செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழ் இலக்கணம் பெண் சிறப்பு பெண்ணுரிமை பெண்பால்

aathi tamil aathi1956@gmail.com

28/9/16
பெறுநர்: எனக்கு
Sivathanu Pillai
தமிழுக்கு அமுதென்று பேர்,
தமிழ் எழுத்துக்களை கிளவி என்று பெண்பாலாக அழைத்தனர். தங்கள் நாட்டிற்கு
" குமரி; என்று பெயரிட்டனர். அங்கு ஓடும் ஆற்றுக்கு கன்னியாறு- குமரிஆறு
என்றனர். (உட்திறம் பொருந்திய கண்ணியாற்றின் தெற்கு- புறநானூறு)
பெண்ணினத்தை மகடுஉ என்றனர். அகவன்மகளே என்று அழைத்து அகவலோசை என்று
பெயரிட்டனர். வஞ்சி என்று கொஞ்சி வஞ்சிப்பா இயற்றினார். வஞ்சிச்சீர்
வாய்பாட்டை "கனி" என்றனர். அதன் நடையை "கூவிளங்கனி, கருவிளங்கனி,
தேமாங்கனி, புளிமாங்கனி என்று வகைசெய்தனர். அவள் கூந்தலின் நீளத்தை
வைத்தும் நடக்கும்போது அது அசைவதைப் பார்த்தும் கலிப்பாவின்
துள்ளலோசைக்கு தாழ் கூந்தல் என்று பெயரிட்டனர். பெண்கள் உடுத்தும்
சேலையின் கொச்சகத்தை கண்டு அதன் அழகில் மயங்கியதால் என்னவோ
கொச்சகக்கலிப்பா பாடினரோ. மகளிர் இடை காஞ்சி எனும் அணிகலக்கோர்வையைக்
கண்டதால் முதுமொழி கோரவையாக அமைந்த நூலுக்கு முதுமொழிகாஞ்சி என்றனர்.
தமிழச்சியின் வீரத்தைபபார்த்த
ு புறத்துறையில் :முதின்முல்லை என்ற இலக்கணம் வகுத்தனர். ஒருதலைகாதலை
கைக்கிளை என்றனர். காப்பியவகை நூலுக்கு :அம்மை: முதலிய எட்டு வனப்புகளை
பெயரிட்டனர். திருக்குறள் அம்மை வகை நூலாம், தாமரையைப பார்த்து தம்
மொழிக்கு தமிழ் என்றனர். --------தமிழர் பெண்மையைப போற்றிய பாங்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக