|
பிப். 23
| |||
Parthasarathy CK > விழித்திரு தமிழா விழித்திரு...!!! vizhithiru
tamizha vizhithiru...!!!
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும், தனது விடா முயற்சியால்
பாராகிளைடரை உருவாக்கி பறந்து சாதனை படைத்துள்ளார் ஒரு கிராமத்து இளைஞர்.
பழநி அருகே உள்ள வயலூரைச் சேர்ந்தவர் அ.ராஜா ஞானப்பிரகாசம்(3
5). இவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தந்தை
அருள்பிரகாசத்திற்கு உதவியாக விவசாயம் செய்யத் தொடங்கினார். வீட்டில்
இருந்தவாறு தொலைதூரக் கல்வியில் படித்து எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார்.
வானில் தனியாக பறக்க வேண்டும் என்பது சிறு வயது முதலே இவரது தீராத ஆசை.
ஆனால் அது தொடர்பான படிப்பை இவர் படித்திருக்கவில்லை. ஊராட்சி களில்
ஒப்பந்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நண்பர் ஒருவரின் லேத் பட்டறையிலும் வேலை செய்துள்ளார். பல பணிகளில்
ஈடுபட்டபோதும் தனது பறக்கும் ஆசை மட்டும் அவரை விட்டுப்போகவில்லை.
தனது 23-வது வயதில் இதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். விடா
முயற்சியால் தற்போது சொந்தமாக பாராகிளைடரை தயாரித்து வானில் பறந்து சாதனை
படைத்துள்ளார்.
இது குறித்து ராஜாஞானப் பிரகாசம் கூறியதாவது:
சிறு வயது முதலே வானில் தனியாக பறக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது.
இது குறித்து ‘யூ டியூப்’, புத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிந்து
பாராகிளைடர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இதில் பலமுறை தோல்வி
கண்டபோதும், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளேன். எங்கள்
கிராமப் பகுதியில் நான் பறந்து செல்வதை பார்த்து பலரும்
ஆச்சரியப்படுகின்றனர்.
மத்திய அரசின் ‘ஏர் டிராபிக் கண்ட்ரோல்’ 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க
அனுமதி அளித் துள்ளது. ஆனால் நான் ஏழாயிரம் அடி உயரத்தில் மட்டுமே பறந்து
செல்கிறேன். பறக்கும் உயரத்தை தெரிந்து கொள்ள அனிமா மீட்டர், காற்றின்
வேகத்தை தெரிந்து கொள்ள அல்டி மீட்டர் ஆகிய கருவிகளை பாராகிளைடரில்
பொருத்தியுள்ளேன். 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் இணைக்கப்பட்ட
பாராகிளைடரில் தொடர்ந்து 4 மணி நேரம் பயணிக்கலாம். மணிக்கு 120 கி.மீ.
வேகத்தில் செல்ல முடியும்.
பாராகிளைடர் தயாரிக்கத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன்.
வெளிநாடுகளில் ஒரு பாராகிளைடர் தயாரிக்க எட்டு லட்சம் முதல் பத்து லட்சம்
ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் நான் ஐம்பதாயிரம் ரூபாயில் பாராகிளைடரை
தயாரித்துள்ளேன்.
ஒருவர் பறக்கும் வகையிலும், இருவர் பறக்கும் வகையிலும் வடிவமைத்துள்ளேன்.
பயணிப்பவர்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அம்சங்களும்
ஏற்படுத்தியுள்ளேன். பாராகிளைடர் தயாரிக்க யாரிடமும் ஆலோசனை பெறவில்லை.
30 அடி சுற்றளவு காலியிடம் இருந்தாலே நான் தயாரித்துள்ள பாராகிளைடரை மேலே
எழவும், கீழே இறங்கவும் செய்ய முடியும்.
மத்திய அரசின் விமான போக்குவரத்து துறையில் அனைத்து அனுமதியையும்
பெற்றுள்ளேன். விமான நிலையத்திலிருந்து 40 கி.மீ. சுற்றளவில் மட்டுமே
பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறையின் அனைத்து
விதிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். தயாரிப்பு காப்புரிமை
பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
15 மணிநேரம் · பொது
https://m.facebook.com/groups/ 879713448733586?view= permalink&id=1352912051413721& refid=28&_ft_=qid. 6390014955603083273%3Amf_ story_key.- 7218872281316091817%3Atop_ level_post_id. 1352912051413721&fbt_id= 1352912051413721&lul&ref_ component=mbasic_photo_ permalink_actionbar&_rdr#s_ b9488bcbad308b7ba8e940d3cd6e86 3b
tamizha vizhithiru...!!!
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும், தனது விடா முயற்சியால்
பாராகிளைடரை உருவாக்கி பறந்து சாதனை படைத்துள்ளார் ஒரு கிராமத்து இளைஞர்.
பழநி அருகே உள்ள வயலூரைச் சேர்ந்தவர் அ.ராஜா ஞானப்பிரகாசம்(3
5). இவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தந்தை
அருள்பிரகாசத்திற்கு உதவியாக விவசாயம் செய்யத் தொடங்கினார். வீட்டில்
இருந்தவாறு தொலைதூரக் கல்வியில் படித்து எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார்.
வானில் தனியாக பறக்க வேண்டும் என்பது சிறு வயது முதலே இவரது தீராத ஆசை.
ஆனால் அது தொடர்பான படிப்பை இவர் படித்திருக்கவில்லை. ஊராட்சி களில்
ஒப்பந்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நண்பர் ஒருவரின் லேத் பட்டறையிலும் வேலை செய்துள்ளார். பல பணிகளில்
ஈடுபட்டபோதும் தனது பறக்கும் ஆசை மட்டும் அவரை விட்டுப்போகவில்லை.
தனது 23-வது வயதில் இதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். விடா
முயற்சியால் தற்போது சொந்தமாக பாராகிளைடரை தயாரித்து வானில் பறந்து சாதனை
படைத்துள்ளார்.
இது குறித்து ராஜாஞானப் பிரகாசம் கூறியதாவது:
சிறு வயது முதலே வானில் தனியாக பறக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது.
இது குறித்து ‘யூ டியூப்’, புத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிந்து
பாராகிளைடர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இதில் பலமுறை தோல்வி
கண்டபோதும், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளேன். எங்கள்
கிராமப் பகுதியில் நான் பறந்து செல்வதை பார்த்து பலரும்
ஆச்சரியப்படுகின்றனர்.
மத்திய அரசின் ‘ஏர் டிராபிக் கண்ட்ரோல்’ 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க
அனுமதி அளித் துள்ளது. ஆனால் நான் ஏழாயிரம் அடி உயரத்தில் மட்டுமே பறந்து
செல்கிறேன். பறக்கும் உயரத்தை தெரிந்து கொள்ள அனிமா மீட்டர், காற்றின்
வேகத்தை தெரிந்து கொள்ள அல்டி மீட்டர் ஆகிய கருவிகளை பாராகிளைடரில்
பொருத்தியுள்ளேன். 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் இணைக்கப்பட்ட
பாராகிளைடரில் தொடர்ந்து 4 மணி நேரம் பயணிக்கலாம். மணிக்கு 120 கி.மீ.
வேகத்தில் செல்ல முடியும்.
பாராகிளைடர் தயாரிக்கத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன்.
வெளிநாடுகளில் ஒரு பாராகிளைடர் தயாரிக்க எட்டு லட்சம் முதல் பத்து லட்சம்
ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் நான் ஐம்பதாயிரம் ரூபாயில் பாராகிளைடரை
தயாரித்துள்ளேன்.
ஒருவர் பறக்கும் வகையிலும், இருவர் பறக்கும் வகையிலும் வடிவமைத்துள்ளேன்.
பயணிப்பவர்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அம்சங்களும்
ஏற்படுத்தியுள்ளேன். பாராகிளைடர் தயாரிக்க யாரிடமும் ஆலோசனை பெறவில்லை.
30 அடி சுற்றளவு காலியிடம் இருந்தாலே நான் தயாரித்துள்ள பாராகிளைடரை மேலே
எழவும், கீழே இறங்கவும் செய்ய முடியும்.
மத்திய அரசின் விமான போக்குவரத்து துறையில் அனைத்து அனுமதியையும்
பெற்றுள்ளேன். விமான நிலையத்திலிருந்து 40 கி.மீ. சுற்றளவில் மட்டுமே
பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறையின் அனைத்து
விதிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். தயாரிப்பு காப்புரிமை
பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
15 மணிநேரம் · பொது
https://m.facebook.com/groups/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக