ஞாயிறு, 19 மார்ச், 2017

ஹோண்டுரோஸ் மக்கள் வாழைப்பழம் பன்னாட்டு நிறுவனம் கைப்பற்ற துடித்தல் கார்ப்பரேட்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 5
பெறுநர்: எனக்கு
Rahmania Ar, 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Kanivu Nampy மற்றும்
23 பேர் உடன்.
என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு கட்டுரையின் சுருக்க வடிவம் உங்களுக்காக......
"ஹொண்டூரோஸ்" என்றொரு நாடு தென்னமெரிக்காவில் இருக்கிறது. இந்த நாட்டைக்
கண்டுபிடித்த கொலம்பஸ் ( அமெரிக்காவில் வாழ்ந்த ஆதிக்குடிகளைக் "கொன்று"
நிலம் பிடித்த அதே வெள்ளை மிருகம் ) அங்கே வாழ்ந்த ஆயிரமாயிரம் பழங்குடி
மக்களைக் கொன்றொழித்தான். அந்த நாடு வாழைப்பழத்திற்குப் பெயர் பெற்றது.
அன்றிருந்து இன்றுவரை அந்த நாட்டின் வாழைப்பழ நிலங்களை அமெரிக்க அரசின்
பெருநிறுவனங்கள் பறித்துவைத்திருக்கின்றன. விடுதளைக்காகப் போராடிய அந்த
இனம் , அமெரிக்கப் பெருநிறுவனங்களின் பிடியிலிருந்து மீள்வதற்கு எடுத்த 9
முயற்சிகள் (ஏறக்குறைய 122 ஆண்டுகள்) அமெரிக்கக் கடற்படையின் ஆதரவுடன்
தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. காரணம்; அந்த நாட்டின் ஒரேயொரு வளமான
சுவைமிக்க வாழைப்பழம். வியாபாரப் போட்டிகளில் அமெரிக்க நிறுவனங்களுடன்
மோதும் அந்தநாட்டின் இளம்தலைமுறை விற்பனையாளர்கள் மறைமுகமாகக்
கொல்லப்படுகிறார்கள். ஆனால், எந்த சர்வதேச நீதிமன்றமோ, மன்னிப்புச்சபையோ
இந்த விடயத்தில் தலையிடுவதில்லை.
ஹோண்டுரசை அழித்து அதில் லாபம் பார்த்து வந்த நிறுவனங்கள் யாவும் சிறிய
பெயர் மாற்றத்துடன் இன்றைக்கும் உலகின் மிகப்பெரிய பழ நிறுவனங்களாக வலம்
வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எந்த சர்வதேச நீதிமன்ற வாசலுக்கும்
சென்று மன்னிப்பும் கோரியதில்லை; தண்டனையும் அனுபவிக்கவில்லை; ஒரு பைசா
கூட நட்ட ஈடாக யாருக்கும் வழங்கியதுமில்லை. United fruit என்ற பெயர்
கொண்ட அந்த நிறுவனம் இன்று பெயர் மாற்றம் அடைந்து ஆண்டுக்கு 20,000 கோடி
அமெரிக்க டொலருக்கு மேல் விற்பனை செய்து சர்வதேச அளவில் பழ வியாபாரத்தில்
முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், இப்பழத்தை விளைவிக்கும் அந்த நாடு
இன்னமும் படுகொலைகளிலும், காணாமல் போனோரிற்கான தேடலிலும் சிக்கித்
தவிக்கிறது. அத்தோடு ஒரு கிலோ வாழைப்பழத்திற்கு 8 சதம் மட்டுமே
அந்நாட்டிற்குக் கிடைக்கிறதாம்.
சரி; அந்த வாழைப்பழத்தின் பெயர் என்ன தெரியுமா..?
யேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளெங்கும் விற்பனையில் கொடிகட்டிப்
பறக்கும் “சிக்கிட்டா” வாழைப்பழமே அதுவாகும். உறவுகளே; சாதாரண ஒரு
வாழைப்பழத்தைக்காக ஒரு நாட்டையே சீரழித்துக்கொண்
டிருக்கும் ஏகாதிபத்தியவாதிகள், அனைத்துவளங்களும் பொருந்திய எமது
ஈழமண்ணையும், தமிழகத்தையும் விட்டுவைப்பார்க
ளா என்று சிந்தியுங்கள்.....
-தேவன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக