ஞாயிறு, 19 மார்ச், 2017

கேரளா குறள் மதம் மடம் மெய்யியல்

aathi tamil aathi1956@gmail.com

7/11/16
பெறுநர்: எனக்கு
நலங்கிள்ளி
அன்பிற்குரியீர்!
வணக்கம். அன்பும் அறனும் இணைந்த திருக்குறள் வாழ்வியலைப் பின்பற்றும்
வகையில் கேரளத்தில் கடந்த நாற்பதாண்டுக் காலமாக இயங்கி வரும்
திருவள்ளுவர் ஞான மடத்தை நிறுவியவர் திரு சிவானந்தர்.
முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் திருவள்ளுவரை குருவாகவும்
திருக்குறளை வாழ்க்கை நெறியாகவும் ஏற்று உயர்ந்திட திருவள்ளுவர் ஞான மடம்
வழிசெய்துள்ளது.
திரு சிவானந்தர் முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் திருவள்ளுவருக்கான
வழிபட்டுத் தளங்களை ஏற்படுத்தியுள்ளார். ஞான மடத்தின் உறுப்பினர்கள்
அறத்தின் அடிப்படையில் தம் அன்றாட வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளனர்.
அவர்கள் தமக்கிடையிலான சிக்கல்களுக்காக
க் காவல் நிலையம் அல்லது வழக்கு மன்றம் செல்லாது குறள்நெறித் தீர்வுகளையே
நாடுகின்றனர். பெண் உறுப்பினர்கள் குழந்தை வளர்ப்பு முதல் அனைத்துப்
பணிகளின் போதும் திருக்குறள் வழிபாட்டு இசைப் பாடல்களைப் பாடுகின்றனர்.
ஒரு காலத்தில் மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தவர்களை அதிலிருந்து மீட்டு
குறள்நெறி கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்திடும் முழு மாந்தர்களாக வளர்த்த
பெருமை திருவள்ளுவர் ஞான மடத்தைச் சாரும்.
முல்லைப் பெரியாற்று அணை நீரில் தமிழகத்தின் உரிமையைக் கடுமையாக
மறுக்கும் மலையாளிகளுக்கு நடுவில் தமிழகத்தின் உரிமையை ஏற்பதே அரசியல்
அறம் என்று திருவள்ளுவர் ஞான மடம் துணிந்து பரப்புரை செய்து வருகிறது.
திருவள்ளுவர் ஞானமட நிறுவுனர் திரு சிவானந்தர் அகவை 70 கடந்த நிலையில் பல
வித நோய்களால் அல்லல்படுகிறார். சிறுநீரகக் கோளாறு, நெஞ்சு வலி, வாயுக்
கோளாறு போன்ற பிணிகள் அவரை வாட்டியெடுக்கின்றன. அவரை ஆயுர்வேத
மருத்துவமனை ஒன்றில் உள்ளிருப்பு நோயாளியாக அனுமதித்துத் தொடர் சிகிச்சை
அளித்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவம் செய்யப் பொருளுதவி
தேவைப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் இயன்ற வரை அவருக்கு உதவக்
கடமைப்பட்டுள்ளோம். அவருக்கு உதவ விரும்புவோர் அவரிடமே தொடர்பு கொண்டு
பேசி நிதி வழங்கலாம்.
செல்பேசி: . +91-9995934879, 9947929266
Account details: AC. No. 32341543099, State Bank of India, Varapatti, Kerala
3 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக