புதன், 22 மார்ச், 2017

கோவில் தமிழ் ஆழ்வார்கள் இராமானுஜர்

aathi tamil aathi1956@gmail.com

13/5/16
பெறுநர்: எனக்கு
Kamala Balachandar
மணவாளமாமுனிகள் வைணவத்துக்கு ஆற்றிய தொண்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு
அரிய பெரிய பொக்கிஷம். பிற்காலத்தில் சாத்திர சர்ச்சையினால்,
பூர்வாச்சார்யர்களின் கருத்துக்களுக்கு முரண்பட்ட சில மைசூர்க்கு அப்பால்
இருந்த வைணவர்கள் விஷிஷ்டாத்வைத சமயத்தை இரண்டாக பிரித்து வடகலை பிரிவை
உண்டாக்கினர்(ஆத
ாரம்: திருமழிசை அண்ணாவப்பங்கார் ச்வாமியின்
தேசிகர்-வேதாந்தாச்சார்யாரின் சரிதை). வைணவம் வளர்த்தது போல் தமிழை
வளர்க்க எவராலும் இயலாது. இராமானுசரும்,தே
சிகரும்,மாமுனிகளும் தமிழை இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும்
ஆந்திர தேசம்,கர்நாடகம்,ஒரிசா வரை தமிழ் வழி ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர்.
அரங்கத்துறையும் இறைவனின் அருளும்,அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும்,
கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு
கொண்டுவந்தனர். நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான
செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில்
மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு
நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும்
கிடைக்கப்பெற்று பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது.
தமிழ் பாசுரங்ளை சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழிகளில்
எழுதிவைத்து அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது.
வேதம்,ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது
கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக
அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ் பாசுரங்களை
இசைத்து பாடுவதால் அப்பிழையைக்கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின்
மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை
முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு
முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக