வியாழன், 23 மார்ச், 2017

பசுமை புரட்சி அரசு ஏமாற்றிய விவசாயி மகன் வேளாண்மை விவசாயம் இயற்கை

aathi tamil aathi1956@gmail.com

18/4/16
பெறுநர்: எனக்கு
பாரதி நாகராஜன்
"அரசாங்கம் எப்படி மரபார்ந்த விவசாயத்தை அழித்தது என்று ஒரு விவசாயின்
மகனாக என்னால் உணரபட்டவையே....
எனது தந்தையார் 1996 ஆம் வருடம் ஒரு போகத்தில் 400 மூட்டை நெல்
விளைவித்தால் மாவட்டத்தின் சிறந்த விவசாயியாக கலெக்டர் பரிசுகூட
கொடுத்தார். எனக்கு மிக மிக சந்தோசம் அப்போது. அதே பூமியில் இன்று
எதுவுமே விளைச்சல் தருவது இல்லை இது எதனால் என்று யோசித்ததன் விளைவாக இதை
பதிவிடுகிறேன்.
எங்கள் ஊரில் பெரும்பாலும் பொண்ணி நெல் மாப்பிள்ளை சம்பா போன்ற ஆறு மாத
விளைச்சல் ரகங்களை பயிரிடுதல் வழக்கம் விவசாய அலுவலகத்தில் இருந்து வந்த
படித்த மேதாவிகள் ஐ.ஆர் 20,ஐ.ஆர் 50 போன்ற சன்ன ரக நெல் விதையை கொடுத்து
இதை பயிரிடுங்கள் என்றனர் ஒரு முழ உயரத்தில் உள்ள நெல் பயிரில் முக்கால்
முழ அளவில் கதிர் விளைந்தது 20 மூட்டை விளைந்த அதே வயலில் 40 மூட்டைக்கு
மேல் விளைந்தது ஏக சந்தோசம் எனது தந்தையை அனைவரும் பாராட்டி கொண்டாடினர்
அடுத்த மூன்று வருடத்தில் இருந்து ஐந்து வருடத்தில் மண் உயிர் சத்து
இல்லாமல் போனதால் விளைச்சல் இல்லாமல் தலைகீழ் சரிவு விவசாய விஞ்ஞானிகள்
எனப்படும் விவசாய அதிகாரிகளை சந்தித்து ஏன் இப்படி ஆனது என்று வினவிய
போது அவர்கள் உற்சாகம் இழக்காதீர்கள் மகசூல் அதிகரிக்க யூரியா உரம்
பொட்டாஸ் போன்ற ரசயான உப்புகளை தூவுங்கள் மண் மூடும் அளவுக்கு அது
மட்டுமா வயலும் வாழ்வும் நிகழ்சிகளை கேளுங்கள் தொலைக்காட்சி இருந்தால்
பாருங்கள் என்று அறிவுரை கூறினார் ......
மூட்டை மூட்டையாக ரசயாண உப்புகளை தூவியதன் விளைவு எங்கள் மண் மட்டுமா
மலடாகியது எங்கள் உடலையும் மலடாக்கினர் புது புது ரகமான நோய்கள்
வானுயர்ந்த மருத்துவமனை கட்டிடங்கள் உள்ள சேலத்தை நோக்கி நோயாளிகளாக நகர
ஆரம்பித்தனர் விவசாயிகள் .
இரண்டாம் உலகபோருக்கு பின் தம்மை பெரிய ஆளாக வளர்த்து கொண்ட அமெரிக்க
ஏகாதிபத்தியம் மீதமுள்ள ரசயாண மற்று பூச்சி கொள்ளி மருந்துகளை
விற்பதற்கான சந்தை எது என்று யோசித்து கணக்கை கச்சிதமாக முடிக்க
ஏகாதிபத்தியத்தின் கைகூலியான M.S சுவாமி நாதன் போன்ற தற்குறிகளை
மார்க்கெட்டிங் மேனேஜராக நியமித்தது இந்தி அரசாங்கத்தின் துணையுடன்.
இந்தியாவில் நோயை பரவலாக்கம் செய்ய வேண்டும் அதற்கு இரசாயன உப்புகளை
கொட்டி இந்திய நிலங்களை மலடாக்கவேண்டும்.
பசுமை புரட்சி வெற்றி பெற்று விட்ட நிலையில்
operation success but patient was death.....
இந்தியா முழுக்க கொத்து கொத்தாக தற்கொலைககளை உருவாக்கியது பசுமை புரட்சி
எனும் ஒட்டுவீரியரக உணவு பொருட்களால் .
மரபார்ந்த விவசாயம் என்பது ஒன்றை 1000 ஆக்கி தருகின்ற மண்ணை உயிர்ச்சத்து
மிகுதியாக்கி ஆடு மாடு கோழிகளின் கழிவுகளை பயன்படுத்தி மனிதனுக்கு உணவு
தருகின்ற புஞ்சை மண்ணுக்கு உயிர் ஊட்டிய விவசாயிகளை, எழுத படிக்க தெரிந்த
கூமுட்டைகளான பசுமை புரட்சி எனும் சுவாமி நாதன் போன்ற ஓநாய்ககளை வைத்து
விவசாயிகளை வேட்டையாடியது இந்திய அமெரிக்க வல்லாதிக்க அரசுகளே...
பசுமை புரட்சிக்கு முந்தைய தமிழக விவசாய உற்பத்தி முறை என்பது
பழமையானதல்ல; மரபார்ந்த விவசாய முறை தாய்மையானது சுற்றுச்சூழல் மற்றும்
உயிரினங்களுக்கு தோழமையானது அன்றைய நமது நாட்டார் உணவுகளும் விவசாய
உற்பத்தி முறைகளும் அறிவியல் சார்ந்து அறவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டு
இருந்தது
இவ்வாறு தனக்கு தேவையான அசைவ உணவையும் அவர்களே உற்பத்தி
செய்துகொண்டார்கள் ஆடு,மாடு,கோழி என புல்லும் கீரையும் ஆடுகளுக்கு,ஆடுகள்
தின்றது போக மீதியுள்ள தண்டு மற்ற பொருட்கள் மாடுகளுக்கும் அரிசி
மனிதனுக்கும் அரிசி கழுவிய தண்ணீர் மாடுகளுக்கும் அவற்றை உண்டு அவற்றில்
உள்ள சத்துக்கள் பாலாக நெய்யாக ஆரோகியமான உணவாக நமது உணவு சங்கிலியின்
நீட்சி, வீட்டை சுற்றியுள்ள கழிவுகள் மற்றும் புழு பூச்சிககளை உண்டு
புரதம் நிறைந்த உணவாக நாட்டு கோழிகள் இருந்தன அன்றைய நாட்டு கோழி
முட்டைகள் உயிர் உள்ளவை அவற்றை உண்ணும் போது உயிர் தொடர்ச்சி இருந்தது
நூண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உயிர் உணவாக இருந்தன.
வீர்யம் செய்யப்பட்ட கலப்பு விதைகளை கொண்டு உருவாக்கபட்ட உணவில் உயிர்
வளர்கின்றன ஆற்றல் உண்டு உடல் மற்றும் சதையை வளர்கின்ற ஆற்றல் உண்டு.....
But......
ரத்தத்தில்-எலும்பில் -நரம்பில் உள்ள நோய் எதிர்பாற்றலை நீக்கிவிடுகிறது.
மனித குலத்தின் ஆரோகியத்தை காலி செய்துவிட்டு நோயை உற்பத்தி செய்வதற்காக
திட்டமிட்டே உருவாக்கபட்டவை தான் "வீரிய ஒட்டு ரகங்கள்"
இந்திய பெண்ககளின் தாய்பாலை பரிசோதனை செய்ததில் 36%நஞ்சாக இருந்தது தெரியவருகிறது
இளம்வயது சுகர்(Type1) என்ற வகை கடந்த 40 வருடங்களில் படு வேகமாக வளர்ந்த
வந்ததற்கான மூலகாரணம் ..
ஏழை பணக்காரன் நகரம் கிராமம் என் எந்த வித்தியாசம் இல்லாமல் பரவும்
சர்க்கரை மற்றும் ரத்தகொதிப்பு போன்ற ஆயுள் சந்தா நோய்களை
தாராளமயமாக்கியது மரபு வகைகள் பின்னுக்கு தள்ளபட்டு ஒட்டு வீர்ய
தானியங்களை உணவாக்கிக் கொள்கிற எழுத படிக்க தெரிந்த மந்திய வர்கத்தின்
மனோபாவம் தான்
மரபுவகைபட்ட தானியங்கள் உயிரை வளர்க்கும் சக்தியை கூட்டும் அதை விட நோய்
எதிர்பாற்றலை கூட்டும் நோய்களை அருகில் கூட அண்ட விடாது.
மரபார்ந்த உணவுகளை மீட்டெடுக்க மரபுவழி விவசாயத்திற்கு திரும்ப வேண்டும்
அதற்கு மண் மற்றும் நமது உடல் கூறுகளை கூர்ந்து கவனித்து அவற்றிற்கு
இசைவான சூழலை உருவாக்க முயலுவோம். பழமை என்பது பிற்போக்கு அல்ல தாயை
பிரிந்த குழந்தை மீண்டும் தாயிடம் சேர்வது போல.எனது தந்தையை போல
இந்தியாவில் உள்ள அனைத்து குடியானவனின் அறியாமையை பயன்படுத்திய
"எட்டப்பன்களின்" தேசம் இது. எனது அப்பா தெரிந்து தவறிழைக்கவில்லை தப்பாக
வழி நடத்தபட்டார் அதிகார வர்கத்தால்
இவை பட்டறிவு எனப்படும் அனுபவத்தின் வெளிபாடு.
இவை மரபார்ந்த விவசாயத்தை நேசிக்கும் அனைவருக்கும் சமர்பணம்...
5 மணிநேரம் · நண்பர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக