திங்கள், 27 மார்ச், 2017

கேரளா நாடார் கட்சிகள் அரசியல்

aathi tamil aathi1956@gmail.com

20/3/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar , 6 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
கேரளத்தில் முளைவிடும் I.N.K.C
================================
கேரளத்தில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டை, இடுக்கி, கொல்லம், கோட்டயம்,
ஆலப்புழை ஆகிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வசித்து வருபவர்கள்
நாடார்கள். பாலக்காடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் குறைந்த
எண்ணிக்கையினராகவும் உள்ளனர். இவர்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும்
சரி சமமான எண்ணிக்கையினராக உள்ளனர். இந்துக்களில் எண்பது விழுக்காட்டினர்
ஐயாவழி பிரிவினராகவும் கிறிஸ்தவர்களில் நாற்பது விழுக்காட்டினர்
எஸ்.ஐ.யூ.சி எனப்படும் தென்னிந்திய திருச்சபை புராடஸ்டன்ட்
கிறிஸ்தவர்களாகவ
ும், சுமார் முப்பது விழுக்காட்டினர் சிரியன் கத்தோலிக்க சபையைச் சேர்ந்த
மலபார் கத்தோலிக்கர் பிரிவையும் எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் இலத்தீன்
கத்தோலிக்க சபை என்றழைக்கப்படும் உரோமன் கத்தோலிக்கர்களாகவும் குறைந்த
எண்ணிக்கையில் பெந்தெகொஸ்தே, இவாஞ்சலிக்கல் லுத்தரன் சபை மற்றும்
யகொவாவின் எச்சங்கள் போன்ற பிரிவினர்களாகவும் உள்ளனர்.
இப்படியான பிரிவுகள் இங்கே உள்ளமையால் திருவிதாங்கூரில் பெரும்பான்மை
மக்களான நாடார்கள் அரசியலில் வலிமை குன்றி காணப்படுகின்றனர். கேரள நாடார்
மகாஜன சங்கம் (KNMS), வைகுண்டசாமி தர்ம ப்ரச்சார்ண சபா (VSDP), நாடார்
குடும்ப க்ஷேம சமிதி போன்ற அமைப்புகள் இங்கு வலியமையானவை. எனினும்
நாடார்கள் அரசியல் ஏற்றம் பெறாது நாயர்களின் அடாவடி அரசியலுக்கு அஞ்சி
பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிடுவதில்லை. இதனால் இருபத்து எட்டு
தொகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் நாடார்கள் வெறும் ஐந்து சட்டமன்ற
உறுப்பினர்களையே பெற்றுள்ளனர். நீண்ட காலமாக நாடார்களின் கோட்டையாக
இருந்த திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி வடுகரான சசி தரூர் (நாயர்)
கைகளில் சென்றதும் வியப்பே.
தற்போது இப்படியான சூழ்நிலையில் வடகேரளத்தின் மற்றொரு பெரும்பான்மை
சமூகமான ஈழவர்கள் தங்களுக்கென்ற ஓர் அரசியல் கட்சியை வெள்ளப்பள்ளி நடேசன்
தலைமையில் பாரத் தர்ம ஜன சேனை என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. கேரளத்தில்
ஈழவர், நாடார், தீயர், வில்லவர் ஆகியோர் பல இடங்களில் மிக ஒற்றுமையாக
இருந்த போதிலும் நாயர்களின் வல்லாதிக்க வடுக அரசியலில் இவர்கள்
புறந்தள்ளப்பட்ட
ு ஒடுங்கியே அரசியல் செய்து வருகின்றனர். இப்போது வி.எஸ்.டி.பி எனப்படும்
நாடார்களின் அமைப்பு நாடார் வாக்குகளை குறிவைத்து ஐ.என்.கே.சி (INKC)
இந்திய தேசிய காமராஜ் காங்கிரஸ் என்ற கட்சியை துவங்கியுள்ளது. இதன்
தலைவரும் நாடார்களின் அரசியல் எழுசிக்குக் காரணமாகவராக விஷ்ணுபுரம்
சந்திரசேகரன் மிகச் சிறந்த போராளியும் ஆவார். இந்த அமைப்பினர் ஏற்கனவே
சேரநாடு என்ற மாநிலத்தை உருவாக்க பரப்புரை நடத்தியுள்ளனர். இந்து
நாடார்கள் இது வரை பி.ஜே.பி க்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும், கிறிஸ்தவ
நாடார்கள் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட்க்கும் வாக்களித்து வந்த
நிலையில் இந்த அரசியல் கட்சியின் துவக்கம் கேரளத்தில் ஓர் அரசியல்
மாற்றத்தை கொண்டு வரும் என நம்பலாம்.
www.inkcparty.com
https://mobile.facebook.com/story.php?story_fbid=783097301822762&id=100003674994124&refid=28&_ft_=qid.6263935577364994426%3Amf_story_key.-6654603976012483176&fbt_id=783097301822762&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_e83a02a7c84f79d6e99e8184308e1211

2 கருத்துகள்: