செவ்வாய், 21 மார்ச், 2017

சாதிக்கொடுமை தீபாவளி வேற்றின ஆட்சியில் நுழைந்தது

aathi tamil aathi1956@gmail.com

8/6/16
பெறுநர்: எனக்கு
Kunnathur Chandra Gounder Venkatachalam
வடுகமும் :- சாதியமும்-தீபாவ
ளியும்-தமிழ்வழிபாடும்-சாணிப்பி
ள்ளையாரும் !
சாதிப்பிரிவினை - மேல்கீழ் போன்ற கருத்தியலை, தமிழர்களை இழிவு படுத்தியதை
இரண்டுபேரும் சேர்ந்துதான் செய்தனர்.அவன் கருத்தியல் - இவன்
நடைமுறைப்படுத்திய அரசு அதிகாரம். இன்னும் சொல்லப்போனால், வடுகர்கள்
இங்கு வருமுன் தமிழர்கள் இவ்வளவு இழிவு படுத்தப்பட்டதே இல்லை.வடுக
ஆட்சியிலேதான் குறிப்பிட்ட மக்கள் செருப்புப் போடக்கூடாது;
இன்னமக்களெல்லாம் மேலாடை அணியக்கூடாது....என்றது-இந்தக் கொடுமையெல்லாம்
மனுதர்மத்திலே கூடக் கிடையாது.
வடுக மன்னர் ஆட்சிக்காலத்தில்தான் சாதியக்கொடுமைகளும் அதற்கான தண்டனை
கொடுத்தலும் (Penalty Class) நடைமுறைப்படுத்தப்பட்டன. மரத்தில்
கட்டிவைத்து அடிப்பது; சாணிப்பால் ஊற்றிக் குடிக்கச்சொல்லுவது....இப்படி
சாதிய மீறல்களுக்கு தண்டனை கொடுக்கும் பழக்கம் வடுகன்கள் ஆட்சியில்தான்
வந்தது. சட்டதிட்டங்களைச் சொல்வதோடு மட்டுமல்ல, அதை தண்டனை கொடுத்து
ஒடுக்குவதையும் நடைமுறைப்படுத்தியவர்கள் வந்தேறி வடுக ஆட்சியாளர்கள்.
வடுக அரசர்களுக்கும், முந்தைய தமிழ் மன்னர்களுக்கும் இதுதான் வேறுபாடு.
வடுகன் காலத்தில்தான் தமிழ் வழிபாட்டுமொழி நிலை ஒழிக்கப்பட்டது.
மதுரை சித்திரைத் திருவிழாவை நடைமுறைக்குக் கொண்டு வந்தது வடுகன்கள்தான்.இ
ன்றும் கள்ளர் அழகர் ஆற்றில் இறங்குவது நாயுடு விழா மாதிரியே நடக்கும்.
‘கோவிந்தா..கோவிந்தா..’ என்று வைணவ தெலுங்குப் பிராமணக் கலாச்சாரப்படியே
நடக்கும்.
தீய தீபாவளி விழாவை அறிமுகப்படுத்தியதும், நடைமுறைப்படுத்தியதும் வடுக
ஆட்சிதான்-திருமலை நாய்க்கன் காலத்தில் (ஆதாரம் : இளங்குமரனார் நூல்)
இப்ப, அண்மைக்காலத்திலே - இந்த திராவிட(ர்) ஆட்சிக்காலத்தில
ே தீபாவளிக்கு ‘நன்னர்’ (Bonus) கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அதற்கப்புறம்தான், நாட்டுப்புறங்கள் எல்லாம் தீபாவளி கொண்டாடத் தொடங்கின.
ஒரு விழாச் சூழலை தீபாவளிக்கு ஏற்படுத்தியதே திராவிட ஆட்சிகள் தாம்.
அதைத் தொடர்ந்து கூப்பாடு போட்டபின், பொங்கலுக்கு வேட்டி-சேலை ;
அண்மையில் கரும்பு-காசு அறிமுகப்படுத்தினார்கள்.
அதேபோல், தெருவுக்குத் தெரு பிள்ளையார் சிலை வைப்பும்-ஊர்வலமும்,
நீர்நிலைகளில் கரைப்பும் (அதன் வழி மோசமான சுற்றுச்சூழல் கேடும்) கடந்த
30-40 ஆண்டுகளில் மெல்ல மெல்ல (வடநாட்டில் இருந்த பழக்கம்) தமிழ்நாட்டில்
நடைமுறைக்கு வந்ததும் இந்த திராவிடர் ஆட்சிக்காலத்தில்தான். அதற்கு முன்
சாணிப் பிளையார்தான் வீட்டு வாசல்களில் பூவோடு காட்சியளிப்பார் ;
எந்தவொரு சுற்றுச் சூழல் கேடும் செய்யார்!
இப்படி தமிழ் அழிப்பு, தமிழரை இழிவுபடுத்தல், தமிழர்
நிலம்கவர்பு-சுற்றுச்சூழல் கெடுப்பு, தமிழர் மெய்யியல் அழிப்பு-திரிப்பு
என எல்லா கொடுமைகளும் இந்த வடுக வந்தேறிகளின் ஆட்சியில் தலைவிரித்தாடுவதை
அறிக,வழி காண்க.
-அருள்நிலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக