செவ்வாய், 21 மார்ச், 2017

சங்ககால எல்லைகள் வடுகர் நாடு

பிரபு போசு
திராவிட இயக்கத்திற்கு முன் எங்க தமிழ் தேசியம் பேசினர் என்று கேட்கும்
நல்லுள்ளங்களுக்கு...
இதற்கான சான்றுகளை கீழே தொகுத்துள்ளேன். இதன் காலம், இரண்டாயிரம்
ஆண்டுகள் என்று உறுதியாக வைத்துக்கொள்ளுங
்கள்.
குறுந்தொகை - மாமூலனார் (காலம் - கிட்டத்தட்ட கி.மு.4ம் நூற்றாண்டு)
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.
(பொருள் : கட்டி அரசன் ஆளும் வடுகர் வேற்றுமொழி பேசும் நாடாயினும் செல்வோம்.
நெஞ்சே, வாழி, இனி எழுக.)
-
அகநானூறு :31 - மாமூலனார்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே
(பொருள் : தமிழ்வேந்தர் மூவர். (சேரர், சோழர், பாண்டியர்). தமிழ்
பேசப்படாத தேசம் மொழிபெயர் தேயம். அந்த மொழி தெரியாத நாட்டுக்குச்
சென்றிருக்கிறார் என்கின்றனர். அதனால் அச்சமாக இருக்கிறது.)
-
இதேபோல், ஐங்குறுநூறிலும், அகநானூறின் மற்றுமொரு பாடலிலும் 'மொழிபெயர்
தேயம்' என்ற சொல் குறிக்கப்பட்டுள்ளது.
'மொழி பெயர் தேயம்' வேற்று மொழியுடைய தேசம் என்பதைக் குறிக்கும். தமிழகம்
தவிர்த்த மற்ற பகுதிகளை வேற்று மொழியினர் என்று குறிப்பிட்டு
வந்துள்ளனர்.
'வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம்' என்றது வடுகநாட்டையே என்பது தெளிவுறு
தேற்றம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்.
கன்னட நாடும் ஆந்திர நாடும் சேர்ந்ததே வடுக நாடு. கன்னடரும், ஆந்திரரும்
வடவர் அல்லது வடுகர் என்று பெயர் பெற்றனர். வடுக நாட்டுக்கு அப்பால்
(விந்திய மலைக்கு வடக்கே) இருந்தது ஆரியநாடு. அது வடஇந்தியா முழுவதும்
அடங்கியிருந்தது. ஆரிய நாட்டிலே இருந்தவர் ஆரியர். ஆரிய நாட்டிலிருந்த
படை ஆரியப்படை.
'கட்டி நாட்டின் வட எல்லை வடுக (கன்னட) நாட்டின் எல்லை வரையில் இருந்தது.
கட்டி நாட்டுக்கு அப்பால் மொழி பெயர் தேயம் (வேறு மொழி கன்னட மொழி)
பேசும் தேசம் இருந்தது ' என்கிறார் அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி.
சங்க இலக்கியங்களில் தமிழ் தேஎம் என்பதற்கு வரையறையாக மொழியே வைத்துச்
சொல்லப்படுகிறது. அதன்படி வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்த்தேசம் என
வரையறுக்கப்பட்ட
து. வேங்கடத்துக்கு வடக்கில் வேற்று மொழியாளர்களான வடுகர்கள் வாழும்
வடுகர் தேஎம் என்னும் மொழி பெயர்ந்த தேயம் வருவதாக கூறப்படுகிறது. ஆனால்,
இந்த 'வேங்கடம்' எங்கிருந்தது என்பது இன்னமும் தெளிவுறவில்லை.
ஆனாலும், இதன் மூலம் சங்க காலத்திலேயே மொழியையே வரையறையாக வைத்து
தமிழர்கள் தனித்து நின்று ஆட்சி செய்தனர் என்பது தெளிவாக விளங்கும்.
சேரர், சோழர், பாண்டியர் என மூவராக ஆட்சிப் புரிந்தாலும், மொழியால் ஒரே
ஆளுகையாக ஆட்சி செய்தனர் என்பதற்கும் பல்வேறு சான்றுகளுள்ளன.
ஆகவே,
மொழியின் அடிப்படையில் இனம் பற்றி பேசுவது தவறு, தமிழர், தமிழ் தேசியம்
பேசுவதும் முறையற்றது, இதெல்லாம் ஒத்துவராத புதிய கோட்பாடு என்பன போன்ற
பேச்சுகள் சான்றுகளற்ற கேலிக்குரிய கருத்துகளாகும்.
- எழிலன்
100 % தமிழ் ThaMiZh
Ezhilan Pisaasukutty KatradhuTamizh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக