|
19/10/16
![]() | ![]() ![]() | ||
கலைச்செல்வம் சண்முகம் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Krishna
Muthukumarappan மற்றும் 3 பேர் உடன்.
செலவு குறைந்த, விரைவான சூரிய மின்னாற்றலே சிறந்தது!
அக்டோபர் 18, 2016
முனைவர் சுப. உதயகுமாரன்,ஒருங
்கிணைப்பாளர்:
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
பச்சைத் தமிழகம் கட்சி
==============================
வெறும் 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக கூடங்குளத்தில் 3
மற்றும் 4-வது அணு உலைகளுக்கு இந்திய அரசு ரூ. 39,849 கோடி செலவு செய்யப்
போகிறதாம்.
முதலிரண்டு உலைகளுக்கு முதலில் ரூ. 13,000 கோடி செலவாகும் என்று
சொன்னவர்கள் பின்னர் அதற்கு வட்டியும் சேர்த்து ரூ. 17,270 கோடி
செலவாகிவிட்டது என்று சொன்னார்கள். இறுதியாக முதலிரண்டு உலைகளுக்கு ரூ.
22,462 கோடி செலவாயிற்று என்று சொல்கிறார்கள்.
உண்மையில் அணு உலைகள் நிறுவி மின்சாரம் எடுப்பது யானையைக் கட்டி தீனி
போட்ட கதைதான். மக்கள் பணத்தை கணக்கு வழக்கு இன்றி வாரி இறைக்கிறது
மத்திய அரசு. கொள்ளை விலையில் உலைகளை வாங்கி, வெளிநாட்டவருக்கு ஆதாயம்,
உயர் அதிகாரிகளுக்கு அதிகமானச் சம்பளம், சொகுசு வாழ்க்கை, ஊதாரித்தனம்
என்றே அணு உலைகள் இயங்குகின்றன.
இன்றைய நிலவரப்படி அணுசக்தியிலிருந்து பெறும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு
ரூ. 9 முதல் ரூ. 12 வரை ஆகிறது. இதில் நிலம் கையகப்படுத்தும் செலவுகள்,
நிலையத்தை செயலிழக்கச் செய்யும் செலவுகள், அணுக்கழிவு மேலாண்மைச்
செலவுகள் போன்றவை வருவதில்லை.
ஆனால் சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலைகளில் இருந்து பெறும் ஒரு யூனிட்
மின்சாரத்துக்கு அதிகப்படியாக ரூ. 5 வரைதான் ஆகிறது.
நம்முடைய தமிழகத்திலேயே இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதியில் அதானி பசுமை
எரிசக்தி எனும் நிறுவனம் வெறும் ரூ. 4,536 கோடி செலவில் 648 மெகாவாட்
மின்சாரம் தயாரிக்கிறது.
இதன்படி பார்த்தால், கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கு
இந்திய அரசு செலவு செய்யப்போகும் ரூ. 39,849 கோடி செலவில் ஏறத்தாழ 6,௦௦௦
மெகாவாட் சூரிய மின்சாரம் தயாரிக்கலாம்.
கூடங்குளம் முதல் இரண்டு உலைகள் ஏறத்தாழ 25 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட
கதையும், அந்த உலைகள் குறித்து மத்திய அரசும், அணுசக்தி அதிகாரிகளும்
சொன்ன காலக்கெடுக்கள் எல்லாம் நமக்கு மிகவும் பரிச்சயமானவை.
இப்போது சொல்கிறார்கள் கூடங்குளம் 3-வது அணு உலை 69 மாதங்களில்
முடிவடையுமாம், 4-வது அணு உலை 75 மாதங்களில் கட்டி முடிக்கப்படுமாம்.
2022-ஆம் ஆண்டு முதல் மின் உற்பத்தி தொடங்குமாம். இந்த மாதிரி பல
அணுசக்தி கதைகளெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் யூலை 4, 2015 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முன்னால்
கையெழுத்திடப்பட்ட கமுதி சூரிய மின்னாற்றல் திட்டம் செப்டம்பர் 21, 2016
அன்று முதல்வராலேயே துவக்கி வைக்கப்பட்டது.
இந்த சூரிய மின்னாற்றல் நிலையம் ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு
உற்பத்தியையும் துவக்கியிருக்கி
றது. கூடங்குளம் அணு உலைகள் போல இருபத்தைந்து ஆண்டுகளாகக் கட்டப்படவில்லை.
லாப நோக்கம் கொண்ட அதானி எனும் தனியார் நிறுவனமே இவ்வளவு குறைந்த செலவில்
குறுகிய காலத்தில் சூரிய மின்சாரம் தயாரித்தால், அரசு ஏற்றெடுத்து
நடத்தும் திட்டம் இன்னும் குறைந்த விலைக்கு இன்னும் விரைவாக அதிக அளவில்
மின்சாரத்தை தயாரிக்க முடியும்.
அணு உலைகளுக்காக அதிக விலை கொடுத்து அந்நிய நாடுகளிடமிருந்து யுரேனியம்
வாங்க வேண்டும். சர்வதேச அரசியல் சூழல்களால் எரிபொருள் அனுப்புவதை
அவர்கள் நிறுத்தினால், தடுத்தால் அணு உலைகளை இயக்க முடியாமற் போகலாம்.
அணு உலைகளை நாற்பது வருடங்கள் ஓட்டிவிட்டு, அவற்றிலிருந்து வரும்
ஆபத்தானக் கழிவுகளை 48,000 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். அது
“சுண்டைக்காய் கால் பணம், சுமட்டுக் கூலி முக்கால் பணம்” எனும் கதையாகவே
முடியும்.
மேலும் திறமையான பேரிடர் மேலாண்மை இல்லாத நிலை, ஊழலும் ஊதாரித்தனமும்
நிறைந்த அரசியல் கலாச்சாரம் என பலப் பிரச்சினைகள் இருகின்றன. அணு
உலைகளில் விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும், அங்கிருந்து
வெளிவரும் நீரின், காற்றின் மூலமாக பெரும் உடல்நலக் கேடுகள் எழும்.
மனிதருக்கும், சுற்றுச்சூழலுக்கும் எழும் கேடுகளை யாரும்
அவதானிப்பதுமில்லை, கணக்கில் எடுத்துக் கொள்வதுமில்லை.
மத்திய அரசின் அணுமின் திட்டங்களை “குணம் நாடி, குற்றமும் நாடிப்”
பார்த்தால், குற்றங்கள்தான் அதிகம் தென்படுகின்றன.
இன்னும் சுருக்கமாகச் சொன்னால், பண விரயம், கால விரயம், உயிர் விரயம்
இவைதான் அணு உலைகளின் மறு பெயர்களாக இருக்கின்றன.
எனவே மத்திய அரசு இந்திய மக்களின் நலன்களை முன்னிறுத்தி, அணுசக்தித்
திட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்துவோம்
.
முனைவர் சுப. உதயகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்:
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
பச்சைத் தமிழகம் கட்சி
9943392086
koodankulam@yahoo.com
3 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக