ஞாயிறு, 19 மார்ச், 2017

சேயோன் சிவன் சிவப்பு சைவம் முருகன்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 26
பெறுநர்: எனக்கு
Kasi Krishna Raja
தமிழ் குறிஞ்சி கடவுள் சேயோன் சிவன் ஆக்கிய திரிபு:
சேயோன் என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு கடவுள் ஆவான்.
சேயோன் என்ற பெயர் சிவந்தவன் என்ற பொருளை தரும் என்பதால் சிவன், முருகன்
இரண்டு பேருமே சேயோன் என்று கூறப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சேயோன் என்ற தமிழ்ச் சொல்லும் முருகனுக்கும் சிவபெருமானுக்கும் பொதுவாகச்
சென்று சேரும். சே என்ற ஓரெழுத்தொரு மொழிக்கு சிவப்பு, சிவந்த ஒளி என்று
பொருள் என நிகண்டுகள் கூறுகின்றன. சிவபெருமான் பவளம் போல் மேனியை உடையனாக
மணிவாசகர் கூறுகிறார்!. ‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்’ என்பது
அவர் வாக்கு. எனவே சேயோன் என்பது செம்மைப் பண்பைக் குறித்து சிவனையும்,
சிவனது மகன் அதாவது சேய் என்ற பொருளில் முருகனையும் குறிக்கும். இதனால்
சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்தபுராணம் காட்டும் கருத்திற்கு ஏற்ப
சேயோன் என்ற சொல் துணை நிற்கிறது என்று கூறலாம்.
சேயோன் என்ற இந்தச் சொல்லையே தமிழ் இலக்கணமான தொல்காப்பியமும் எடுத்துக்
கொள்கிறது. ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்பது தொல்காப்பிய நூற்பா
வரியாகும். அதாவது உலகத்தை நான்கு வகை நிலங்களாக வகுத்து அந்தந்த
நிலத்திற்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைத் தமிழ் சான்றோர்கள் எனக்கு
முன்னம் இப்படிக் கூறிவைத்தனர் என்று சொல்ல வந்த தொல்காப்பியர் குறிஞ்சி
என்பது மலையும் மலையைச் சார்ந்த நிலத்தினைக் குறிக்கும் என்றும் அதற்குத்
தலைவன் சேயோன் என்றும் கூறுகிறார்.
மலைக்குத் தலைவன் முருகன் என்று கூறாமல் சேயோன் என்ற சொல்லைத்
தொல்காப்பியர் கொண்டதனால் சிவபெருமானையும் அந்தச் சொல்லில் அடக்கிக்
காட்டினார் என்று கொள்க.
‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்’
என்று நிலங்களின் தெய்வங்களைக் கூறியவர் வருணன், இந்திரன் என்கிற சிறு
தெய்வங்களையும், மால், முருகன் என்கிற பெருந்தெய்வங்கள
ையும் கூறியவர் தமிழர்களால் பரம்பொருளாக வணங்கப்பட்டவரும்,
தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் ஆகிய சிவபெருமானைச் சொல்லாமல் விட்டால் அது
குன்றக்கூறிய குறைக்கு ஏதுவாகும். எனவே சிவபெருமானையும், முருகனையும் ஒரு
சேரக்குறிக்கும் சேயோன் என்ற சொல்லால் சிவபெருமானையும் அங்கே
உள்ளடக்கினார் என்பதே கூர்ந்த உணர்வினரால் உணரக் கிடக்கிறது.
சிவபெருமான் இருப்பிடமும் மலை என்றே புராணங்களும் கூறுகின்றன. அவன்
இருப்பது வெள்ளிமலை எனப்படும் இமயமலை. அவன் அயனுக்கும், அரிக்கும் காட்சி
கொடுத்தது அண்ணாமலை. இன்னும் திரு ஈங்கோய் மலை, காளத்தி மலை,
திருக்கழுக்குன்றம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அவன் மலையையே
வில்லாகக் கொண்டவன். இப்படி சிவபெருமானுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பு
நன்றாகத் தெரிந்த ஒன்று.
மலையோடு தொடர்புள்ள சிவபெருமானது மகன் எனக் கூறப்படுகிற முருகனுக்கும்
மலையோடு நெருங்கிய தொடர்பு உண்டு. குன்று தோறாடும் குமரன் என்று
முருகனுக்குப் பெயர் உண்டு.
எனவே முருகனையும் சிவபெருமானையும் ஒரு சேரக்குறிக்கும் சொல்லான சேயோன்
என்கிற சொல்லைத் தொல்காப்பியர் தேர்ந்தெடுத்தார்.
சேயோன், பெயர்ச்சொல்:
பூட்டனின் பாட்டன்; ஐந்தாம் தலைமுறை மூத்த ஆண்.
முருகக்கடவுள்; முருகன்
சேயோன் மேய மைவரை யுலகமும்(தொல். பொ. 5).
சிவன்
தூரமாயிருப்பவன்
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க (திருவாச. 1, 8).-

3 கருத்துகள்:

  1. உண்மை அய்யா... சேயோன் என்பது சிவனே....
    அதே சமயத்தில் வேந்தன் என்பது முருகனுக்கு மட்டுமே பொருந்தும்...ஷன்முகத்தரசே என்பது படை வைத்து இருந்த முருகனே...

    பதிலளிநீக்கு
  2. மழுவாள் நெடியொன் என்பதில் உள்ள வருணனே...இந்திரியத்தை அடக்கிய இந்திர்ன்...

    பதிலளிநீக்கு
  3. பள்ளு வழிபாடு என்பது ஆண் குறி வழிபாடு....இன்றும் பல நாடுகளில் செய்யப் பட்டு வருகிறது....
    Phallas என்று கூகிள்ல் பார்த்தாலே தெரியும்.... இதுவும்...சிவலிங்க வழிப்பாடும் ஒன்றல்ல... பள்ளு என்பதில் உள்ள வருனனே பள்ளர்களின் தலைவன் என்பதே பொருத்தமாய் உள்ளது...

    பதிலளிநீக்கு