலான வடிகால்கள்.
இவையெல்லாம் முதன்முறை யாகக் கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடு வதற்கு
தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந் தியாவிலோ வேறு இடங்களே இல்லை.
கீழடியில் இருக்கும் தொல்லியல் மேடு சுமார் 110 ஏக்கர் பரப்பைக் கொண்டது.
அதில் அகழாய்வு நடந்திருப்பது வெறும் 50 சென்ட் நிலப் பரப்பளவுதான்.
மீதமிருக்கும் பெரும் பகுதியில் ஆய்வுகள் தொடருமேயானால், இந்த நகரத்தில்
இருந்த பல்வேறு பகுதிகளை நம்மால் கண்டறிய முடியும் என்கின்றனர்,
இவ்வாய்வை நடத்திக் கொண்டிருக்கிற அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமை யிலான
குழுவினர்.
1964-ல் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை மிக விரிவாகச் செய்துமுடித்த தமிழ்ப்
பேரறிஞர் மா.இராசமாணிக்கனார், “பழந்தமிழ் இலக் கியங்களான பரிபாடல்,
திருமுரு காற்றுப்படை, கலித்தொகை, சிலப்பதிகாரம் மற்றும் திருவிளையாடல்
புராணம் ஆகியவற்றின் அடிப்படையில், சங்ககால மதுரை என்பது இன்றுள்ள
மதுரையல்ல, நமது இலக்கியக் குறிப்புகளின்பட
ி அது திருப்பூவணத்துக்கு நேர் மேற்கிலும், திருப்பரங்குன்ற
த்துக்கு நேர் கிழக்கிலும் அமைந்திருக்க வேண்டும். அதனை ஆய்வுகளின்
மூலம்தான் கண்டறிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அவரது குறிப்பு, சுமார் 50 ஆண்டு களுக்குப் பின் ஒருபெரும் உண்மையை
நெருங்க வழிகாட்டுகிறது. சங்க இலக்கியம் சொல்லும் அதே புவியியல்
அமைப்பில்தான் இன்று அகழாய்வு நடக்கும் இடம் இருக் கிறது. இவ்வளவு
துல்லியமான புவியியல் ஆதாரமும், எண்ணிலடங்கா தொல்லியல் ஆதாரங்களையும்
இணைத்துப் பார்க்கை யில், இதுவே சங்ககால மதுரையாக இருப் பதற்கான
வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாக என்னைப் போன்ற பலரும் கருதுகிறோம்.
என்ன செய்ய வேண்டும்?
110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், பழந்தமிழ் நாகரிகத்தின் பேரடை
யாளங் களைத் தனது மார்போடு இறுக அணைத்து வைத்திருக்கிறது. அவற்றை இழந்து
விடாமல் இவ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும். மாநில அரசும் இங்கு அகழாய்வுப்
பணியைத் தொடங்க வேண்டும். இவற்றை யெல்லாம்விட மிக அவசரமாகச் செய்ய
வேண்டிய ஒரு பணி, ‘கள அருங்காட்சியகம்’ ஒன்றை உருவாக்குவது. அது
உருவானால் தான், இங்கு கண்டறியப்பட்டுள்ள இந்தத் தொல்பொருட்கள் எல்லாம்
பார்வைக்கு வைக்கவும் பாதுகாக்கவும்படும். இல்லையென்றால், மத்திய
அகழ்வாய்வுப் பிரிவின் கிட்டங்கி இருக்கிற மைசூருக்குக் கொண்டு
செல்லப்பட்டு, சாக்குமூட்டைகளு
க்குள் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இருக்க வேண்டிவரும்.
ஆதலால் இதனை உடனே தடுக்கும் பொருட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை
அப்பொருட்களை மைசூரு, பெங்களூருக்கு கொண்டு செல்லாவண்ணம் போர்க்கால
அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தடுத்து வைக்க வேண்டும். பின்பு, மாநில
அரசு முறையான ஆவண செய்து அதற்கான அருங்காட்சியகம் அமைய வழிவகை செய்ய
வேண்டும் என்று சிரம் தாழ்ந்து மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
அவற்றை அருங்காட்சியகம் அமைத்து வைக்க இரண்டு ஏக்கர் நிலம் தேவை. ஓரிரு
நாட்களில் அவை இடமில்லை என்று காரணம் காட்டி, பெங்களூரு, மைசூருக்கு
எடுத்துச் செல்ல முடிவு செய்து உள்ளதாகத் தெரிகிறது. இந்தப்பொக்கிஷங்கள்
கன்னடர்கள் கையில் கிடைத்தால், நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
தயவுசெய்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு நமது செல்வங்களைக்
காப்பாற்றுங்கள். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
நன்றி.
1. தமிழ்நாடு முதல்வர் தனிப்பிரிவு முகவரி:
Chief Minister's Special Cell ,
Secretariat,
Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
2. மதுரை ஆட்சியர்:
திரு L.சுப்ரமணியன் இ.ஆ.ப
District Collector,
மதுரை - 625001
தொலைபேசி : 0452-2531110
PABX-201,0452 2532290
தொலைப்பிரதி : 0452-2530925
மின்னஞ்சல் : collrmdu@tn.nic.in
3. இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவல் அரசுத் துணைச் செயலாளர்,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை-600 009,
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி:- 044-25671300 (அலுவலகம்),
24430180 (இல்லம்)
தொலைநகல்:- 044-25677777
மின்னஞ்சல்:- director@tndipr.gov.in
என்று மேற்குறிப்பிடப்பட்டுள்ள தமிழக அரசின் மின்னஞ்சல் மற்றும்
முகவரிக்கு நேரடி அஞ்சலுக்குக் கடிதம் அனுப்பவும்.
# கீழடி # Keeladi # தமிழர்நாகரீகம்
# நாகரீகம் # தொன்மை # Tamil
# Tamilnadu # தமிழ்நாடு

பதிலளிக்க அல்லது முன்னனுப்ப, இங்கே கிளிக் செய்யவும்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக