ஞாயிறு, 19 மார்ச், 2017

தேவர் எடுத்த படம் பள்ளர் ஏறுதழுவுதல் எம்ஜிஆர் திரைப்படம்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 3
பெறுநர்: எனக்கு
"தாய்க்கு பின் தாரம்"ம்னு ஒரு படம், 1956-ல எம்.ஜி.ஆர் நடிச்சது, சாண்டோ
சின்னப்பா தேவர் தயாரித்தது, படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி
வரும், ரொம்ப பிரபபலமான தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்துலே வந்த ரொம்ப
தத்ரூபமான காட்சி அது. அந்த படம் கெடச்சதுன்னா வாங்கி பாருங்க.

அதுக்கு இப்ப என்னங்குறீங்களா?,

அந்த சல்லிக்கட்டு காட்சியில் எம்.ஜி.ஆர்-க்கு டூப் போட்டவர் பெயர்
சாமியாடி குடும்பர், அந்த காலத்துல பிரபலமான மாடுபிடி வீரர். அவரோட
திறமையா பார்த்து எம்.ஜி.ஆரோட சம்பளத்துல கொஞ்சத்த கட் பண்ணி இவருக்கு
கொடுத்தாராம் சின்ன்னப்பா தேவர். ஒரு பள்ளர் எப்படி மாடு பிடி வீரரா
இருக்க முடியும்?, சின்னப்பா தேவர் நெனச்சிருந்தா முக்குலத்தோரிலேயே ஒரு
சிறந்த வீரரை பயன்படுத்தி இருக்கலாமே?,

நம்ம தலித்திய அறிவு சீவிகள், நவீன முற்போக்காளர்கள் வேற சல்லிக்கட்டு
முக்குலத்தோரின் வீர விளையாட்டு, தலித்துகளுக்கு அங்கே இடமே இல்லைன்னு
கேப்பு விடாம சொல்லுறாங்களே?.

அப்போ ஒரு வேலை சாமியாடி குடும்பர் எங்கே சல்லிக்கட்டு டிரெயினிங்
எடுத்திருப்பாரு, இங்க கலந்துக்க முடியாம ஸ்பெயின்ல போயி ட்ரெயினிங்
எடுத்துகிட்டாரோ, சொன்னாலும் சொல்லுவாய்ங்கலோ.

விஷயம் என்னன்னா தலித்துகளும், குறிப்பாக பள்ளர்களும் கால்நடை விவசாயம்
தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து இருந்திருக்கிறார்கள், இல்லையென்றால்
எப்படி அலங்காநல்லோரில் முதல் மாடாக ஒரு தாழ்த்தப்பட்டவரின் காலை
விடப்படும், அதுபோல பல ஊர்களில் கோவில் தொழுக்களுக்கு உள்ளே
பள்ளர்கள்தான் இருக்கிறார்கள்,

ஆக ஜல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின்
பங்களிப்பு என்பது தொன்று தொட்டே இருந்திருக்கிறது, பல்வேறு
காலகட்டங்களில் வெவ்வேறு சாதி ஆதிக்கங்கள் இருந்திருக்கிறது இருக்கிறது
என்பதை மறுக்க முடியாது, அவை எதிர்க்கப்பட வேண்டியது என்பதும் மறுக்க
முடியாதது.

ஆனால் நம் கேள்வி சல்லிக்கட்டே தலித்திய விரோதமானது என்கிற பிரச்சாரம்தான்.

எனக்கென்னமோ தலித்தியம் பின்னால உக்காந்துகிட்டு பிற்படுத்தப்பட்ட
மக்களோட ஒன்றிணைய விடாத பிரிவினை கருத்தியலை என்.ஜி.ஓ அரசியலை கவனமாக
சிலர் வளர்கிற மாதிரி தெரியிது.

கவனமா இருங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக