ஞாயிறு, 19 மார்ச், 2017

மௌனவசந்தம் வெள்ளைக்கார நம்மாழ்வார் ஜப்பான்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 14
பெறுநர்: எனக்கு
Thamizhar Tamil Nadu
" SILENT SPRING "என்ற இந்த புத்தகத்தின் மூலம் பல உண்மைகளை வெளி கொண்டு
வந்ததால் இந்த புத்தகம் எழுதியவர் இலுமினாட்டிகளால் கொல்லப்பட்டார் .
அந்த புத்தகம் மௌன வசந்தம் என்று மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.
மனதை உலுக்கும் ‘மௌன வசந்தம்’!
-நம்மாழ்வார்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சுவீடன் நாட்டுப் பயணிகள் குழு ஒன்று
தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு
கிடைத்தது.
அவர்களில் ஒரு அம்மையாரின் பெயர் ரூத். நாங்கள் இருவரும் பேசிக்
கொண்டிருந்தபோது, 'உலகம் முழுவதும் உள்ளவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று
ஒரு குற்றச்சாட்டை எடுத்து வைத்தார் ரூத். குறுக்கிட்ட நான், 'எப்படி
ஒரேயடியாக இதை நீங்கள் சொல்ல முடியும்?' என்றேன்.
'பூச்சிக் கொல்லி (pesticide) என்பதையே எடுத்துக்கொள்ளு
ங்களேன்...' எனச் சொல்லி என் கண்களை நேராகப் பார்த்தார் ரூத்.
'அதற்கென்ன... பூச்சிகளைக் கொல்லும் மருந்து தானே பூச்சிக்கொல்லி'
என்றேன் நான்.
'மருந்து என்கிறீர்கள்... அதில் கொஞ்சம் நீங்கள் சாப்பிடமுடியுமா
?' என்று அவர் திகில் கிளப்பி 'அதை நீங்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும்?'
என்று கொக்கிப் போட்டார். 'விஷம் தாக்கிச் செத்து போவேன்' என்றேன்!
'நேரடியாகச் சாப்பிடும்போது அது மனிதர்களைக் கொல்லும் என்றால், அது
எப்படி 'பூச்சிக் கொல்லி'யாக மட்டுமே இருக்க முடியும். அதை உயிர்கொல்லி
என்று சொல்வதுதானே சரியாக இருக்க முடியும். இப்போது புரிகிறதா...
நாமெல்லாம் பொய்தான் சொல்கிறேம் என்று?' என்று காட்டமாகக் கேட்டார் ரூத்.
அதுமட்டுமில்லை... பூச்சிக்கொல்லியை நேரடியாக சாப்பிட்டால்தான் ஆபத்து
என்றில்லை. காய், கனி, பால், முட்டை, இறைச்சி, குடிநீர், தாய்ப்பால்
என்று எந்த வடிவிலும் அது நமது உடல் புகுந்து சிறுக சிறுக துன்பத்துக்கு
ஆளாக்கிக் கொண்டு தானிருக்கிறது.
உங்களுக்கு நரம்புத்தளர்ச்ச
ி உள்ளதா... மூச்சுத் திணறலா... சிறுநீரகத்தில் கல் அடைப்பா... கர்ப்பப்
பையில் புற்றுநோயா... இப்படி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி...
உங்கள் உடலில் கண்ணுக்குத் தெரியாமல் போய்ச் சேர்கின்ற பூச்சிக்கொல்லி
நஞ்சுக்கும் பங்கிருக்க வாய்ப்பு உண்டு. பூச்சிக் கொல்லி நஞ்சு என்பது
செடிகளிலிருந்து பசுவின் வயிற்றுக்குள் போய், பால் வழியாக நமது
உடலுக்குள் பாய்வதும் நடக்கிறது. தாய் வயிற்றுக்குள் இருந்து ரத்தம்
பெற்றோமே... அன்று தொடங்கியே நம் தாயோடுசேர்த்து நாமும் நஞ்சுண்ட
(ஆ)சாமிகள்தான்!
கேரள மாநிலத்தின் முந்திரிக்காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் 'எண்டோசல்பான்'
என்ற பூச்சிக் கொல்லி தெளிக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில்....
சுற்றுப்புறத்து ஊர்களில் பல குழந்தைகள் ஊனமாகப் பிறந்தன. இத்தனைக்கும்
அந்த முந்திரிப் பருப்பை குழந்தைகளின் தாயார் தின்னவுமில்லை,
முந்திரிக்கொல்லையில் வேலை பார்க்கவும் இல்லை. நஞ்சு கலந்த காற்றை
சுவாசித்தது,காற்று வழியே நஞ்சு படிந்த ஓடையின் நீரை குடித்ததும்தான்
பெருங்குற்றம் ஆகிப்போனது.
கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், நமது தேசத்தில் இப்படி ஆண்டுதோறும்
ஆயிரம் லட்சம் கிலோ நஞ்சை நமது பயிரிலும் நிலத்திலும், நீரிலும்,
காற்றிலும் கலந்துகொண்டே இருக்கிறோம். இப்படியெல்லாம் நடக்குமென்று
1962-ம் ஆண்டே அமெரிக்காவைச் சேர்ந்தராச்சேல் கார்சன் என்ற பெண்
எச்சரித்தார்.
கடலியல் விஞ்ஞானியான அவர் எழுதிய 'மவுன வசந்தம்' என்னும் புத்தகம் உலக
பிரசித்திப் பெற்றது. இந்தப் புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது?
அமெரிக்காவில் பனிக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கும். அந்தக் கொடுமை
தாங்காமல் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் ராபின் பறவை, வசந்தம்
பிறக்கும்போதுதான் நாடு திரும்பும். வசந்தத்துக்கு கட்டியம் கூறும் அந்த
ராபின் பறவை, அமெரிக்காவிலிருந்தே காணாமல் போக ஆரம்பித்தது. அதுவே 'மவுன
வசந்தம்' என்ற புத்தகம் பிறக்கக் காரணமானது.
1956-ம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்து நாட்டில் நடந்த சம்பவம்தான்
இப்படிஒரு நூல் பிறக்க காரணம். அந்த நாட்டின் சாலையோர மரங்களின் இலைகளை
ஜப்பான் வண்டுகள் தின்று அழித்துக்கொண்டிருந்தன.
அந்த வண்டுகளை அழிக்கபூச்சிகொல்லியை ஹெலிகாப்டர் மூலம்தெளித்தார்
கள். ஜப்பான் வண்டுகள் செத்துப் போயின. ஆனால், இன்னொரு விபரீதம்
நிகழ்ந்தது. நஞ்சு படிந்த இலைகள் உதிர்ந்தபோது, அதைத் தின்ற மண்புழுக்கள்
இறந்து போயின. மண்புழுவைத் தின்ற ராபின் பறவைகளும் இறந்து
போயின.ஹெலிகாப்டர் தூவிய நஞ்சு, நீரில் விழவே மீன்கள் அரை மரண நிலையில்
நீரோடையில் மிதந்தன.
கொடுமை இத்தோடு முடியவில்லை. மண்புழுவை உண்ட பறவைகள், கூடுகட்டவில்லை.
அதைவிட சற்றே குறைவாக மண்புழுவை உண்ட பறவைகள் கூடு கட்டின. ஆனால், முட்டை
இட்டதே தவிர அவை குஞ்சு பொறிக்கவில்லை! 13 நாட்களில் முட்டையிலிருந்து
வெளி வரவேண்டும் குஞ்சு. 21 நாளாகியும் குஞ்சு வராதது கண்டு தாய்ப்பறவை
ஏங்கிப் போனது. பூச்சிக் கொல்லி மருந்துகள் உயிரணுவை அழித்து,
உயிரினங்களை மலடாக்குகிறது என்று அப்போது கண்டறிந்தனர்.
அமெரிக்காவின் தேசியப் பறவையான வழுக்கை தலைக் கழுகும் மெல்ல மெல்ல
மறைந்து வரு வதைப் பார்த்தார்கள். இந்த விஷயங்களை எல்லாம் தான் புத்தகமாக
எழுதி உலகுக்கு வெளிப்படுத்தி அதிர வைத்தார் ராச்சேல் கார்சன்.
இதற்கு நடுவேதான்... சேற்றிலே செந்தாமரைமலர்வது போல், அமெரிக்காவில்
ரொடேல் என்கிற விவசாயி, தன் பெயரில் இயற்கை வழிப் பண்ணை ஆராய்ச்சி
நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். இன்று உலகெங்கும் வெற்றிக் கொடி நாட்டி
வரும் இயற்கை வழிப் பண்ணைக்கு முன்னோடிகள் அமெரிக்காவும் ஜப்பானும்தான்.
ஆனால், அதெல்லாம் இந்த நவீன யுகத்தில்தான்.
இவர்களுக்கெல்லாம் முன்னோடி இந்தியாதான். ஆம்... அமெரிக்க விவசாயி
ரொடேல், இயற்கை விவசாயத்தை படித்துச் சென்றதே இங்கிருந்துதான்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக