ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழர் பண்டிகை பட்டியல் நாட்காட்டி புத்தாண்டு வானியல்

aathi tamil aathi1956@gmail.com

11/12/16
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் , 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — வபிமுமு
சக்திவேல்ராசா மற்றும் 61 பேர் உடன்.
விழாக்கள் வெறும் விழாக்கள் தானா?
===================================
என்னைத் தொடர்புக் கொண்டு சிலர் கேட்கின்றனர், ஏன் எப்போதும் தமிழர்
விழாக்களுக்கே முக்கியத்துவம் தருகிறீர்கள்? தமிழர் அரசியல் பற்றி
பேசுவதில்லை என்று...
அவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அரசியலில் இன்று ஒருவர்
வருவர். நாளை அவர் போவார். இவர்களால் தமிழுக்கும், தமிழினத்துக்கும் எந்த
பயனும் இல்லை.
ஆனால் விழாக்கள் ஒரு சமூகத்தின் அடையாளம், விழாக்கள் ஓர் இனத்தின்
பண்பாட்டை பிரதிபலிப்பது. விழாக்களில், சாதிகள், பொருளாதாரம்,
வெறுப்புகள் ஆகியவை காணமல் போய்விடுகின்றன. திலகர் விநாயகர் சதுர்த்தி
விழா மூலம் மக்களை ஒன்றினைத்தார். மேலை நாட்டினர் கிருஸ்துமஸ் விழா மூலம்
வேற்றுமைகளை மறக்கின்றனர். வளைகுடா நாட்டினர் இரம்ஜான் விழா மூலம்
வேற்றுமைகளை புறக்கணிக்கன்றன
ர்.
ஆக, விழாக்கள் மக்களை ஒன்றினைக்கும் கருவி என்பதனை நன்கு புரிந்துக்கொண்ட
திராவிடர்கள், தமிழர் விழாக்களில் கை வைத்தனர். மற்ற இனத்தவர் அவர் அவர்
விழாக்கள் வந்தால், ஒற்றுமையாக கொண்டாடுவர். ஆனால், இங்கோ, எந்த விழா
வந்தாலும், வீண் விவாதங்கள்.
சூரிய புத்தாண்டு வருகிறதா, இது இந்து புத்தாண்டு என்று திராவிடன்
கொளுத்தி போடுவான். ஆட்டு மந்தைகளோ, இது சோழர் உருவாக்கிய நாள்காட்டி
என்று தெரியாமல், ஆட்டு மந்தைகள் போல், திராவிடனுக்கு ஏற்றாற்போல் ஆடி,
அடித்துக்கொள்வான்.
அறுவடை திருநாள் வருகிறதா, இது தமிழ் புத்தாண்டு என்று கொளுத்தி
போடுவான். (என்னவோ தமிழனுக்கு ஆங்கில புத்தாண்டும் இருப்பது போல, ‘தமிழ்’
புத்தாண்டாம்) . ஏமாளி தமிழனும், இது நன்றி தெரிவிக்கு அறுவடை திருநாள்
என்று தெரியாமல், அடித்துக்கொள்வான்.
கொற்றவை வெற்றித் திருநாள் வருகிறதா, விடுமுறை தினம், என்று ஏளனம்
செய்வான். முட்டாள் தமிழனும் பகுத்தறிவு என்று பல் இளிப்பான்.
எப்போது, தமிழர் அனைவரும் ஒன்றுக்கூடி, தமிழர் விழாக்கள் கார்த்திகை
விளக்கீடு,மார்கழி திருவாதிரை, தைப்பூசம், அறுவடை திருநாளாம் பொங்கல்,
மாசி கடலாட்டு, பங்குனி உள்ளி விழா, சித்திரை முழுநிலவு இந்திரவிழா,
ஆடிப்பெருக்கு, ஆவணி திருவோணம், ஐப்பசி ஓணம், கொற்றவை வெற்றித்திருநாள்
ஆகியவற்றை கொண்டாடுகிறானோ, அதுவே அவனுக்கு பொன்னாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக